Published:Updated:

அடங்க மறு: 13 - கலாசார காவலர்களை எச்சரித்த உள்ளாடைப் போராட்டம்!

அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி | ஓவியம்: ஜீவா

அடங்க மறு: 13 - கலாசார காவலர்களை எச்சரித்த உள்ளாடைப் போராட்டம்!

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி | ஓவியம்: ஜீவா

Published:Updated:
அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு
கே.சாந்தகுமாரி
கே.சாந்தகுமாரி

இணைந்த கைகள்... தகர்ந்த தடைகள்...

கலாசார காவலர்கள் என்று தங்களைக் கருதிக்கொள்கிற ஆண்கள், அந்தக் கலாசாரத்தை பெண்கள்தான் கட்டிக் காப்பாற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்... என்ன வொரு நகைமுரண்..?

2009-ம் வருடம், பிப்ரவரி மாதம். மங்களூருவில் இருந்த அம்னீஷியா (Amnesia) லவுஞ்ச் பப்பில், தங்கள் நண்பர் களோடு பேசிக்கொண்டிருந்தார்கள் சில பெண்கள். திடீரென அந்த பப்புக்குள் நுழைந்த ஸ்ரீராம் சேனா அமைப்பினர், அந்தப் பெண்களை தரதரவென சாலைக்கு இழுத்து வந்து அடித்து உதைத்தார்கள்; கெட்ட வார்த்தை களால் திட்டியபடி அவர்களுடைய ஆடைகளைப் பிடித்திழுத்து பாலியல் அத்துமீறல் செய்தார்கள்.

‘அந்தப் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள். இந்திய கலாசாரத்தை மீறி விட்டவர்கள். பப்புக்குள் அவர்கள் ஆண்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தார்கள்’ என்று சொல்லி, தங்கள் செயலை நியாயப்படுத்த முயன்றார்கள்.

‘அய்யோ... எங்கள் நண்பர்கள்தான் மது அருந்திக் கொண்டிருந்தார்கள். நாங்கள் பழச்சாறு அருந்தியபடிதான் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம்’ என்ற கதற, அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல், அவர்களுடைய மேலாடையைக் களைய முனைவதிலேயே கவனமாக இருந்தார்கள் அந்தக் கலாசார காவலாளிகள்?! இவ்வளவும் சில தொலைக்காட்சி கேமராக்களின் முன்னிலையிலே நடைபெற்றன என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

அடங்க மறு: 13 - கலாசார காவலர்களை எச்சரித்த உள்ளாடைப் போராட்டம்!

இந்தச் சம்பவத்தின் வீடியோ பதிவுகள் தொலைக்காட்சி செய்திகளில் வெளிவர, ஸ்ரீராம் சேனாவின் மோசமான நடத்தையைக் கண்டு இந்தியாவே அதிர்ந்தது. நாடெங் கிலுமுள்ள பெண்களும், பெண்களை மதிக்கிற ஆண்களும் கொதித்தெழுந் தார்கள். ‘கலாசார காவலன் பணியைச் செய்யும் அதிகாரத்தை ஸ்ரீராம் சேனாவிற்கு யார் அளித்தது, யார் மது அருந்தலாம்; யார் மது அருந்தக்கூடாது என்பதை நிர்ணயிக்கிற உரிமையை ஸ்ரீராம் சேனாவுக்கு யார் தந்தது’ என்ற அவர்களுடைய கேள்விகள், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சமூகத்தின் செவிகளை அறைந்தன. இதற்கிடையே, தேசிய பெண்கள் ஆணையத்தின் பொறுப்பாளர் ஒருவர், ‘அந்தப் பெண் கள் அணிந்திருந்த உடைகள்தான் அவர்களைத் தாக்குவதற்கு காரணமாக இருந்தன’ என்று கருத்துசொல்லி, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினார்.

அம்னீஷியா லவுஞ்ச் பப் சம்பவம் நடந்த ஒரு வாரத்தில், ஸ்ரீராம் சேனாவின் தலைவர் முத்தலிக் (Muthalik), ‘காதலர் தினத்தன்று எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மஞ்சள் கயிற்றுடன் ஒரு புரோகிதரையும் அழைத்தபடி வீதி வீதியாக வருவார்கள். அவர்கள் கண் களில்படுகிற காதல் ஜோடிகளை அருகே இருக்கும் கோயிலுக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து வைப்பார்கள்’ என்று அறிவித்தார். இதையடுத்து, பெங்களூரு காவல்துறை முத்தலிக்கையும் அவரது அமைப்பைச் சேர்ந்த 140 பேரையும் கைது செய்தது.

அம்னீஷியா லவுஞ்ச் பப் சம்பவத்தை எதிர்த்து ஃபேஸ்புக்கில், `பப்புக்கு போகிற சுதந்திரமான / கட்டற்ற முற்போக்கு பெண்கள் கூட்டமைப்பை’ (Consortium of Pub-going, Loose and Forward Women) ஆரம்பித்தார் டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் நிஷா சூசன் (Nisha Susan).

வலதுசாரி தீவிரவாதிகளின் கருத்து களை எதிர்த்து வன்முறையற்ற வழியில் ‘பிங்க் சாடி’ (உள்ளாடை) போராட் டத்தை முன்னெடுத்த அந்த அமைப் பினர், ஸ்ரீராம் சேனாவின் பிற் போக்குத்தனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதன் தலைவர் முத்தலிக் குக்கும், ஸ்ரீராம் சேனாவின் தலைமையகத்துக்கும் பெண்களின் பிங்க் நிற உள்ளாடைகளை அனுப்பி வைத்தனர். இது உலகளவில் கவனம் பெற்றது.

இதன் பிறகும் கலாசாரத்தைக் காரணம் காட்டி பெண்களிடம் பாலியல் அத்துமீறல் செய்யும் ஆண்களின் வக்கிரம் ஓயவில்லை. 2017- ம் வருட புத்தாண்டன்று, காத லனோடு வெளியே சுற்றிய பெண்கள் மீதும், பப்புகளில் இருந்து வெளியே வந்த பெண்கள் மீதும் காட்டு மிராண்டித்தனமான பாலியல் அத்து மீறல்கள் நடத்தப்பட்டன. கட்டி யணைப்பது, முத்தமிடுவது, மார்பகங் களைக் கசக்குவது, அவர்களுடைய உடைகளுக்குள் கையைவிட்டு துழாவுவது என ஆண்கள் கூட்ட மொன்று நடத்திய வெறியாட்டமும், அவர்களிடமிருந்து தங்கள் தோழி களையும், காதலிகளையும் காப்பாற்ற முயன்ற ஆண்களின் போராட்டமும், பாதிக்கப்பட்ட பெண்கள் கதறியபடி அங்கிருந்த காவல்துறையினரிடம் அடைக்கலம் தேடிய அவலமும் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாக, உலகமே அந்தக் கொடுமை யைப் பார்த்தது. ஆனால், பெங்களூரு காவல்துறை அதிகாரிகள், ‘ஊடகங்கள் சிறிய விஷயத்தை மிகைப்படுத்தி விட்டன. தான் பாதிக்கப்பட்டதாக எந்தப் பெண்ணும் புகார் அளிக்க வில்லை’ என்றனர்.

அடங்க மறு: 13 - கலாசார காவலர்களை எச்சரித்த உள்ளாடைப் போராட்டம்!

இந்த இடத்தில் கேரளாவில் நடந்த சில கலாசார காவல் சம்பவங்களும், அவற்றுக்கான எதிர்வினைகளும் எனக்கு நினைவுக்கு வருகின்றன. 2014-ம் ஆண்டு, ஒரு நடிகை, தன் ஆண் நண்பருடன் இரவில் பயணம் செய்து கொண்டிருந்தார். இடைமறித்த காவல் துறையினர் அவர்களை தங்கள் கஸ்டடியில் வைத்தனர். தங்கள் நண்பரோடு நடந்து சென்ற பெண்களை இடைமறித்து, அவர் கள் மணமானவர்களா என்பதையறிய தாலியைக் காட்டச் சொல்லி காவல் துறையினர் கேட் டதும் நடந்தது. கண்ணூரில், கணவர் ஏ.டி.எம்மிலிருந்து பணம் எடுத்து வரும் வரை பேருந்து நிலையத்தில் அமர்ந் திருந்த பெண்ணை, சந்தேகப்பட்டு அடித் துத் துன்புறுத்தியதும் நிகழ்ந்தது. இந்த `கலாசார காவலை’ எதிர்த்து கேரளா முழுவதிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

காங்கிரஸ் கட்சியின் பின்புலத்துடன் திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் ஜெய்ஹிந்த் சேனல், கோழிக்கோட்டிலுள்ள `டௌன் டவுன் கஃபே'யில் (Down Town Cafe) ஒழுக்கக்கேடான சம்பவங்கள் நடப்பதாக செய்தி வெளியிட்டதோடு, ஆண்களும் பெண்களும் கட்டியணைத்தபடியும், முத்தமிட்டபடியும் இருந்த வீடியோவையும் வெளியிட்டது.

அன்றைய தினமே அந்த உணவகத்தைச் சூறையாடியது பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா. இந்தச் சம்பவத்தை எதிர்த்தும், கலாசார காவல் செயல்களை எதிர்த்தும் ‘சுதந்திர சிந்தனையாளர்கள்’ என்ற அமைப்பு முக நூலில் ‘காதலின் முத்தம் அல்லது அன்பின் முத்தம்’ (kiss of love) என்ற பக்கத்தைத் தொடங்கியது. இந்தப் பக்கத்துக்கு ஆதரவு தெரிவித்த இளைஞர்கள், கொச்சியின் மரைன் டிரைவில் திரண்டு ஒருவருக்கொருவர் கட்டியணைத்தும், முத்தம் கொடுத்தும் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டம் இந்தியாவின் பல மாநிலங்களிலும் பரவியது. விளைவு, ஹைதரா பாத் பல்கலைக்கழகம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், கொல்கத்தாவின் பிரசிடென்சி பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம், ஐஐடி சென்னை மற்றும் மும்பை, ஜாதவ் பல்கலைக்கழகம் ஆகிய வற்றில் படித்து வந்த மாணவர்களும் முத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு எதிராக, பல கட்சிகளைச் சேர்ந்த வலதுசாரி பிற்போக்காளர்களும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இறுதியாக, ’முத்தப் போராட்டத் தைத் தடைசெய்ய வேண்டும்’ என்று வழக்குப் போடப்பட்டது.

உச்ச நீதிமன்றமும், டெல்லி உயர் நீதி மன்றமும் ‘பொதுவெளியில் முத்தமிடுவது, ஆபாசம் என்ற வரையறைக்குள் வராது. எனவே, அச்செயலைச் செய்யும் நபர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள முடியாது’ எனத் தெளிவாக அறிவித்தன.

மாறிவரும் காலத்துக்கேற்ப மாற விரும்பும் பெண்களை, தாங்கள் விரும்பும் கலாசார வட்டத்திற்குள் இருக்கவைக்க முயற்சி செய் வது இனி இயலாத காரியம் என்பதை அனை வரும் உணர வேண்டும். அப்படி இருக்கவைக்க நினைப்பது மனித உரிமை மீறலும்கூட.

- போர் தொடரும்...

தொகுப்பு: ஆ.சாந்தி கணேஷ்