Published:Updated:

அடங்க மறு - 5 - துர்கா பூஜை குங்குமம்... கைம்பெண் முதல் திருநங்கை வரை கிடைத்த சிவப்பு!

அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு

இணைந்த கைகள்... தகர்ந்த தடைகள்...

அடங்க மறு - 5 - துர்கா பூஜை குங்குமம்... கைம்பெண் முதல் திருநங்கை வரை கிடைத்த சிவப்பு!

இணைந்த கைகள்... தகர்ந்த தடைகள்...

Published:Updated:
அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி, ஓவியம்: ஜீவா

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

#NoConditionsApply ‘நிபந்தனைகள் ஏதுமில்லை’ என்ற அர்த்தமுள்ள இந்த ஹேஷ்டேக், 2017-ம் ஆண்டில் நம் நாடு முழுக்க வைரலாகிக் கொண்டிருந்தது. இது, ‘இதுவரை கேள்விப்படாத ஒரு விஷயமாக இருக்கிறதே’ என்கிற ஆச்சர்யத்தை எனக்குள் ஏற்படுத்தவே, அதுகுறித்த தேடுதலில் இறங்கினேன். பெண் களுக்கு எதிரான ஒரு நடைமுறையை மாற்ற முனைந்த புதுமைப்பெண்கள் பலருடைய முயற்சி அது என்பது அப்போதுதான் தெரிய வந்தது. பெண்களுக்கு எதிராக எண்ணற்ற விஷயங்கள் இங்கே இன்னமும் உயிர்ப்போடு தான் இருக்கின்றன. அதில் ஒன்று... குங்குமத் திருவிழா கட்டுப்பாடுகள்!

நவராத்திரி, தசரா என்று வெவ்வேறு பெயர் களில் துர்கா பூஜை நாட்டின் பல மாநிலங் களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் ‘துர்கா பூஜை’ என்கிற பெயரில் பத்து நாள்கள் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. 400 ஆண்டுகளுக்கு முன் பிருந்தே இந்த துர்கா பூஜை கொண்டாடப்படுவ தாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், கடந்த 200 ஆண்டுகளுக்கு முன், ஜமீன்தார்கள் தங்கள் வீடுகளில் துர்கா பூஜையைச் செய்ய ஆரம்பித்த பிறகே, அனைத்து மக்களும் அந்த பூஜை விஷ யத்தில் ஈர்க்கப்பட்டனர் என்கின்றன வரலாற்று ஆவணங்கள்.

அடங்க மறு - 5 - துர்கா பூஜை குங்குமம்... கைம்பெண் முதல் திருநங்கை வரை கிடைத்த சிவப்பு!

மேற்கு வங்கப் பெண்கள் ஒவ்வொரு வருடமும் துர்கா பூஜையின் இறுதி நாளன்று, கணவரின் நீண்ட ஆயுளுக்காகப் பூஜை செய்வது வழக்கம். சிவப்பு கரையிட்ட வெண்ணிற சேலை உடுத்தி, சங்கு, பவளம் மற்றும் எஃகு வளையல்கள் அணிந்திருப்பார்கள். குங்குமத்தை அள்ளி துர்காவின் சிலையில் பூசி, ஒருவருக்கொருவர் நெற்றியில் பொட் டிட்டு துர்கையை வணங்குவார்கள். தங்கள் வகிட்டிலும், நெற்றியிலும் குங்குமம் வைத்துக்கொள்வதோடு, மற்ற பெண்களுடைய முகத்திலும் தீட்டி மகிழ்வார்கள். இதுவே ‘குங்குமத் திருவிழா’ என்றும் அழைக்கப்படுகிறது.

பெண்களின் திருவிழா என்றாலும், அனைத் துப் பெண்களும் இதில் பங்கேற்க முடியாது என்பதுதான் கொடுமை. கணவனுடைய நீண்ட ஆயுளுக்காகப் பூஜை செய்யும் பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். குங்குமம், திருமணத்துடன் தொடர்புடையது; வகிட்டில் வைக்கப்படும் குங்குமம், கணவனால் வழங்கப்பட்டது என்று காலங்காலமாக நம்ப வைக்கப்பட்டிருப்பதுதான் இதற்குக் காரணம்.

கணவனை இழந்த பெண்கள், வெண்ணிற ஆடை அணிய வேண்டும்; குங்குமம், மஞ்சள் போன்ற வண்ணங்களையும் பயன்படுத்தக் கூடாது என்றெல்லாம் பழைமைச் சமூகம் தடை போட்டு வைத்திருக்கிறது. காலம் ஓரளவுக்கு மாறிவிட்டது என்றாலும், மங்கல காரியங்கள் என்று நினைக்கும் நிகழ்வுகளில் கணவனை இழந்த பெண்களை ஒதுக்கி வைக்கும் வழக்கம் முழுமையாக ஒழிந்துவிட வில்லை. ‘கைம்பெண்ணாக இருக்கும் நாம், திருமணம் போன்ற நிகழ்வுகளில் முன் நிற்கக் கூடாது’ என்று சம்பந்தப்பட்ட பெண்களே நினைக்கும் அளவுக்கு, அவர்களுடைய மூளைக்குள் தவறான விஷயங்கள் புகுத்தப் பட்டுவிட்டன.

 கே.சாந்தகுமாரி
கே.சாந்தகுமாரி

‘பெண்கள் பிறந்ததே ஆண்களுக்காக’ என்ற எண்ணம்கொண்ட இந்தச் சமூகத்தைப் பொருத்தவரை, ‘கணவனை இழந்த பெண்கள்... அடையாளமற்றவர்கள்; துர்கா பூஜையின் போது ஒதுக்கி வைக்கப்பட வேண்டி யவர்கள்’. இந்த விதியை மாற்றுவதற் காகவே உருவாக்கப்பட்டதுதான் #NoConditionsApply ஹேஷ்டேக். ‘எஃப்.சி.பி யுல்கா ஃபெமினிஸ்ட்’ (FCB Ulka feminist) என்ற விளம்பரக் குழுவைச் சேர்ந்த பெண்ணிய சிந்தனையாளர்களான சுவாதி பட்டாச்சார்யா, கவிதா கட்கரி, ஆர்த்தி பசாக், ரூடா பட்டேல் ஆகியோர்தான் இதை உருவாக்கியவர்கள். சோஹினி சென்குப்தா, ரிதுபர்ணா சென் குப்தா, கார்கி ராய்சௌத்ரி, திருநங்கை மனோபி பந்தோபாத்யாய் ஆகியோர் இதை வைரலாக்கினார்கள். குங்குமத் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்ட பெண்களின் கண்ணீர் காணொளி ஒன்றும் இத்துடன் சேர்ந்து வைரலானது.

‘மழித்த தலையும், வெண்ணிற உடையும், மசாலா இல்லாத உணவோடும் நான் தனித்து வாழ்கிறேன். கைவிடப்பட்ட பூனை மட்டுமே என் சிநேகிதன். என்ன தவறிழைத்தேன் நான்’ - கணவனை இழந்த பெண் ஒருவர் அந்தக் காணொளியில் கேட்டபோது, என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

‘கொல்கத்தாவில் நான் ஆணாகப் பிறந்தேன்; முன்பையில் பெண்ணாக வாழ்கிறேன்... இதில் என்னுடைய தவறென்ன, துர்கா பூஜையில் எனக்கு ஏன் இடமில்லை’ என்று கேள்வி எழுப்புகிறார் திருநங்கை ஒருவர்.

‘என்னுடைய கருப்பையில் சீழ்க்கட்டிகள் இருப்பது தெரிந்ததும் என்னைவிட்டுப் போய் விட்டார் என் கணவர். என்ன செய்யட்டும் நான்’ என அந்தக் காணொளியில் கேள்வி எழுப்பிய பெண்ணுக்கும், துர்கா பூஜையில் அனுமதியில்லை.

‘பூப்படையும் முன்னரே பாலியல் தொழில் செய்ய விற்கப்பட்டவள் நான். எண்ணிலடங்கா என் கணவர்கள் குறித்த பட்டியலை அறிவதற்கு நீங்கள் விரும்ப மாட்டீர்கள்’ என்று யதார்த்தத் தைத் தோலுரித்துக் காட்டிய பெண்ணுக்கும் குங்குமத் திருவிழாவில் இடமில்லை.

பல நூற்றாண்டுகளாகப் பெண்கள் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதனால் தான், ‘நாம் நீண்ட ஆயுளோடு வாழ நம் கணவர்கள் ஏதாவது விரதம் இருக்கிறார்களா’ என்ற சிந்தனையோ, கேள்வியோ இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தப்பித்தவறி, ஒரு பெண்ணுக்கு இப்படிப்பட்ட சிந்தனை எழுந்துவிட்டாலும் அவளை மோசமான வார்த்தைகளால் அவமானப்படுத்துகிற வேலையை, சக பெண்களை வைத்தே செய்து விடுகிறது இந்தச் சமூகம். குங்குமத் திருவிழா விலும் இப்படித்தான். சக பெண்கள் மூலமே கணவனை இழந்தவர்கள், கணவனால் துரத்தப்பட்டவர்கள், திருநங்கைகள், தன் பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் பாலியல் தொழிலாளிகளை விலக்கி வைத்திருந்தார்கள்.

‘நிபந்தனைகள் ஏதுமில்லை’ என்கிற அந்த ஹேஷ்டேக் ஓர் இயக்கமாகவே மாறி, உல கெங்குமுள்ள முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்களை ஒன்றிணைத்தது. 2018-ல் ‘இன் னொரு சகோதரியை அழைத்து வாருங்கள்’ (#BringaSisteralong) என்ற மற்றுமொரு ஹேஷ் டேக்கும் உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டு, எனக்கொரு பொட்டு, இதுவரை துர்கா பூஜை யில் ஒதுக்கி வைக்கப்பட்ட என் சகோதரிகளுக் காக ஒரு பொட்டு என்ற அர்த்தத்தில் துர்கா பூஜையில் கலந்துகொண்ட பெண்கள் தங்கள் நெற்றியில் இரண்டு குங்குமப் பொட்டுகளை வைத்து விழாவைக் கொண்டாடினார்கள். இதிலிருந்து, குங்குமத் திருவிழா ‘இரட்டைப் பொட்டுத் திருவிழா’ என்று அழைக்கப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக வெண்ணிற ஆடை யும் குங்குமமில்லா நெற்றியுமாய் வலம் வந்த பெண்களின் நெற்றியிலும் முகத்திலும் கடந்த சில ஆண்டுகளாக குங்குமம் தீட்டி துர்கா பூஜையைக் கொண்டாடுகிறார்கள் நம் சகோதரிகள். ‘சக பெண்களை தனிமையில் விடுவது, அவர்களுக்கு வண்ணங்களை மறுப் பது போன்றவற்றுக்கு இனி துர்கா பூஜையில் இடமில்லை’ என்று உரக்கச் சொல்லும் இப்பெண்கள், புதிய வரலாறு படைத்திருக் கிறார்கள். ஒதுக்குதல் இனி இல்லை, இணைத் தல் மட்டுமே என்று உணர்த்தியிருக்கிறது ‘நிபந்தனைகள் ஏதுமில்லை’ ஹேஷ்டேக்.

உரிமைகளுக்காகப் புயலெனப் புறப்பட் டிருக்கும் புதுயுகப் பெண்களோடு இணைந் திருப்போமா... நிபந்தனைகள் ஏதுமின்றி!

- போர் தொடரும்...

தொகுப்பு: ஆ.சாந்தி கணேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism