Published:Updated:

படுகர் இனத்தில் முதல் பெண் லெஃப்டினன்ட் ஜெனரல்; சாதனையை சாத்தியமாக்கிய பவித்ரா!

பெற்றோருடன் பவித்ரா

படுகர் இனத்தில் முதல் பெண் லெஃப்டினன்ட் ஜெனரலாக உயர்ந்து தடம் பதித்திருக்கும் பவித்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

படுகர் இனத்தில் முதல் பெண் லெஃப்டினன்ட் ஜெனரல்; சாதனையை சாத்தியமாக்கிய பவித்ரா!

படுகர் இனத்தில் முதல் பெண் லெஃப்டினன்ட் ஜெனரலாக உயர்ந்து தடம் பதித்திருக்கும் பவித்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Published:Updated:
பெற்றோருடன் பவித்ரா

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள உபதலை கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. பெங்களூரு ராஷ்ட்ரிய ராணுவ பள்ளியில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற மனோகரன் என்பவரின் மகளான பவித்ரா, ராணுவத்தின் மீது அதிக ஆர்வம் காட்டி வந்திருக்கிறார். சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், 9 மாத காலம் பயிற்சி பெற்று வந்திருக்கிறார். பயிற்சி நிறைவடைந்து லெஃப்டினன்ட் ஜெனரலாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

சீருடையில் பவித்ரா
சீருடையில் பவித்ரா

கடந்த அக்டோபர் மாதம் 29- ம் தேதி சென்னையில் நடைபெற்ற சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில் சிறந்த பயிற்சி பெற்றமைக்கான வாள் மற்றும் வெள்ளிப் பதக்கத்தையும் பரிசாக பெற்றிருக்கிறார். படுகர் இனத்தைச் சேர்ந்த முதல் பெண் லெஃப்டினன்ட் ஜெனரலாக பெருமையுடன் ஜம்மு காஷ்மீரில் பொறுப்பேற்க இருக்கும் பவித்ரா, சொந்த ஊருக்கு வருகைத் தந்திருந்தார். ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து கொண்டாடினர்.

அப்போது பேசிய பவித்ரா, ``சமுதாயத்தில் பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது. பெண்களுக்கு விரைவாக திருமணம் செய்து வைக்கப்படுவது, குழந்தைகள் பெற்றுக் கொள்வது போன்றவைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

உறவினர்களுடன் பவித்ரா
உறவினர்களுடன் பவித்ரா

கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் என எது இருந்தாலும் நமது மனம் எதை, சொல்கிறதோ அதை கேட்டு செயல்பட வேண்டும். மூளையை நாம் அதிகம் பயன்படுத்தி, நமது குறிக்கோளை இலக்காக கொள்ள வேண்டும். பெற்றோரை பெருமைபடுத்தும் விதமாகவே, நமது குறிக்கோள்கள் இருக்க வேண்டும்" என்றார்.