Published:Updated:

``கல்வியே தலைமுறையை மாற்றக்கூடிய ஆயுதம்!” - அரசுப்‌ பள்ளியில் ‌படித்து ஐ.ஏ.எஸ் ஆன வெற்றிச்செல்வி

வெற்றிச்செல்வி ஐ.ஏ.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
வெற்றிச்செல்வி ஐ.ஏ.எஸ்

யுபிஎஸ்சி தேர்வில் என்னுடைய இரண்டாவது முயற்சியில், 2014-ம் ஆண்டு வெற்றி பெற்றேன். முதல் முயற்சியில் நேர்காணல் வரை சென்று, 20 மதிப்பெண்ணில் தவறவிட்டேன்.

``கல்வியே தலைமுறையை மாற்றக்கூடிய ஆயுதம்!” - அரசுப்‌ பள்ளியில் ‌படித்து ஐ.ஏ.எஸ் ஆன வெற்றிச்செல்வி

யுபிஎஸ்சி தேர்வில் என்னுடைய இரண்டாவது முயற்சியில், 2014-ம் ஆண்டு வெற்றி பெற்றேன். முதல் முயற்சியில் நேர்காணல் வரை சென்று, 20 மதிப்பெண்ணில் தவறவிட்டேன்.

Published:Updated:
வெற்றிச்செல்வி ஐ.ஏ.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
வெற்றிச்செல்வி ஐ.ஏ.எஸ்

‘நான் ஐ.ஏ.எஸ் ஆகணும்’ என்று குழந்தைப் பருவத்தில் ஒருமுறையேனும் நினைக்காதவர்கள் அரிது. அந்தக் கனவை நனவாக்குபவர்கள் கோடிகளில் ஒருவர். அப்படி, சிறு வயதில் தனக்கு எதிர்கால லட்சியமாக இருந்த ஐ.ஏ.எஸ் பதவியை இன்று நிகழ்காலமாக்கி இருக்கிறார், வெற்றிச்செல்வி ஐ.ஏ.எஸ். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ள சூரக்குடி என்னும் கிராமத்தில் பிறந்தவர். மூன்று வயதில் தந்தையின் பணி காரணமாக சென்னைக்கு குடி பெயர்ந்தனர். பள்ளிக்கல்வி முதல் கல்லூரி வரை சென்னையில்தான் படித்தார்.

எட்டு வருட ஆட்சியர் பணியில், இப்போது ஆந்திராவின் கல்வித்துறைக்கு ஆலோசனை வழங்கிக்கொண்டிருப்பவர், அரசுப் பள்ளியில் படித்தவர் என்பது சிறப்பு. அவரிடம் பேசினோம்.

``என் அப்பா சிறு வயதில் ஒரு சம்பவம் பற்றி அடிக்கடி கூறுவார். அப்பாவின் இளமைக் காலத்தில், அவர் ஊரில் ஒருமுறை வெள்ளம் ஏற்பட்டபோது, அங்கு வந்த அதிகாரிகளில் ஒரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிறப்பாகச் செயல் பட்டது குறித்து, பலமுறை வியந்து, ரசித்துக் கூறியிருக்கிறார். அந்தப் பெண் அதிகாரியின் தைரியம், கம்பீரம், வெள்ள பாதிப்பை சரிசெய்ய அவர் எடுத்த நடவடிக்கைகளை எல்லாம் ஒரு சூப்பர் வுமன் கதைபோல அவர் சொல்லச் சொல்ல, நானும் அப்படி ஒரு கலெக்டர் ஆக வேண்டும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஆழமாக விழுந்தது. பெற்றோர் ஊக்கப்படுத்த, அந்தப் பயணத்தை ஆரம்பித்தேன்.

``கல்வியே தலைமுறையை மாற்றக்கூடிய ஆயுதம்!” - அரசுப்‌ பள்ளியில் ‌படித்து ஐ.ஏ.எஸ் ஆன வெற்றிச்செல்வி

யுபிஎஸ்சி தேர்வில் என்னுடைய இரண்டாவது முயற்சியில், 2014-ம் ஆண்டு வெற்றி பெற்றேன். முதல் முயற்சியில் நேர்காணல் வரை சென்று, 20 மதிப்பெண்ணில் தவறவிட்டேன். அடுத்த முயற்சியில் இந்திய அளவில் 143 ரேங்க் கிடைத்தது. குறிப்பாக, `மனிதநேயம் அகாடமி’யில் நடந்த தகுதி எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, முற்றிலும் இலவச மாகப் பயிற்சி பெற்றேன். எல்லாவற்றுக்கும் மேலாக, நான் படித்த சென்னை கார்ப்பரேஷன் பள்ளியான வீனஸ் பள்ளிக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். என்னைப்போல அரசுப் பள்ளி யில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு, அரசுப் பள்ளியில் படித்து ஐ.ஏ.எஸ் ஆகலாம் என்பதற்கு இன்று நான் உதாரணமாக நிற்பதில் மிகவும் பெருமையும் மகிழ்வும்’’ என்பவர், இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்திருக்கிறார்.

``தற்போது ஆந்திர மாநிலத்தில் பள்ளிக் கல்வித்துறையில் மாநிலக் கல்வி இயக்குநர் (State Project Director - Samagra Shiksha) பொறுப்பில் உள்ளேன். தவிர அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை மேம் படுத்துவதில் சிறப்பு அதிகாரியாகவும் என்னை நியமித்துள்ளார்கள். கல்வியே ஒரு தலைமுறையை மாற்றக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் என நான் நம்புகிறேன். அத்தகைய கல்வித்துறையில் என்னால் முடிந்த பங்களிப்பைச் செய்து வருகிறேன்’’ என்பவர், தனது எட்டாண்டு பணியில் மிகவும் சவாலானது, கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டம் தான் என்கிறார்.

‘`பெருந்தொற்று தொடங்கிய காலத்தில்தான் நான் கல்வித்துறை மாநில இயக்குநராக நியமிக்கப்பட்டேன். அப்போது எனக்கு இருந்த பெரிய பொறுப்பு, பாடப்புத்தகங்களை புதிதாக மேம்படுத்துவது. இரு மொழி பாடப்புத்தகத்தையும் அறிமுகம் செய்ய வேண்டும். அதாவது, புத்தகத்தில் ஒரு பக்கம் தெலுங்கில் இருக்கும்; அடுத்த பக்கம் ஆங்கிலத்தில் இருக்கும். 1 - 7-ம் வகுப்புவரை கிட்டத்தட்ட நூறு பாடப் புத்தகங்களை புதிய தகவல்களுடன் மேம்படுத்த வேண்டிய சூழல். கோவிட்-19 தொற்றுக்காலத்தில் இவற்றையெல்லாம் செய்வது இரண்டு மடங்கு சவாலாக இருந்தது. நேரடி வொர்க்‌ஷாப்களை நடத்த முடிய வில்லை; வெளிநாட்டு வல்லுநர்களை நேரில் அழைத்து ஆலோசனை கேட்க முடியவில்லை. என்றாலும், உரிய நேரத்தில் புத்தகங்களைத் தயார் செய்து மாணவர்களிடம் சேர்த்தோம்’’ என்று பெருமையுடன் சொல்பவர், இளைய தலைமுறைக்கு சொல்லும் டிப்ஸ்:

``ஐ.ஏ.எஸ் ஆக மூன்று விஷயங்கள் அவசியம். கடின உழைப்பு, முயற்சியில் நேர்மை, அர்ப்பணிப்பு. இதில் சமரசமே கூடாது.''

ரெடியா தங்கங்களா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism