Published:Updated:

உலக நாடுகள், பல மேடைகள், வாழ்வியல் ஆலோசனை... கலக்கும் கீழக்கரை ஃபஜிலா

ஃபஜிலா
பிரீமியம் ஸ்டோரி
ஃபஜிலா

சிங்கப்பூர், இலங்கை, குவைத், புருனே, அமெரிக்கா எனப் பல நாடுகளில் வாழ்வியல் ஆலோசனை உரைகள் நிகழ்த்தியிருக்கேன்

உலக நாடுகள், பல மேடைகள், வாழ்வியல் ஆலோசனை... கலக்கும் கீழக்கரை ஃபஜிலா

சிங்கப்பூர், இலங்கை, குவைத், புருனே, அமெரிக்கா எனப் பல நாடுகளில் வாழ்வியல் ஆலோசனை உரைகள் நிகழ்த்தியிருக்கேன்

Published:Updated:
ஃபஜிலா
பிரீமியம் ஸ்டோரி
ஃபஜிலா

‘`மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல... யாரும், எந்த நிகழ்வும் உடைத்துவிட்டுப் போவதற்கு. அது நம்மை இயக்கிக்கொண்டிருக்கும் மூச்சுக் காற்று!’’ - இனிய குரலில், தோழமை தொனியில் வாழ்வியல் ஆலோசகர் ஃபஜிலா ஆசாத் பேசும்போதே மொத்தக் கவலை களும் ஓட்டமெடுத்துவிடுகிறது பலருக்கும்.

உலக நாடுகள் முழுக்க சுற்றிக்கொண்டிருக்கும் ஃபஜிலா ஆசாத், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை யில் பிறந்தவர். தோல்வி, தாழ்வுமனப்பான்மை, ஆறா காயங்கள் எனப் பல்வேறு காரணங்களால் மனச்சோர் வடையும் இளைஞர்கள் வரை முதியவர்கள் வரை, ஃபஜிலாவின் வாழ்வியல் ஆலோசனை பெற்ற பின்னர் உள்ளம் பஞ்சாகி விடுகின்றனர். ஆயிரக்கணக் கானோருக்கு நம்பிக்கை கதவுகளை திறந்துவைத்துள்ள ஃபஜிலா, துபாய் உட்பட பல்வேறு நாடுகளில் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய ‘ஏபிசி மேட் ஈஸி’ நூலை பள்ளிகளுக்கு விநியோகம் செய்துள்ளது தமிழக அரசு. கவிஞர், எழுத்தாளர், ஜூவல்லரி டிசைனர், வணிக மேலாளர், பிசினஸ் ஆலோசகர், மோட்டிவேஷனல் ஸ்பீக்கர், ஹிப்னாடிச நிபுணர் எனப் பல முகங்களுக்கு சொந்தக்காரர்.

கட்டுப்பாடுகள் நிறைந்த சமூகப் பின்னணியில் பிறந்து, படிப்பை பற்றிக்கொண்டு, தன் திறனால் உலகளவில் சிறந்த வாழ்வியல் ஆலோசகராகத் திக ழும், துபாயில் வசிக்கும் ஃபஜிலாவிடம் பேசினோம்.

‘`பிறந்தது, படித்தது எல்லாம் கீழக்கரை. அப்பா ஹுசேன் அப்துல்காதர் தொழில் செய்துட்டு இருந்தார். அம்மா சுபேதா எல்லாருக்கும் உதவி செய்யக்கூடிய மனசுக்காரங்க. என் சின்ன வயசிலேயே எங்க குடும்பம் துபாயில செட்டில் ஆகிட்டாங்க. கல்லூரிப் படிப்புக்கு நான் சென்னை, கீழக்கரையில் என் பாட்டி வீடுனு தங்கி படிச்சேன். பள்ளி, கல்லூரியில முதல் மாணவி, கோல்ட் மெட லிஸ்ட், மாணவர் தலைவினு என் ஆளுமையை வளர்த்துக்கிட்டேன். பேச்சு, கவிதைனு எல்லா போட்டிகளிலும் மாவட்ட, மாநில அளவில் கலந்துக்குவேன். அதைத் தொடர்ந்து ‘நிலவு ததும்பும் நீரோடை’ என்ற கவிதை நூல் எழுதினேன். கவிஞர் வைரமுத்து அதை வெளியிட்டார். தொலைக்காட்சிகள்ல பேசி னேன். என் பேச்சு பலரிடம் போய் சேரும் என்கிற சந்தோஷம் ரொம்பப் பிடிக்கும்’’ என்பவர் துபாய் திரும்பிய பின் திருமணம் முடிந்திருக்கிறது. அவர் கணவரும் அவரது விருப்பங்களுக்கு ஊக்கம் கொடுத்திருக்கிறார்.

உலக நாடுகள், பல மேடைகள், 
வாழ்வியல் ஆலோசனை... கலக்கும் கீழக்கரை ஃபஜிலா

‘`என் அப்பா, நண்பர்கள், உறவினர்கள்னு பலரோட பிரச்னைகளை பேசியே தீர்த்து வைக்கிறதை என் சின்ன வயசுல பார்த்திருக் கேன். சொல்லப்போனா நானும் அப்போவே, பகையா பேசுற உறவினர்கள்கிட்டயும் இணக்கமா பேசி அவங்க அன்பை பெறுவேன். இப்படி, உளவியல் அப்போவே எனக்கு பிடிச்ச விஷயமா இருந்திருக்கு. 90-கள்ல, பேராசிரியர் பெரியார்தாசன் என்று அன் போடு அழைக்கப்படுற அப்துல்லா துபாய் வந்திருந்தப்போ, அவர் பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இந்தியா வந்தப்போ அவரை சந்தித்தேன். அவருடைய நூலகத்துல தங்கியிருந்து பல நூல்களை வாசிச்சேன். அவர்கிட்ட ஹிப்னாடிசம் கத்துக்கிட்டேன். அவர் தன் வாரிசுனு என்னை சொல்றது பெருமையா இருக்கும். `சமூகத்துல பல பிரச்னைகளை சந்திச்சு வர்றாங்க பெண்கள். அவங்க மனசுக்கு நெருக்கமா பேசுற ஆலோ சனையாளர்கள் குறைவா உள்ளாங்க. அவங் களுக்கு எல்லாம் ஹீலிங் தேவைப்படுது, அந்தப் பணியை நீ செய்யணும்’னு என்னை இந்த திசையில் அனுப்பினது அவர்தான். அவருடைய வழிகாட்டலில் ஜெர்மன், மெக்ஸிகோ, சிங்கப்பூர், துபாய்னு பல நாடு களில் உளவியல் கல்வியை தேடித் தேடிப் படிச்சேன். இப்படித்தான் என் வாழ்வியல் ஆலோசனைப் பயணம் தொடங்கியது.

சிங்கப்பூர், இலங்கை, குவைத், புருனே, அமெரிக்கா எனப் பல நாடுகளில் வாழ்வியல் ஆலோசனை உரைகள் நிகழ்த்தியிருக்கேன். இலங்கை தொலைக்காட்சிகள்ல தொடர்ந்து ஆலோசனை வழங்கியிருக்கேன். ஆனாலும், நான் பிறந்த ராமநாதபுரம் மாவட்டம் மேல என் அக்கறை எப்பவும் இருக்கும். அங்க பல பகுதிகள் அரசால் கவனிக்கப்படாம இருக்கு. உதாரணமா, கீழக்கரையில் அரசு மேல்நிலைப் பள்ளி இல்லை. அந்த மக்களின், பெண்களின் வாழ்வு முன்னேற அரசு, சமூகம், இந்தப் பகுதியில் இருந்து இன்று உலகம் முழுக்க சென்று பல துறைகளிலும் வெற்றியாளர்களா இருக்கும் தனிநபர்கள்னு எல்லாரோட பங்களிப்பும் வேணும். அந்த வகையில்தான், இந்தப் பகுதி மாணவர்களுக்கு என் தன்னம் பிக்கை உரை சேரும் வகையில் பங்களிச்சுட்டு வர்றேன்’’ என்றவர் சிங்கப்பூர், துபாய் என உறவினர்களின் எக்ஸ்போர்ட் நிறுவனங்களில் மேலாளர் பொறுப்பிலும் இருந்திருக்கிறார்.

பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசும்போது, ``என் பார்வையில் அனைத்து மதங்களும், புராணங்களும் பெண்களை உயர்வாகத்தான் குறிப்பிடுது. பெண்களை போற்றுது. பெண்கள் மீதான அக்கறையினால் கட்டுப்பாடுகள் போட்டிருக்கலாம். அதே நேரம், `என்னால் முடியும்’னு எழுந்து வரும் பெண்களை ஊக்கப்படுத்துது. பெண்கள் மட்டுமில்ல, ஆண்களும் தன்னம்பிக்கையுடன் இருக்கணும். எல்லாரும் தன்னைத் தானே லவ் பண்ணணும். தன்னைப் பற்றிய குறை, நிறைகளை மதிப்பீடு செய்யணும்.

நம் முன்னேற்றத்தின் மூலம் மற்றவர் களையும் முன்னேற்ற முடியும். அந்த வகையில், பலராலும் பாராட்டப்பட்ட என்னோட ‘திறந்திடு மனசே’ நூல் மூலம் வாழ்க்கையை மாற்றிக்கொண்டவங்க எனக்கு சொன்ன நன்றிகள்தான் நான் பெற்ற விருது களில் சிறந்தது!” - நிறைவுடன் சொல்கிறார் ஃபஜிலா ஆசாத்.