Published:Updated:

டிராக்டரில் சோறு, லோடு ஆட்டோவில் கறிக்குழம்பு; பெண்கள் கலந்துகொள்ளாத விநோத கிடா வெட்டு திருவிழா!

கிடா வெட்டு திருவிழா

கிடா வெட்டு திருவிழாவில் சமையல் வேலையையும் ஆண்கள் மட்டுமே செய்வார்கள்; அதிலும் பெண்கள் பங்கெடுக்க மாட்டார்கள். கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக பெண்கள் இல்லாமலேயே கிடா வெட்டு திருவிழா நடைபெற்று வருகிறது.

டிராக்டரில் சோறு, லோடு ஆட்டோவில் கறிக்குழம்பு; பெண்கள் கலந்துகொள்ளாத விநோத கிடா வெட்டு திருவிழா!

கிடா வெட்டு திருவிழாவில் சமையல் வேலையையும் ஆண்கள் மட்டுமே செய்வார்கள்; அதிலும் பெண்கள் பங்கெடுக்க மாட்டார்கள். கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக பெண்கள் இல்லாமலேயே கிடா வெட்டு திருவிழா நடைபெற்று வருகிறது.

Published:Updated:
கிடா வெட்டு திருவிழா

தஞ்சாவூர் அருகே 200 ஆண்டுக்கு மேலாக, ஆண்கள் மட்டுமே பங்கேற்க கூடிய கிடா வெட்டு திருவிழா நடைபெற்றது. ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் 800 கிடா வெட்டி,100 மூட்டை அரிசியில் சோறு வடித்து திறந்த வெளியில் பிரமாண்டமாக சிறு சலசலப்பும் இல்லாமல் 25,000 பேருக்கு விருந்து வைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிடா வெட்டு விருந்தில் சாப்பிடும் ஆண்கள்
கிடா வெட்டு விருந்தில் சாப்பிடும் ஆண்கள்

ஒரத்தநாடு அருகே உள்ள தளிகைவிடுதி கிராமத்தினருக்கு விவசாயமே வாழ்வாதராமாக இருந்து வருகிறது. அந்த ஊரில் உள்ள கோயிலில், 21 அடி உயரம் கொண்ட நல்லபெரமஅய்யனார் சிலை உள்ளது. அத்துடன் செம்முனி, முத்துமுனி ஆகிய தெய்வங்களின் சிலைகளும் உள்ளன. நல்லபெரமஅய்யனார் காவல் தெய்வமாக இருந்து, ஊரை காத்து வருவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விவசாயம் செழிக்கவும், ஊர் மக்கள் பிரச்னையின்றி வளமாக வாழவும் வேண்டிக் கொண்டு ஊரை காக்கும் அய்யனாருக்கு ஒவ்வொரு வருடமும் கிடா வெட்டி பூஜை செய்யப்படுவது வழக்கம். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை, பக்தர்கள் வழங்கிய 800 கிடாக்களை வெட்டி சமைத்து, அய்யனாருக்கு படைத்த பிறகு திறந்த வெளியில் கறி சாப்பாடு விருந்து வைத்துள்ளனர்.

பெண்கள் கலந்து கொள்ளாத திருவிழா
பெண்கள் கலந்து கொள்ளாத திருவிழா

இது குறித்து தளிகை விடுதி கிராமத்தை சேர்ந்த சிலரிடம் பேசினோம். ``எங்களைக் காக்கும் நல்லபெரமஅய்யனாருக்கு ஒவ்வொரு வருடமும் கிடா வெட்டி படையலிட்டு பூஜை செய்வது வழக்கம். இதற்காக பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடு வழங்குவார்கள். சொந்த பந்தங்கள் பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்கள் எனப் பலருக்கும் திருவிழாவிற்கு அழைப்பு கொடுத்தோம்.

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருவிழா தொடங்கியது. முக்கிய நிகழ்வான கிடா வெட்டு வியாழக்கிழமை இரவு எட்டு மணிக்குத் தொடங்கியது. பக்தர்கள் திரண்டு நிற்க ஒவ்வொரு கிடாவாக வெட்டப்பட்டது.

திருவிழா விருந்து
திருவிழா விருந்து

மொத்தம் 800 ஆடுகள் வெட்டியதுடன் உடனடியாக சுத்தம் செய்து குழம்பு வைத்தோம். அத்துடன் 100 மூட்டை அரிசியில் சாதம் வடித்தோம். நல்லபெரம அய்யனாருக்கு படையலிட்டு பூஜை செய்து சாமி கும்பிட்டோம்.

பின்னர், சாதத்தை 10க்கும் மேற்பட்ட டிராக்டரில் எடுத்துக் கொண்டோம். கறிக்குழம்பை லோடு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டோம். ஒரே நேரத்தில் 5,000 பேர் வரை சாப்பிடக்கூடிய திறந்தவெளி இடத்தில், தரையில் பக்தர்கள் உட்கார வைக்கப் பட்டனர். வாழையிலை போட்டு சாதம், கறியுடன் குழம்பையும் ஊற்றி விருந்து வைத்தோம். சாப்பாடு பரிமாறுவதற்கு மட்டும் 500க்கும் மேற்பட்ட நபர்களை நியமனம் செய்திருந்தோம்.

திருவிழா
திருவிழா

தளிகைவிடுதி, அக்கரைவட்டம், சில்லத்தூர், வெட்டிக்காடு, திருவோணம், கறம்பக்குடி, தெற்கு கோட்டை, வடக்குகோட்டை, கிளாமங்கலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், சிறுவர்கள் கிடா வெட்டு விருந்தில் கலந்து கொண்டனர். 25,000 பேர் வரை விருந்து சாப்பிட்டாலும் சின்ன சலசலப்பு, சண்டை, சச்சரவு எதுவும் ஏற்படாது.

எங்க வழக்கப்படி கிடா வெட்டு விருந்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். பெண்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். முன்னோர்கள் காலத்தில் இருந்தே இந்த முறை கடைப்பிடிக்கப் பட்டுள்ளது. விழாவில் மற்ற நிகழ்ச்சிகளில் மட்டும் பெண்கள் கலந்து கொள்வதுண்டு. ஆனால் கிடா வெட்டும் இடத்துக்கோ, வெட்டுவதை பார்க்கவோ வர மாட்டார்கள். அதே போல் விருந்து நடக்கும் இடத்திற்கும் வர மாட்டார்கள்.

கறி விருந்து
கறி விருந்து

சமையல் வேலையையும் ஆண்கள் மட்டுமே செய்வார்கள்; அதிலும் பெண்கள் பங்கெடுக்க மாட்டார்கள். கிட்டதட்ட 200 ஆண்டுகளாக பெண்கள் இல்லாமலேயே கிடா வெட்டு விருந்து நடைபெற்று வருகிறது. எங்கள் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்ததை அவர்களின் அடையாளமாக நாங்களும் கடைப்பிடித்து வருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.