Published:Updated:

`மறக்காம பில் வாங்குங்க!’ - நீலகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு ஆணைய முதல் பெண் தலைவர் சித்ரா

சித்ரா

``மக்கள் வாங்கும் பொருள்களுக்கு மறக்காமல் பில் கேட்டு வாங்கி பத்திரமா வைக்கணும். அப்போதான் குறைபாடு இருந்தா இழப்பீடு பெற முடியும். நுகர்வோர் பிரச்னை எதுவா இருந்தாலும் தகுந்த ஆதாரத்தோட உடனடியா ஆணையத்தை தொடர்பு கொள்ளுங்க. உரிய நீதி கிடைக்கும்.’’

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் இயங்கி வருகிறது. 1986-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த ஆணையத்தின் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கிறார், சித்ரா. இதன் மூலம் நீலகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் நாற்காலியை அலங்கரிக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

ஊட்டி குளிரைச் சமாளிக்க ஸ்வெட்டருக்கு மேல் கோட் அணிந்து கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்த தலைவர் சித்ராவிடம் பேசினோம்...

’’சொந்த ஊர் திருப்பூர். வழக்கறிஞர் ஆகணும்னு என்பதுதான் என்னோட கனவு. விரும்பியபடியே 2005-ல வழக்கறிஞர் ஆனேன். 17 வருஷமா வழக்கறிஞரா இருந்து நூற்றுக்கணக்கான கேஸ்களை நடத்திருக்கேன். நீதித்துறைக்கு போகணும்னு விருப்பமும் ஆர்வமும் இருந்தது.

 சித்ரா
சித்ரா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதற்கான தேர்வுகளுக்குத் தயாராகி தேர்வு எழுதினேன். தேர்வுல பாஸ் ஆகி நுகர்வோர் பாதுகாப்பு தலைவரா நீலகிரிக்கு வந்துருக்கேன். இந்த மாவட்டத்தோட முதல் பெண் தலைவர் நான் என்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. மக்களுக்கு நேரடியா சேவை செய்ய கிடைச்ச பெரிய வாய்ப்பா இதை கருதுறேன்.

மக்கள் வாங்கும் பொருள்களுக்கு மறக்காமல் பில் கேட்டு வாங்கி பத்திரமா வைக்கணும். அப்போதான் குறைபாடு இருந்தா இழப்பீடு பெற முடியும். நுகர்வோர் பிரச்னை எதுவா இருந்தாலும் தகுந்த ஆதாரத்தோட உடனடியா ஆணையத்தை தொடர்பு கொள்ளுங்க. உரிய நீதி கிடைக்கும். அதே மாதிரி, நிறைய பெண்கள் இந்த துறைக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கு. சரியான முறையில பயன்படுத்திக்கணும்" என்றார்.