Published:Updated:

மகளிர் தினம் கொண்டாடினால் மட்டும் போதுமா?

Representational Image

பெண்கள் நலன் கருதும் சில புதிய சிந்தனைகளை #MyVikatan வாயிலாக முன் வைக்கிறார் வாசகி நாக சரஸ்வதி.

மகளிர் தினம் கொண்டாடினால் மட்டும் போதுமா?

பெண்கள் நலன் கருதும் சில புதிய சிந்தனைகளை #MyVikatan வாயிலாக முன் வைக்கிறார் வாசகி நாக சரஸ்வதி.

Published:Updated:
Representational Image

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மகளிர் தினத்தை முன்னெடுக்கும் மார்ச் மாதத்தில் அடியெடுத்து வைக்கிறோம். வெறும் கொண்டாட்டங்களுடனும் வாழ்த்துகளுடனும் நின்று விடாமல் சிறுமிகள் மற்றும் பெண்கள் நலன் கருதும் சில புதிய சிந்தனைகளையும் முன் வைப்போம்.

1. தற்காப்பு பயிற்சி

ஏதேனும் அசம்பாவிதம் நிகழும்போது மட்டும் பெண் பிள்ளைகள் பாதுகாப்பு பற்றி ஆவேசத்துடன் அக்கறைப்படாமல் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கான விடைகள் பற்றி சிறிது யோசிக்க முயல்வோம்.

கடந்த காலங்களில் பெண் பிள்ளைகளை படிக்க பள்ளிக்கு அழைத்து வந்தோம். பாடங்கள் தாண்டி வெளியுலகம் பார்த்திட வழிவகை செய்து கொடுத்தோம். அந்தப் பள்ளிக்கூடங்களில் வாரம் நாற்பது மணி நேரம் தோராயமாக செலவழிக்கிறார்கள். அதில் ஒரு மணி நேரம் பெண் பிள்ளை பாதுகாப்பு வகுப்பாக மாற்றி பெண்களுக்குத் தேவையான தற்காப்புப் பயிற்சி, சவால்களை எதிர்கொள்ளும் பயன்பாட்டு வழக்குகள் - அதைப் பற்றிய அறிவு (USECASES) மற்றும் எதிர் பாலினத்தவரை கையாளும் உளவியல் கலைகளை மாணவியருக்கு வழங்கலாம்.

Representational Image
Representational Image

அதே சமயம் மாணவர்களுக்கும் அதே ஒரு மணி நேரத்தில் பெண் பிள்ளைகள் முக்கியத்துவம், அவர்கள் மேற்கொள்ளும் இன்னல்கள், அவர்களுக்காகக் குரல் கொடுக்கும் ஊடகங்கள் மற்றும் எதிர் பாலினத்தவர்களைக் கையாளும் உளவியல் ஆலோசனைகளைக் கற்றுக்கொடுக்கலாம். இதன் மூலம் ஒரு ஆரோக்கியமான தலைமுறை உருவாக வழிவகை செய்து கொடுக்க இயலும். இந்தப் பயிற்சி வகுப்புகள் அரசு மற்றும் தனியார் என அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் நிகழுமாறு அரசாங்கம் ஒரு திட்டத்தை முன்னெடுக்கலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2. இலவச அழைப்பு மையம்

`காவலன்’ போன்ற செயலிகள் பெண்கள் பாதுகாப்புக்காகக் கொண்டுவரப்பட்டாலும், ஆபத்துக் காலத்திலேயே அதை நாடுகிறோம். மேலும், காவல் நிலையம் என்றால் சிலர் தயங்கவும் செய்யலாம். ஆதலால், ஒரு இலவச அழைப்பு மையம் (CALLCENTRE) சேவையை உருவாக்கி அதன் மூலம் வெவ்வேறான புகார்களை திரட்டி அரசாங்கமே காவல்துறை நடவடிக்கைக்கு அதை அனுப்பலாம்.

உதாரணமாக, நீண்ட காலம் பின் தொடரும் அல்லது தொல்லை கொடுப்பவர் பற்றியோ, பள்ளியிலோ-பணியிடத்திலோ நடமாடும் கயவர்கள் பற்றியோ, பின் தொடரும் சந்தேகத்துக்குரிய நபர் பற்றியோ, பொதுவெளிகளில் பெண்கள் முன்பு தவறாக நடந்துகொள்ளும் நபர்பற்றியோ, பேருந்து நிலையம், கல்லூரி/பள்ளி வாசல் முன்பு கிண்டல் செய்யும் ரோமியோக்கள் பற்றியோ புகார் தெரிவிக்கலாம். அவை பரிசீலனை செய்யப்பட்டு காவல் துறையின் மறைமுக நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கலாம் அல்லது அரசாங்கமே ஆவண செய்ய முற்படலாம்.

Representational Image
Representational Image

உதாரணமாக இருட்டாக இருக்கும் இடமே தவறு செய்ய தூண்டுமாயின் அரசாங்கம் அங்கே கூடுதல் மின் விளக்குகள் மற்றும் மறைக்காணி (CCTV) அமைத்துத் தரலாம். காவல் துறையினர் அந்த இடங்களுக்கு சில திடீர் விசிட் செய்து அக்கயவர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தலாம். இந்த சேவை மையம் எந்த வயதுடைய, துறையுடைய பெண்களாயினும் அனைவரது குறைகளையும் கேட்கும் வகை செய்யலாம்.

இதற்கு ஆகும் செலவு, திட்ட செயலாக்கம் குறித்த தகவல்கள் அல்லது மாதிரிகளை அரசாங்கம் மட்டுமே செய்ய வேண்டும் அவர்களே பொறுப்பு என்று ஒதுங்கி நிற்காமல் தொண்டு நிறுவனங்களோ, பொதுமக்களோ, பெண் பிள்ளை நலன் விரும்பும் எவரும் ஒருவரோடு ஒருவர் கைகோத்து செய்ய முன் வர வேண்டும்.

இதன் மூலம் முழுமையாக இல்லாவிட்டாலும் நம்மால் இயன்ற அளவு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கலாம். குற்றம் நடந்த பிறகு, நாம் சிந்தும் கண்ணீரோ, புலம்பலோ, சமூக ஊடகப் பதிவோ எதையும் மாற்றிவிடுவதில்லை. இது போன்ற சில உடனடி செயல்களே சிறந்த நடவடிக்கை !

- நாக சரஸ்வதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/