Published:Updated:

பள்ளிப்பாடம் மட்டுமல்ல, பணப்பாடமும் அவசியம்... சொல்லிக்கொடுங்கள் குழந்தைகளுக்கு!

பணப்பாடம்
பிரீமியம் ஸ்டோரி
News
பணப்பாடம்

தொட்டில் பழக்கம்

ந்தவொரு நல்ல விஷயத்தையும் குழந்தைப் பருவத்தில் கற்கும்போது, அது வாழ்க்கை முழுவதற்கும் பயன் தரும் என்பார்கள். எத்தனையோ விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் நாம், நிதி மேலாண்மை பற்றியோ, பணத்தைக் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்தோ சொல்லிக்கொடுப்பதே இல்லை. பிள்ளைகள், நிதி சார்ந்த விஷயங்களில் அறிவார்ந்தவர்களாக வளர வேண்டும் என்றால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வளரும்போதே நிதிப்பாடங்களை அவசியம் கற்றுத் தர வேண்டும் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.

குழந்தைகளுக்கு எந்த மாதிரியான நிதி விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கலாம், எப்படிச் சொல்லிக் கொடுக்கலாம் போன்ற கேள்விகளுடன் நிதி ஆலோசகரும் `பிரைம் இன்வெஸ்டார்’ (Primeinvestor.in) நிறுவனத்தின் இணை நிறுவனருமான வித்யா பாலாவிடம் பேசினோம். “குழந்தைகளுக்கு நிதி விஷயங் களைச் சொல்லிக் கொடுக்காமல் விடுவதால், அவர்கள் பெரியவர்களாகி சம்பாதிக்கும் காலத்தில், பணத்தைக் கையாள்வதற்கு சிரமப்படுகிறார்கள். சிக்கனமாக இருக்கத் தெரியாமல், தேவையில்லாமல் செலவுசெய்து, வாகனக் கடன், கிரெடிட் கார்டு கடன், கேட்ஜெட் இ.எம்.ஐ என அனைத்து கடன் களையும் ஒரே நேரத்தில் வாங்கி சிக்கலுக்குள்ளா கிறார்கள்” என்றவர் குழந்தைகளுக்கு அவசியம் சொல்லிக் கொடுக்க வேண்டிய நிதிப்பாடங்கள் குறித்து விளக்கினார்.

பள்ளிப்பாடம் மட்டுமல்ல, பணப்பாடமும் அவசியம்... சொல்லிக்கொடுங்கள் குழந்தைகளுக்கு!

கையில் காசு கொடுங்கள்!

குழந்தைகளுக்கு ஏழு வயது ஆகிவிட்டாலே, அவர்கள் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங் களை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவத்துக்கு வந்துவிடுகிறார்கள். இந்த நேரத்தில் உண்டியல் வாங்கிக்கொடுப்பதோடு நின்றுவிடாமல், குழந்தைகளுக்கு நிதி சார்ந்த விஷயங்களைச் சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம். முதலில் அவர்களின் கையில் காசைக் கொடுத்து அவர்கள் இயல்பாக எப்படிக் காசை நிர்வகிக்கிறார்கள் என்று பாருங்கள். சில குழந்தைகள் காசை வெளியவே எடுக்காமல் `அனைத்தும் எனக்குதான்' என்று தலையணை யிலோ, உண்டியலிலோ பதுக்கி வைத்துக் கொள்வார்கள். சில குழந்தைகளோ மற்றவர் கேட்ட உடன் அப்படியே தூக்கிக் கொடுப் பார்கள். சில குழந்தைகள் காசு கிடைத்த மறுகணம் செலவு செய்துவிடுவார்கள். சில குழந்தைகளுக்கு காசு பற்றிய விவரங்களே தெரியாமல் அதன்மீது பற்றில்லாமல் இருக்கலாம். முதலில் இவற்றைக் கவனியுங்கள். குழந்தைகளின் போக்கைத் தெரிந்துகொண்ட பின்தான் அவர்களை வழிநடத்த முடியும்.

செலவு செய்யச் சொல்லிக்கொடுங்கள்!

குழந்தைகள் என்ன காசு கொடுத்தாலும் ஓடிப்போய் செலவு செய்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்க்கிறார்கள் என்றால், அவர்களோடு சென்று எதற்கு செலவு செய்கிறார்கள்... அது பயனுள்ள செலவா அல்லது வெட்டிச்செலவா என்பதை ஒரு நண்பனாக இருந்து கேளுங்கள். நமக்குத் தெரியாத பல விஷயங்கள் இன்று குழந்தை களுக்குத் தெரியும். உங்கள் குழந்தைகள் வெட்டியாகச் செலவு செய்கிறார்கள் என்றால். அவர்களோடு சென்று காசை பயனுள்ளதாகச் செலவழிக்க கற்றுக்கொடுங்கள். இதன் மூலம் வெட்டிச் செலவு தவறு என்பது புரிய வரும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வங்கிக் கணக்கு

குழந்தைகள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி அதில் ஈ-லாஞ்சு (e-loungue) மூலமாகவோ, இன்டர்நெட் பேங்கிங் மூலமாகவோ பணத்தை அதில் சேமித்துவைத்து தனக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்கள், கதைப் புத்தகங்கள், புராஜெக்ட், சைக்கிள் போன்றவற்றை வாங்குவதற்கு வழிகாட்டுங்கள். வங்கிக் கணக்கு தொடங்காமல், எளிமையாக உண்டியல் வாங்கிக் கொடுத்துவிடலாம். ஆனால், வங்கி சார்ந்த விஷயங்களை அவர்கள் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விடும்.

பாதுகாப்பான வங்கியியல் நடைமுறைகள், ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்துதல், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் அடிப்படை விதிமுறைகளை அவர்கள் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். டெபிட் கார்டுகள் தொலைந்துவிட்டாலோ, அவை தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டறிந்தாலோ என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள். கணக்கு வழக்குகளை அவ்வப்போது உங்களிடம் பகிர்ந்துகொள்ளும்படியும் பழக்கப்படுத்துங்கள்.

பள்ளிப்பாடம் மட்டுமல்ல, பணப்பாடமும் அவசியம்... சொல்லிக்கொடுங்கள் குழந்தைகளுக்கு!

வீட்டுச் செலவுகளையும் அவர்களே செய்யட்டும்!

பண நிர்வாகம் என்பது சரியான செலவு களைச் செய்து, பணத்தைச் சேமிப்பதுதான். ஆக, அவர்களோடு சென்று அவர்கள் கைகளாலேயே பவர் பில், போன் பில்களுக்குப் பணம் செலுத்த வையுங்கள். மறக்காமல் எதற்கு இந்தச் செலவு, வேறு எங்கெல்லாம் செலவைக் குறைக்க முடியும், செலவழிப்பதால் என்ன மாதிரியான அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி அடைகின்றன போன்றவற்றைப் புரிய வையுங்கள்.

பட்ஜெட் போடும்போது குழந்தைகள் உடன் இருக்கட்டும்!

ஒவ்வொரு மாதமும் வீட்டுக்கான பட்ஜெட் போடும்போது, குழந்தைகளை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தாலும், அருகில் அமரவைத்து, பெற்றோர்களின் பட்ஜெட் உரையாடலைக் கவனிக்க வையுங்கள். குடும்பத்தின் மாதாந்தர வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு, சேமிப்புக்காக ஒதுக்கப்படும் தொகை எவ்வளவு, எதில் சேமிக்கப்படுகிறது, எந்தச் செலவு சிக்கனப்படுத்தப்படுகிறது, எந்தச் செலவு அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைக்கப்படுகிறது போன்ற விஷயங்களைக் குழந்தைகள் கவனிக்கும்போது எதிர்காலத்தில் இந்த நடைமுறை அவர்களின் வாழ்க்கைக்குப் பயன்படும். பட்ஜெட் போட்டுவிட்டு, அதில் ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கும்படியோ, சந்தேகம் இருந்தால் கேள்வி கேட்கும்படியோ அவர்களுடனான உரையாடலை வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அவர்கள் பண நிர்வாகம் சார்ந்த விஷயங்களில் நல்ல தெளிவு பெறுவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சேமிப்பின் காரணம் கேளுங்கள்!

குழந்தைகள் சைக்கிள், ப்ளே ஸ்டேஷன், வீடியோ கேம்ஸ் என்று நிறைய திட்டங்கள் போட்டு, சேமிக்க ஆரம்பிப்பார்கள். அந்தச் சேமிப்பை குடும்பத் தேவைகளுக்காகக் கேட்கும்போது, கொடுக்க அடம்பிடிப்பார்கள். `பணம் என்னுடையது’ என அவர்கள் சொன்னால் சேமிக்கும் ஆர்வமும், அதற்கான முக்கியத்துவமும் அவர்களுக்குப் புரிந்து விட்டது என்று அர்த்தம். இருந்தாலும் குடும்பத்தின் அவசரத் தேவையை அவர்களுக்குப் புரியவைத்து, கேளுங்கள். அவர்களிடம் பணம் வாங்கி எதற்காகச் செலவு செய்தீர்கள் என்பதை நிச்சயம் தெரியப்படுத்த வேண்டும். வீட்டுக்கு ஏதாவது பொருள் வாங்கியிருந்தால், அதை அவர்களின் கண்களில்படும்படி வையுங்கள். அவசர நேரத்தில் தங்களுடைய சேமிப்பை குடும்பத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு வரும்.

அப்டேட்ஸ் முக்கியம்!

டிஜிட்டல் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை சில பெற்றோர் களே மறந்துவிடுகிறார்கள். ஆனால், இன்றைய நிலையில் பண நிர்வாகத்தில் டிஜிட்டல் பெரும்பங்காற்றி வருகிறது.

கொரோனா தொற்றுப் பரவலால் பணப் புழக்கத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதனால் ரொக்கப் பணப் பயன்பாட்டைக் குறைந்து, டிஜிட்டல் வாலட், டிஜிட்டல் பணப் பரிமாற்றம் ஆகியவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும், பாதுகாப் பாகப் பயன்படுத்துவது எப்படி போன்ற விஷயங்களையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

சூப்பர் மார்க்கெட்டுக்குப் பொருள் வாங்கப்போகும்போது, வாங்கிய பொருள் களுக்கான பணத்தைப் பணமாகக் கொடுக்காமல் கூகுள் பே அல்லது போன்பே வாயிலாக எப்படிச் செலுத்துவது என்பதைக் குழந்தை களுக்குச் சொல்லிக்கொடுங்கள்.