Published:Updated:

கலக்கும் ‘கலகாத்தா’... விருதை வென்ற ‘ஆட்டுக்கார’ நஞ்சம்மா!

 லட்சுமி பிரியா சந்திரமௌலி -  நஞ்சம்மா -  சந்தியா ராஜூ
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி பிரியா சந்திரமௌலி - நஞ்சம்மா - சந்தியா ராஜூ

- கோகுலன் கிருஷ்ணமூர்த்தி

கலக்கும் ‘கலகாத்தா’... விருதை வென்ற ‘ஆட்டுக்கார’ நஞ்சம்மா!

- கோகுலன் கிருஷ்ணமூர்த்தி

Published:Updated:
 லட்சுமி பிரியா சந்திரமௌலி -  நஞ்சம்மா -  சந்தியா ராஜூ
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி பிரியா சந்திரமௌலி - நஞ்சம்மா - சந்தியா ராஜூ

இந்திய திரைத்துறையினருக்கு ஆண்டுதோறும் தேசிய திரைத்துறை விருதுகள் அறிவிக்கப்படும். 2020-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெற இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில், 68-வது தேசிய திரைத்துறை விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. பல பிரிவுகளிலும் விருதை வசப்படுத்தியிருக்கும் பெண் முகங்கள் இங்கே..!

 சூரரைப் போற்று
சூரரைப் போற்று

’பொம்மி மாதிரி பொண்ணு வேணும்!’

‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் கதாநாயகி யாக நடித்த அபர்ணா பாலமுரளிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப் பட்டுள்ளது. தனது 18 வயதில் ‘யாத்ரா துடாருன்னு’ என்ற மலையாள திரைப்படம் மூலம் 2013-ம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமானார், அபர்ணா பாலமுரளி. ‘எட்டு தோட்டாக்கள்’ படத்தின் மூலம் 2017-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானவர், இசையிலும் முனைப்பு காட்டி, ‘மௌனங்கள் மின்துமோரே’, ‘தென்னல் நிலவிந்தே’ மற்றும் ‘தந்தனே’ போன்ற பாடல்களை பாடி, பின்னணி பாடகி யாகவும் ஈர்த்தார். ‘சூரரைப் போற்று’ திரைப் படத்தில் ‘பொம்மி’ கதாபாத்திரமாகவே மாறி யிருந்தார் அபர்ணா. பாத்திரப் படைப்பு மற்றும் அபர்ணாவின் அசர வைக்கும் நடிப்பால் ’பொம்மி மாதிரி பொண்ணு வேணும்’ என்று ஆண்கள் சமூக வலைதளங் களில் எழுதிக் குவித்தார்கள்.

 அபர்ணா பாலமுரளி
அபர்ணா பாலமுரளி

அசராத உழைப்பு, அசத்திய திரைக்கதை!

சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை ‘சூரரைப் போற்று’ திரைப்படத்துக்காக இயக்குநர் சுதா கொங்கரா, ஷாலினி உஷா நாயர் ஆகியோர் பெற்றுள்ளனர். படத்தின் இயக்குநருமான சுதா கொங்கரா, 2002-ம் ஆண்டு வெளியான இந்திய ஆங்கிலத் திரைப்படமான Mitr My Friend மூலம் திரைக்கதை எழுத்தாளராக சினிமா உலகில் நுழைந்தார். ஏழு வருடங்கள் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநர், ‘ஆந்திரா ஆண்டகாடு’ படத்தின் மூலம் தெலுங்கில் இயக்குநர் அறிமுகம், 2016-ம் ஆண்டு வெளிவந்த ‘துரோகி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநர் என்ட்ரி, குத்துச் சண்டையை மையமாகக்கொண்டு 2016-ம் ஆண்டு வெளிவந்த `இறுதிச்சுற்று’ படத்துக்கு ஃபிலிம் ஃபேர் விருது என்று முன்னேறினார்.

ஒரு ரூபாய்க்கு இந்தியர்களை விமானத்தில் பறக்க வைத்து அழகுபார்த்த ஜி.ஆர்.கோபிநாத்தின் பயோபிக்தான் ’சூரரைப் போற்று’ திரைப்படம். இந்திய விமானத்துறையில் பெரும் மாற்றங் களுக்கு வித்திட்ட கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை, தனது அசராத திரைக்கதை அமைப்பினால், ரசிகர்களின் மனதில் ஆழப் பதியச் செய்தார் சுதா. விறுவிறுப்பான திரைக்கதை, பயோபிக் என்றாலும் ஓர் இடத்தில் கூட சலிப்புத் தட்டாத காட்சி அமைப்பு, குறைவான கமர்சியலிஸம் என படத்தை ஹிட் பேக்கேஜ் ஆக்கிய இந்த படைப்பாளி தங்கள் டீம் வொர்க்கால், இசை, நடிப்பு, திரைக் கதை உள்ளிட்ட பிரிவுகளில் ஐந்து தேசிய விருதுகளை தன் படத்துக்கு வசப்படுத்தியுள்ளார்.

 அபர்ணா பாலமுரளி -  ஷாலினி உஷா நாயர்
அபர்ணா பாலமுரளி - ஷாலினி உஷா நாயர்

யூடியூபில் ஆரம்பித்த பயணம்!

வெள்ளித்திரைக்கு முன்னரே சின்னத்திரையிலும், யூடியூப் தளத்திலும் தடம் பதித்த லட்சுமி பிரியா சந்திரமௌலி, அசாத்திய நடிப்பு, தைரியமான பாத்திரத் தேர்வு மற்றும் இயல்பான தோற்றம் ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவர் நடித்த ‘லட்சுமி’ குறும்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும், ஏற்றுக்கொண்ட கதா பாத்திரத்தை துணிச்சலுடன் நடித்ததாகத் தெரிவித்திருந்தார். `மயூரி’, `ரிச்சி’, `ரெண்டாவது ஆட்டம்’, `ஓடு ராஜா ஓடு’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள் ளார். இயக்குநர் வசந்தின் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ ஆந்தாலஜி படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை இப்போது பெற்றுள்ளார். அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம், மூன்று பெண்களின் கதைகளை வெவ்வேறு காலக்கட்டத்தில் விவரிக்கிறது.

 லட்சுமி பிரியா சந்திரமௌலி -  நஞ்சம்மா -  சந்தியா ராஜூ
லட்சுமி பிரியா சந்திரமௌலி - நஞ்சம்மா - சந்தியா ராஜூ

ஆடு மேய்க்கும் பாட்டு!

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தின் அட்டப்பாடி பகுதியில் நக்குபதி கிராமத்தில் வசிக்கும் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த நஞ்சம்மா, சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். மறைந்த இயக்குநர் சச்சு இயக்கத்தில், ப்ரித்திவி ராஜ் நடிப்பில் உருவான ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் அறிமுக பாடலான ‘கலகாத்தா’ பாடலை இருளர் மொழியில் எழுதி, பாடியுள்ளார் நஞ்சம்மா. அவர் வசிக்கும் கிராமத்தில் ‘அய்யப்பனும் கோஷியும்’ படப்பிடிப்பு நடந்த சமயத்தில், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பாடலை பாடினால் நன்றாக இருக்கும் என எண்ணிய இயக்குநர் சச்சு, ஆசாத் கலாசங்கத்தில் உறுப்பினராக இருந்த நஞ்சம்மாவை அணுகி உள்ளார். அப்போது, தான் ஆடு மேய்க்கும்போது தானே எழுதி பாடிய ‘கலகாத்தா’ பாடலை பாடி, வாய்ப்பையும் பெற்றார் நஞ்சம்மா. அதே திரைப்படத்தில் மூன்று பாடல்களையும் நஞ்சம்மா பாடியுள்ளார். இயல்போடும் இயற்கையோடும் ஒன்றிய குரலில் நஞ்சம்மாவின் ‘கலகாத்தா’ பாடல் தமிழகம் மற்றும் கேரளாவில் இன்னும் பலரின் ரிங் டோனாக ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

அதிரும் நடனம்!

சென்னையைச் சேர்ந்த குச்சிப்புடி நடனக் கலைஞரான சந்தியா ராஜூ 2013-ம் ஆண்டு ’யாதோன் கி பராத்’ இந்தி குறும்படம் மூலம் அறிமுக மானார். 2017-ம் ஆண்டு வெளியான ‘கேர்ஃபுல்’ என்ற மலையாள த்ரில்லர் திரைப்படத்தில் அடுத்த என்ட்ரி. 2021-ம் ஆண்டு சர்வதேச நடன தினத்தில் வெளிவந்த தெலுங்கு திரைப்படமான ‘நாட்யம்’ படத்தை தயாரித்து, தனது நடன திறமையை மெய்ப்பிக்கும் வகையில் முதன்மை கதாபாத்திரத் தையும் ஏற்று நடித்தார். முழுக்க முழுக்க இசையும் நடனமுமாக நகரும் இந்தத் திரைப்படத்தின் நடன இயக்குநராகவும் சந்தியா கோலோச்சினார். தற்போது, நடனக் கலைஞருக்கான தேசிய விருது ’நாட்யம்’ திரைப்படத்துக்காக சந்தியா கைகளில்.

கலைமகள்கள்!