‘`ஒவ்வொரு வருடமும், 2,000 கோடி பென்சில்களைத் தயாரிக்க உலகம் முழுக்க 80 கோடி மரங்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றங்கள், மனிதர்கள் உட்பட பூமியில் வாழும் பல உயிரினங்களைப் பாதிக்கின்றன. எனவே, காகிதத்திலிருந்து பென்சில் தயாரித்து விற்பனை செய்ய நாங்கள் முடிவெடுத்தோம். இது ஒரு சிறு முயற்சி. இது கூட்டு முயற்சியாகும்போது, நிச்சயம் பலன் தரும்’’ என்கிறார், பெங்களூரில் வசிக்கும் அக்ஷதா பத்ரண்ணா.

‘`நானும் என் கணவரும் இந்தோனேசியா விலிருந்து இந்தியா திரும்பி பெங்களூரில் குடியேறினோம். சுற்றுச்சூழல் காக்கும் முதல் முயற்சியாக, பாலிதீன் `கேரி பேக்’குகளைப் பயன்படுத்துவதை நிறுத்தினேன். எவர்சில்வர் மற்றும் கண்ணாடிப் பாத்திரங் களைப் பயன்படுத்த ஆரம்பித்தேன். வீட்டில் சேரும் குப்பைகளைத் தரம் பிரித்து மக்கச் செய்கிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பொருள் களைத் தேர்ந்தெடுத்து வாங்கியபோது அவை விலை அதிகமாக இருப்பதை உணர்ந்தேன். உதாரணமாக, மூங்கிலில் தயாரித்த டூத் பிரஷ் ஒன்றின் விலை 200 ரூபாய். அதனால் சாமானியர் களும் வாங்கும் விலை யில், நானே சில பொருள் களைத் தயாரித்து விற்க முடிவு செய்தேன். என் ஐடியா கணவருக்குப் பிடித் திருந்ததால் அவர் பார்த்து வந்த மார்க்கெட்டிங் பணியிலிருந்து விலகி, என் முயற்சிக்குக் கைகொடுக்க ஆரம்பித்தார்’’ என்கிற அக்ஷதா, தன் கணவருடன் இணைந்து உடனடியாக செயலில் இறங்கியிருக்கிறார். சீனாவிலிருந்து இயந்திரத்தை இறக்குமதி செய்து, காகிதத்திலிருந்து பென்சில் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்.

‘`இதுவரை 10,000 பென்சில்களை 6,000 பழைய செய்தித்தாள்களிலிருந்து தயாரித்துள்ளோம். இப்போது பென்சில் ஷார்ப்னர், திருமண அழைப்பிதழ், வாழ்த்து மடல், விசிட்டிங் கார்டு எனப் பல பொருள்களைத் தயாரிக்கிறோம். மும்பை, டெல்லி, பஞ்சாப் எனப் பல மாநிலங்களில் எங்கள் தயாரிப்புகளை விரும்பி வாங்குகின்றனர். இதற்காகவே Dopology என்ற பிராண்டைத் தொடங்கினோம்.
விற்பனை என்பதைவிடச் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மக்களின் மனங்களில் ஏற்படுத்துவது மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. அவற்றையெல்லாம் மக்கள் இயக்கமாக மாற்றுவதே என் லட்சியம்!” என்கிறார் அக்ஷதா.