Published:Updated:

செய்திவாசிப்பில் இருந்து சிலம்பாட்டம்...

ஜெயஸ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
ஜெயஸ்ரீ

ஜெயஸ்ரீ சுந்தரின் புது அவதாரம்

செய்திவாசிப்பில் இருந்து சிலம்பாட்டம்...

ஜெயஸ்ரீ சுந்தரின் புது அவதாரம்

Published:Updated:
ஜெயஸ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
ஜெயஸ்ரீ

டிவி ரசிகர்களில் ‘90ஸ் கிட்ஸுக்கு பரிச்சயமானவர் ஜெயஸ்ரீ சுந்தர். அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்பும், நல்ல குரல்வளமும் கொண்ட செய்தி வாசிப்பாளரான இவர், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளையின் பேத்தி. 50 ப்ளஸ் வயதில் சிலம்பம் கற்றுக்கொண்டு அசத்துகிறார் ஜெய. திடீர் சிலம்ப ஆர்வத்திலிருந்தே ஆரம்பமானது உரை யாடல்.

``சிலம்பம் ஆடும் பெண்களைப் பார்த்தா ஆசையா இருக்கும். அவங்க சிலம்பம் சுத்தும் லாகவமும் ஸ்டைலும் சூப்பரா இருக்கும். போன வருஷம் ஒரு நாள் நடிகர் தாமுவின் சிலம்பம் வீடியோ பார்த்தேன். ‘நானும் கத்துக்கலாமா’ன்னு தாமுகிட்ட கேட்டேன். தாராளமா கத்துக்கலாம்னு சொல்லி, அவர்தான் என்னை பவர் பாண்டியன் மாஸ்டர்கிட்ட சேர்த்துவிட்டார்...’’ அமைதியாகப் பேசுகிறார் ஜெயஸ்ரீ.

செய்திவாசிப்பில் இருந்து 
சிலம்பாட்டம்...
செய்திவாசிப்பில் இருந்து 
சிலம்பாட்டம்...

‘`ஹாக்கி பிளேயரான எங்கப்பா, பெண்கள் பயப்படவே கூடாதுன்னு அட்வைஸ் பண்ணுவார். ஹாக்கி ஸ்டிக் கையில இருந்தாலே பத்துப் பேரைச் சமாளிக்கலாம்னு சொல்வார். சிலம்பம் தற்காப்புக் கலை மட்டுமல்ல. உடலுக்கு நல்ல சுறுசுறுப்பைக் கொடுக்குது. சிலம்பத்தைக் கையில் எடுத்ததும் வரும் தன்னம்பிக்கையும் வீரமும் வேற லெவல்!’’ – ரசித்துச் சொல்கிறார் ஜெயஸ்ரீ.

‘`எப்படிப் போய்கிட்டிருக்கு லைஃப்?’’

‘`வீடு, வேலை, சிலம்ப வகுப்புன்னு பிஸியா போய்கிட்டிருக்கு. நியூஸ் ரீடர்ஸ் எல்லாரும் சேர்ந்து ‘தமிழ் செய்திவாசிப்பாளர் சங்கம்’னு ஓர் அமைப்பை தொடங்கியிருக்கிறதுதான் ஸ்பெஷல் நியூஸ். நான் அதுல துணைத்தலைவர். 90-கள்ல செய்தி வாசிச்ச ஷோபனா ரவி மேடம், செந்தமிழ் அரசு சார்லேருந்து இப்போ இருக்கும் செய்தி சேனல்கள்ல வாசிக்கும் புதுமுகங்கள் வரை பலரும் அதுல உறுப்பினர்கள். எங்களுக்குள்ளே தகவல் தொடர்புக்காகவும், செய்திவாசிப்பாளர்களின் நலனுக்காகவும்தான் இந்தச் சங்கத்தை ஆரம்பிச்சோம். அடிக்கடி எல்லோரும் சந்திக்கிறோம். எங்க குடும்பங்கள்ல நடக்குற நல்லது, கெட்டதுக்கு முதல் ஆளா உதவி செய் றோம். சங்கம் சார்பா இருக்குற நியூஸ் ஆங்க்கர்ஸ் யூடியூப் சேனல்ல தினமும் மாலை 6 மணிக்கு செய்திகள் வாசிக்கி றோம். சந்தோஷமா இருக்கு.’’

‘`முத்தமிழ் காவலர் குடும்பத்து வாரிசு நீங்க... தாத்தாவின் நினைவுகள் ஏதேனும் பகிர்ந்துக்கலாமே!”

“எனக்கு வெற்றிச்செல்வின்னு நல்ல தமிழ்ப் பெயர் வச்சார் தாத்தா. குடும்பத்துல எல்லாரும் தமிழ்ல ஊறினவங்கன்னாலும் அப்பா கண்ணன், ஹிந்தி பண்டிட். அதனால ‘ஸ்ரீ’ வர்ற மாதிரி மூணு பேருக்கும் ஸ்ரீகாந்த், ஜெய, விஜயஸ்ரீனு பெயர் வச்சாங்க. அதனால வெற்றிச் செல்விங்கிற பெயரை உபயோகிக்கவே இல்லை. ஆனா என் தங்கை அந்தப் பெயர் நல்லாயிருக்குன்னு சொல்லி, தன் பெயரா மாத்திக்கிட்டாங்க.

நான் செய்தி வாசிப்பாளராக காரணமே தாத்தாவோட தாக்கம்தான். தினமும் செய்தித்தாள் தலைப்புகளை சத்தமா வாசிக்கச் சொல்வார். கண்களை மூடிக் கேட்டுக்கிட்டே, தவறான உச்சரிப்புகளைத் திருத்துவார். நான் செய்தி வாசிப்பாளரான பிறகு, அவர் இறந்த செய்தியை நானே வாசிச்சதை மறக்கவே முடியாது!”

செய்திவாசிப்பில் இருந்து 
சிலம்பாட்டம்...
செய்திவாசிப்பில் இருந்து 
சிலம்பாட்டம்...

“25 வருஷங்கள் பிஸியாக இருந்தீங்க... சினிமா, சீரியல் வாய்ப்புகள் வரலையா?”

“இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் சார் ஒரு படத்துக்குக் கேட்டார். அந்த நேரத்துல வேண்டாம்னு தோணுச்சு, பண்ணல. ஆனா, இப்போ நிறைய நேரம் இருக்கு. வாய்ப்புகள் வந்தா பண்ணலாம்னு தோணுது. கும்பாபிஷேக நிகழ்வுகள், உலகத் தமிழர் வரலாறு, தமிழ்த் திரைப்பட வரலாறு. இப்படி ஏகப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு வாய்ஸ் ஓவர் பண்ணியிருக்கேன். கலைஞர் அய்யா முதல்வரா இருந்த கால கட்டத்துல, நிறைய அரசு விழாக்கள், திரைப்பட விருது விழாக்களைத் தொகுத்து வழங்கியிருக்கேன். இப்பவும் காம்பியரிங் பண்றேன்.”

“காம்பியரிங்ல மறக்க முடியாத தருணம்...”

“2000-ம் வருஷம் நடந்த திரைப்பட விருது விழாவுல ‘படையப்பா’ படத்துக்காக ரஜினி சாருக்கு சிறந்த நடிகர் விருது கிடைச்சது. விழா முடிஞ்சபோது, ரஜினி சார் என் பக்கத்துல வந்து, ‘நல்லாப் பண்ணினீங்க... வெரி குட்’னு சொல்லிட்டுப் போனார். நான் அப்படியே திக்குமுக்காடிப் போயிட்டேன்!”

‘`செய்தி வாசிப்பாளராகணும்னு நினைக்கிறவங்களுக்கு டிப்ஸ்...”

“தமிழ்ல ஆர்வமும் ஈடுபாடும் இருக்கணும். உச்சரிப்பு ரொம்ப முக்கியம். எங்க அண்ணன் ஸ்ரீகாந்துக்கும் எனக்கும் சின்ன வயசுல ‘எங்க தாத்தா தச்ச சட்டை’ மாதிரி ‘நா பிறழ் பயிற்சி, நா நெகிழ் பயிற்சி’ எல்லாம் கொடுப்பாங்க. அந்த மாதிரி பயிற்சிகள்தான் வேக மான, தெளிவான உச்சரிப்பைக் கொடுக்கும். நிறைய செய்திகள் படிக்கணும்... கேட்கணும். லேட்டஸ்ட் நிகழ்வுகளை அப் டேட் பண்ணிக்கணும். இருபத்தி நாலு மணி நேர செய்தி சேனல்கள் பெருகிட்ட தால இப்பல்லாம் வாய்ப்பு களுக்கு குறையே இல்லை.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism