Published:Updated:

சேற்றில் சிக்கிய எஸ்.யூ.வி ரக கார் - நொடியில் அப்புறப்படுத்திய நாகா பெண்கள் படை #ViralVideo

Naga women Battalion lifts SUV
Naga women Battalion lifts SUV

நாங்கள் உடல் பலத்தில் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூப்பிக்கும் பெண்களின் வீடியோ ஒன்று வைரல் ஆகிவருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பெண்கள் அனைத்துத் துறையிலும் அவர்களுக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துவருகின்றனர். எந்தத் துறையாக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடுவோம் எனப் பல்வேறு சாதனைகளைப் புரிந்துவருகிறார்கள். பெண்கள், ஆண்களைவிட உடல் வலிமை மிக்கவர்கள் இல்லை என்ற கருத்து பரவலாக நிலவிவருகிறது. நாங்களும் பலமானவர்கள்தான் என நாகாலாந்து பெண்கள் படைப்பிரிவு செயல்பட்டுள்ளது. அவர்கள், உடல் பலத்தில் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூப்பிக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகிவருகிறது.

Naga women Battalion lifts SUV
Naga women Battalion lifts SUV

தேதி குறிப்பிடப்படாத வீடியோ காட்சி ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது . அதில், வாய்க்கால் சேற்றில் ஒரு எஸ்.யூ.வி ரக கார் சிக்கியுள்ளது. அது, மகேந்திரா நிறுவனத்தின் பொலீரோ மாடல் கார். ஆண்கள் உதவிக்கு வரட்டும் எனக் காத்திருக்கவில்லை நாகாலாந்து பெண்கள் படையினர். சில விநாடிகளிலேயே அதை அப்புறப்படுத்திவிட்டனர்.

காரின் முன் பகுதியைச் சில பெண்கள் உயர்த்துவதும் , காரின் பின்பகுதியைச் சில பெண்கள் இழுப்பதும் என சேற்றில் சிக்கிய காரை எளிதில் அப்புறப்படுத்த உதவ, உள்ளிருந்த ஓட்டுநரால் எளிதில் காரை பின்னே கொண்டு வர முடிந்தது. காரை வாய்க்காலிலிருந்து மீட்ட மகிழ்ச்சியில், பெண்கள் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக்கொண்டனர்.

Watch #WomanPower at work ! Naga women Battalion lifting a Mahindra Bolero from the side drain!

Posted by Rishi Bagree on Tuesday, August 27, 2019

ஒரு காரை வாய்க்கால் சேற்றிலிருந்து எடுப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. அதுவும் பெண்கள் படை தனியே செயல்பட்டு, சில விநாடிகளிலேயே காரை மீட்டது நிச்சயம் பாராட்டப்படவேண்டியதே. நாமும் இவர்களின் வலிமையைப் பாராட்டுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு