Published:Updated:

நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்ற பெண்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நாரி சக்தி புரஸ்கார் விருது
நாரி சக்தி புரஸ்கார் விருது

பெருமை

பிரீமியம் ஸ்டோரி
ர்வதேச மகளிர் தினத்தை யொட்டி, பல்வேறு துறைகளில் சாதனை படைத்துவரும் பெண்களை அடையாளப்படுத்தும் விதமாக ‘நாரி சக்தி புரஸ்கார்’ விருதை வழங்கிவருகிறது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம்.

இந்த ஆண்டுக்கான விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி பெருமைப்படுத்தினார். ‘நாரி சக்தி புரஸ்கார்’ விருதுபெற்ற பெண்களைப் பற்றிய அறிமுகம் இது...

கார்த்தியானி
கார்த்தியானி

கார்த்தியானி

ன்னுடைய 96 வயதில் நான்காம் வகுப்புக்கு நிகரான பாடத்திட்டத்தை படிக்க, கேரள அரசின் ‘அக்ஷ்ர லட்சணம்’ திட்டத்தின் கீழ் தன்னை இணைத்துக்கொண்டவர் கார்த்தியானி அம்மா. சிறுவயதிலேயே திருமணமாகி ஆறு குழந்தைகளைப் பெற்றவர். இளவயதிலேயே கணவனை இழந்து தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்காகப் பாடுபட்டவர். கேரளாவை நூறு சதவிகிதம் எழுத்தறிவு உள்ள மாநிலமாக உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ‘அக்ஷ்ர லட்சணம்’ திட்டத்தில் தன்னுடைய 60 வயது மகளின் உதவியுடன் 96 வயதில் இணைந்தார். கேலி கிண்டல்களுக்கு ஆளானாலும் கல்விக்கு வயது ஒரு தடையில்லை என்பதைத் தன்னுடைய செயல்பாடுகள் மூலம் விளக்கியவர். 2018-ம் ஆண்டு, கேரள அரசால் நடத்தப்பட்ட நான்காம் வகுப்புக்கு நிகரான தேர்வில் 98 சதவிகிதம் மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய 100 வயதுக்குள் பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற வேண்டும் என்பது கார்த்தியானி அம்மாவின் கனவு.

ஜாமி மூர்மு
ஜாமி மூர்மு

ஜாமி மூர்மு

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாமி. இப்போது 47 வயதாகும் ஜாமி, இயற்கை ஆர்வலர். 3,000 பெண்களுடன் இணைந்து கடந்த 24 ஆண்டுகளில் 25 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகிறார். காடுகள் அழிக்கப்படுவதை எதிர்ப்பதோடு மழைநீர் சேகரிப்பு போன்ற சூழலியல் சார்ந்த விழிப்புணர்வுப் பணிகளையும் மேற் கொண்டு வருகிறார். தனது குடியிருப்புப் பகுதி நக்ஸலைட்களால் பாதிப்புக்குள்ளானபோது, அவர்களை எதிர்த்து நின்றவர் ஜாமி.

பாகீரதி
பாகீரதி

பாகீரதி

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாகீரதி அம்மா. தன்னுடைய தாய் இறந்ததால் தன்னுடைய பள்ளிப்படிப்பை மூன்றாம் வகுப்போடு நிறுத்தியவர். அதன் பிறகு குடும்பம் குழந்தைகள் எனச் சராசரி வாழ்க்கையைத் தொடர்ந்த பாகீரதி அம்மா, தன்னுடைய 104-ம் வயதில் மீண்டும் நான்காம் வகுப்பு புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தார். விடாமுயற்சியுடன் படித்து தன்னுடைய 105 வயதில் நான்காம் வகுப்பு தேர்வை 75 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றார். கடந்த மாதம் அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமரால் பாராட்டப்பட்டவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாதாள பூதேவி
பாதாள பூதேவி

பாதாள பூதேவி

ந்திராவைச் சேர்ந்த பூதேவி, 11 வயதில் திருமண முடிந்து, மூன்று பெண் குழந்தைகள் பிறந்தபின், கணவனால் கைவிடப்பட்டவர். குழந்தைகளின் நலனுக்காகக் கூலி வேலைக்குச் செல்லத்தொடங்கிய பூதேவி தன் தந்தை தொடங்கிய பழங்குடியினருக்கான தொண்டு நிறுவனத்தின் செயல்பாட்டில் தன்னை இணைத்துக்கொண்டார். தந்தையின் மரணத்துக்குப்பின் தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் முழுவதையும் கவனித்துக்கொண்டே, பழங்குடிப் பெண்களின் உரிமைக்காகப் பாடுபடத் தொடங்கினார். பழங்குடிப் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய இடவசதி, கணவனை இழந்த பெண்களுக்கான நிதியுதவி போன்ற வற்றை அரசிடமிருந்து பெற்றுத்தர போராடுகிறார். இவை தவிர, விவசாயிகளுடன் இணைந்து 125 வகை யான அரிய வகை தானியங் களையும் உற்பத்தி செய்து வருகிறார் பாதாள பூதேவி.

மன் கெளர்
மன் கெளர்

மன் கெளர்

ந்தியாவின் மிக வயதான தடகள வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் மன் கெளர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். தன்னுடைய 102 வயதில் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற ‘உலக மாஸ்டர்ஸ் தடகளப் போட்டி’யில் 100 - 104 வயது பிரிவினருக்கான 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். ஐந்து முறை உலக மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் கலந்துகொண்டவர் என்ற பெருமையும் இவருக்குண்டு. 2018-ம் ஆண்டு, உலக மாஸ்டர்ஸ் தடகளத்தில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட மன் கெளர் தங்கம் வென்றார். இதன்மூலம், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 100 வயதான வர்களில் வேகமாக ஓடக்கூடியவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

தஷி மாலிக் - நுங்ஷி மாலிக்
தஷி மாலிக் - நுங்ஷி மாலிக்

தஷி மாலிக் - நுங்ஷி மாலிக்

2013-ம் ஆண்டு, எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் இரட்டையர் தஷி மாலிக் - நுங்ஷி மாலிக். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியின் மகள்களான இவர்கள், இப்போது உத்தரப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இருவரும் ஏழு ஆண்டுக்கால பள்ளிப்படிப்பைத் தமிழகத்தில் படித்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு. எவரெஸ்ட் மட்டுமல்ல... ஏழு கண்டங்களிலும் இருக்கக்கூடிய உயரமான சிகரங்களையும் ஏறி சாதனை படைத்துள்ளனர். சிகரம் ஏறுவதன் மூலம் பெண் குழந்தைகளின் வலிமையை உலகறியச் செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் இந்த இரட்டையர்.

நில்ஜா வாங்மோ
நில்ஜா வாங்மோ

நில்ஜா வாங்மோ

ன்று லடாக்கின் அடையாளமாகத் திகழ்பவர் நில்ஜா வாங்மோ. பிறப்பதற்கு முன்பே தந்தையை இழந்தவர். பொருளாதாரக் காரணங்களால் கல்லூரிப் படிப்பைத் தொடரமுடியாத நில்ஜா, பிசினஸ் தொடங்குவதை தன்னுடைய லட்சியமாகக்கொண்டு செயல்பட ஆரம்பித்தார். வங்கியில் எட்டு லட்சம் ரூபாய் கடனுதவி பெற்று லடாக்கின் பாரம்பர்ய உணவுகளை மட்டுமே தனித்துவமாகச் சமைத்துப் பரிமாறும் உணவகம் ஒன்றைத் தொடங்கினார். லடாக் உணவுகளுக்கான முதல் ஐந்து நட்சத்திர உணவகத்தை நில்ஜா தொடங்கினார் என்பது கூடுதல் சிறப்பு. இதன்மூலம் நிறைய பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கிக்கொடுத்துள்ளார்.

கெளசிகி சக்ரவர்த்தி
கெளசிகி சக்ரவர்த்தி

கெளசிகி சக்ரவர்த்தி

ந்துஸ்தானிய இசைக்கலைஞரான கெளசிகி, கொல்கத்தாவைச் சேர்ந்தவர். ஏழு வயதிலிருந்து மேடைக் கச்சேரிகள் செய்துவருகிறார். தன் கணவர் பார்த்த சாரதியுடன் இணைந்து தேசிய மற்றும் சர்வதேச விழாக்களில் இசைக் கச்சேரிகள் நடத்துகிறார். தன்னுடைய குரல் வளத்துக்காக மாநில விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

அவனி சதுர்வேதி - பாவனா காந்த் - மோகனா சிங்
அவனி சதுர்வேதி - பாவனா காந்த் - மோகனா சிங்

அவனி சதுர்வேதி - பாவனா காந்த் - மோகனா சிங்

ந்திய விமானப்படையில் போர் விமானங்களை இயக்க 2017-ம் ஆண்டு அவனி சதுர்வேதி, பாவனா காந்த், மோகனா சிங் ஆகிய இந்த மூன்று பெண் விமானிகள் பணியமர்த்தப்பட்டார்கள். இந்திய விமானப்படையில் போர் விமானங்களை இயக்க பெண்கள் தேர்வு செய்யப்பட்டது அதுவே முதன்முறை. இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் - 21 பைசன் போர் விமானங்களை இயக்கி மூவரும் சாதனை படைத்தனர். இவர்களில், அவனி சதுர்வேதி குஜராத் மாநில விமானப்படைத் தளத்தில் எம்.ஐ. ஜி-21 ரக விமானத்தைத் தனியாக இயக்கி, ‘போர் விமானத்தைத் தனியாக இயக்கிய முதல் பெண்’ என்ற பெருமையையும் பெற்றார்.

ராஷ்மி
ராஷ்மி

ராஷ்மி

ண்கள் மட்டுமே பணியாற்றி வந்த ஆட்டோமொபைல் துறையில் கால்பதித்து தனக்கான அடையாளத்தை உருவாக்கியவர் ராஷ்மி. 2014-ம் ஆண்டில் ஆட்டோமொபைல் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாகச் செயல் பட்டுவரும் இவரின் வயது 60. ஆட்டோமொபைல் துறையில் பல பெண்களுக்குப் பயிற்சி வழங்கி, வேலைவாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

இந்த 13 பெண்களோடு இணைந்து, சர்வதேச மகளிர் தினத்தன்று பிரதமரின் சமூக வலைதளப் பக்கத்தை நிர்வகித்த ஏழு பெண்களில், ஆஃரிபா, பீனா தேவி, கலாவதி தேவி ஆகியோரும் நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்றுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு