Published:Updated:

நங்கையருக்கான நவராத்திரி!

நங்கையருக்கான நவராத்திரி!
பிரீமியம் ஸ்டோரி
நங்கையருக்கான நவராத்திரி!

பெண்ணின் வலிமையைக் குறிப்ப துடன், தீமைகள் அழிந்து நன்மைகள் என்றும் நிலைக்கும் என்பதைக் குறிக்கும் இந்த நவராத்திரி வழிபாடு

நங்கையருக்கான நவராத்திரி!

பெண்ணின் வலிமையைக் குறிப்ப துடன், தீமைகள் அழிந்து நன்மைகள் என்றும் நிலைக்கும் என்பதைக் குறிக்கும் இந்த நவராத்திரி வழிபாடு

Published:Updated:
நங்கையருக்கான நவராத்திரி!
பிரீமியம் ஸ்டோரி
நங்கையருக்கான நவராத்திரி!

“இந்த வருஷம் கொலுவுக்கு டெரகோட்டா பொம்மை செட் ஒண்ணு புதுசா ஆர்டர் பண்ணி யிருக்கேன். நீ என்ன வாங்கினே..?”

“காதிபவன்ல சேல் போட்டாச்சு. வங்காளத்தோட கிருஷ்ணாநகர் மண் பொம்மைகள் அத்தனை நேர்த்தி...”

“இந்த முறை கொலுவுக்கு வர்ற குழந்தைங்களுக் காகவே ஸ்பெஷல் புக்ஸ் வாங்கி வைச்சிருக்கேன்...”

- இப்படி நவராத்திரி வந்ததுமே கொலு மற்றும் பொம்மைகள் பற்றிய பேச்சும் வந்துவிடும்.

 டாக்டர் சசித்ரா தாமோதரன்
டாக்டர் சசித்ரா தாமோதரன்

பல ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து வரங்கள் பல பெற்ற மகிஷாசுரன், சாகாவரமான சிரஞ்சீவி வரத்தையும் கேட்க, அதைத் தர மறுத்த பிரம்மாவிடம், “அப்படியென்றால் தேவர்கள், அசுரர்கள், மானிடர்கள் யாரிடமிருந்தும் எந்த உதவியும் பெறாத ஒரு கன்னிப் பெண்ணால் மட்டுமே நான் மரணமடைய வேண்டும்” என்று வரம் கேட்கிறான். அப்படியே வரமும் கிடைக்க, தனக்கு யாராலும் அழிவு ஏற்படாது என்ற இறுமாப் புடன் ஈரேழு உலகத்தையும் தன் கீழ் கொண்டுவந்து, தேவலோகத்தையும் கைப்பற்றி தன் அராஜகத்தை எங்கும் தொடங்குகிறான்.

இதனால் தேவர்களும் மனிதர்களும் தங்களின் துயர் தீர்க்க தேவியை நோக்கி தவமிருக்க, தேவியும் ஓர் அழகிய கன்னிப்பெண் வடிவம் கொண்டு பூமியில் இறங்குகிறாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும் மூர்த்திகளும் இந்திரன் உள்ளிட்ட திக்பாலர்களும் அப்போது சிலையாக நிற்க, யாருடைய உதவியையும் பெறாமல், தன் சக்தியை மட்டுமே ஆயுதமாக எடுத்துக் கொண்ட தேவி, ஒன்பது நாள்கள் கடும்போரிட்டு விஜயதசமி அன்று மகிஷனைக் கொன்று மகிஷாசுர மர்த்தினியாக மாறியதாகவும் அதன் காரணமாகவே நம் வீட்டுப் பெண்கள் நவராத்திரி முழுவதும் விரத மிருந்து தேவியை வழிபடுவதாகவும் கூறப்படுகிறது.

‘நவ’ என்றால் ஒன்பது என்பது பொருள். ஆண்டுக்கு இருமுறை அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது நாள்கள் நவராத்திரியாகக் கொண்டாட வேண்டுமென்றும், சித்திரையில் வரும் நவராத்திரிக்கு ‘வசந்த நவராத்திரி’ என்றும், புரட்டாசியில் வரும் நவராத்திரிக்கு ‘சாரதா நவராத்திரி’ என்றும் பெய ரென்று தேவி புராணம் கூறுகிறது.

இதில் மகாளய அமாவாசைக்குப் பின்னால் வரும் ஒன்பது நாள்களும் ஒன்பது படிக்கட்டுகளில் பொம்மை களைக் கொலு வைத்து, விரதமிருந்து, மாலைகள் தொடுத்து, கீர்த்தனை களைப் பாடி, நடனங்கள் ஆடி, கொண்டைக்கடலை, நவதானியப் பொங்கல், கதம்பம் என்று சிறப்பு உணவுகளைத் தயாரித்து பகிர்ந்தளிப் பதும், பழங்கள், வளையல்கள் உள் ளிட்ட மங்கலப் பொருள்களை தான மளிப்பதும் நம்மிடையே நடைமுறை யில் உள்ள வழக்கம்.

பெண்ணின் வலிமையைக் குறிப்ப துடன், தீமைகள் அழிந்து நன்மைகள் என்றும் நிலைக்கும் என்பதைக் குறிக்கும் இந்த நவராத்திரி வழிபாடு, `துர்கா பூஜை' என்றும் (வங்காளம்), `தசரா' என்றும் (கர்நாடகா), `பத்துகம்மா பூஜை' (ஆந்திரா) என்றும், `கார்பா' (குஜராத்) என்றும் தேசமெங்கும் கொண்டாடப்படுகிறது.

ஒரு பெண் வாழ்வில் வெற்றியடைய கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் வேண்டும்.இதைக் குறிப்பிடும்வண்ணம் முதல் மூன்று நாள்கள் வீரம் கிடைக்க துர்கையையும், அடுத்த மூன்று நாள்கள் செல்வம் பெற்றிட மகாலட்சுமியையும், இறுதி மூன்று நாள்கள் ஞானத்தைப் பெற சரஸ்வதியையும் வணங்கு கிறோம். ஆனால் இந்த வரங்கள், குணங்கள், நம்பிக்கைகள் அனைத்தையும் தாண்டி நவ ராத்திரி நோன்பும் பொம்மைகளும் உண்மை யில் ஒரு வாழ்வியலாகத்தான் இருந்துள்ளது.

நங்கையருக்கான நவராத்திரி!

நவராத்திரியில் நோன்பு மேற்கொள்வதால் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு, கொழுப்புகள் கரைதல், தேவையற்ற உணவுச் சேர்க்கைகள் வெளியேற்றம், வளர்சிதை மாற்றங்கள் என விரதங்கள் அளிக்கும் அறிவியல்பூர்வமான பலன்கள் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் ஒவ்வொரு நாளும் விரதத்தை முடிக்கும்போது உட்கொள்ளப்படும் இயற்கை உணவுகளும் புரதங்களும், நவதானியங்களும் தசைகள், எலும்புகள் மற்றும் நரம்புகளுக்கு வலிமை சேர்க்கும்.

உண்மையில் கோடை, குளிர் என்று பருவங்கள் மாறும்போது அக்காலத்தில் பெண்கள் பெரும்பாலும் நோயில் விழுந்ததால் அவர்களைக் காக்க பயறு மற்றும் தானியங் களை முறையாக உண்ணக் கொடுப்பதற்காகவே இந்த நோன்பும், வழிபாடும் நடந்ததாகவும், காலப்போக்கில் சித்திரை நவராத்திரி வழக்கத் திலிருந்து மறைந்து, புரட்டாசி நவராத்திரி மட்டுமே விஞ்சியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி மன ஆரோக்கியமும் இங்கு வெகுவாகக் கூடுகிறது என்று கூறும் அறிவியல், கொலுவையும் வீட்டையும் ஏன் தன்னையும் நன்கு அலங்கரித் துக் கொள்ளும் பெண்ணுக்கு செரடோனின் களும் டோபமைன்களும் கூடி, தன்னம் பிக்கையையும் மன மகிழ்வையும் தருகின்ற அதேவேளை, அனைவரும் ஒன்றுகூடி பூக்கள், பாடல்கள் மற்றும் புன்னகைகள் ஒன்றுசேர்வதால் எண்டார்ஃபின்களும் ஆக்ஸிடோசின்களும் அதிகரித்து மனிதர் களிடையே புரிந்துணர்வையையும் மன நிறை வையும் தந்து, இந்த ஹேப்பி ஹார்மோன்கள் ஒவ்வொன்றும் உள்ளத்தின் ஆரோக்கியத்தை பெருமளவு அதிகரிக்கிறது என்று கூறுகிறது.

நங்கையருக்கான நவராத்திரி!

பெண்களின் ஆரோக்கியம் ஒருபக்கம் என்றால், பெண்கள் கற்பதை மேம்படுத்தவே இந்தக் கொலு கலாசாரம் நிகழ்ந்ததாகச் சான்றுகளும் கிடைக்கின்றன.

`யாதுமாகி நின்றாய் காளி” என்று பாடுகிறார் பாரதி. அப்படி அனைத்து உயிரிலும் தேவியைக் காண வேண்டும் என்பதை உணர்த்தவே புல், பூண்டு, புலி, பசு, மரம், மனிதர் என அனைத்தையும் கொலுவில் வைப்பது வழக்கம் என்கிறார்கள்.

சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கி, பண்டைய எகிப்து, கிரேக்கம், ஆப்பிரிக்க பழங்குடிகள், ரோமானியர்கள் என உலகின் எல்லாப் பகுதிகளிலும் பொம்மைகளைப் பயன் படுத்துவது இருந்திருந் தாலும், ஜப்பானில் அவர்களின் பாரம் பர்யமான ‘ஹினமட்சுரி’ விழாவில் நம்மைப் போலவே பொம்மைகள் செய்து, வண்ணமடித்து, ஆடைகள் அணிவிப்ப தோடு நம்மைப் போலவே அவற்றைப் படிக்கட்டு களில் வரிசையாக அடுக்கி கொலு வைக்கும் பழக்கமும் அங்கு உள்ளது.

ஆக, வெறும் கேளிக்கை, விளையாட்டு என்பவற்றைத் தாண்டி, சமூகத் தொடர்புகளை பெருக்கவும், கற்றுக்கொள்ளவும், கற்றுக் கொண்டதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து நினைவூட்டிக்கொள்ளவும், வீட்டை அழகு படுத்தி, இயற்கை உணவுகளை உட்கொண்டு மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெருக்கிக்கொள்ளவும் உதவும் இந்த வண்ண மயமான நவராத்திரி என்பது பெண்களின் நவ (புதிய) தொடக்கத்தின் ராத்திரி என்றே புரிந்துகொள்ளவும் முடிகிறது.

உண்மையில் நங்கையருக்கான நவராத்திரி எனும் இந்த ஒன்பது நாள் வழிபாடு என்பது பெண் வலிமையானவள் என்பதைக் குறிப்பது மட்டுமல்ல...

அன்பு, ஆரோக்கியம், ஒற்றுமை, நம்பிக்கை, தர்மம், ஞானம் ஆகிய அனைத்தும் கலந்த வாழ்வியல் கொண்டாட்டத்தின் வெளிப்பாடும்தான்.

அனைவருக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்!