Published:Updated:

“எதிர்பார்ப்புல மட்டுமே கரையுது எங்க வாழ்க்கை!” - ‘பேரழகன்’ சினேகாவின் கண்ணீர்க் கதை

சினேகா
பிரீமியம் ஸ்டோரி
சினேகா

படத்துல நடிக்கறதுக்கான சம்பளம் முழுசா கிடைக்கணும்னா, நடிகர் சங்கத்துல உறுப்பினராகணும்னு சொன்னாங்க. சங்கத்துல உறுப்பினரா சேர ஒரு லட்சம் ரூவா கட்டச் சொன் னாங்க.

“எதிர்பார்ப்புல மட்டுமே கரையுது எங்க வாழ்க்கை!” - ‘பேரழகன்’ சினேகாவின் கண்ணீர்க் கதை

படத்துல நடிக்கறதுக்கான சம்பளம் முழுசா கிடைக்கணும்னா, நடிகர் சங்கத்துல உறுப்பினராகணும்னு சொன்னாங்க. சங்கத்துல உறுப்பினரா சேர ஒரு லட்சம் ரூவா கட்டச் சொன் னாங்க.

Published:Updated:
சினேகா
பிரீமியம் ஸ்டோரி
சினேகா

“வாழ்க்கையில கஷ்டம் வரலாம். ஆனா, கஷ்டம் மட்டுமே வாழ்க்கைனா எப்படிங்க சந்தோஷமா இருக்க முடியும்? என் வீட்டுக்காரர், நான், என் மவன், மருமவனு வீட்டுல நாலு பேரும் உயரம் குறைவான மாற்றுத்திறனாளிகள்தான். இந்தக் குறைபாட்டுடன், சராசரி மனிதர் களோடு சரிசமமா போட்டிபோட்டு எங்களால பிழைப்பை நடத்த முடியலை. நம்ம கஷ்டத்தைச் சொல்லி உதவியாச்சும் கேட்கலாம்னு முதலமைச்சர்கள், அதி காரிகள், நடிகர் சங்கம்னு ஏறாத படிக் கட்டுகளில்லை. ஆட்டோவுக்கான செலவும் ஆதங்கமும்தான் கூடுச்சே தவிர, ஒரு பலனும் கிடைக்கலை. தலையெழுத்துப்படி நடக்கிறது நடக் கட்டும்னு துணி யாவாரம் பண்ணிட்டிருக் கேன்” - தன் மனக்குமுறலை வருத்தத் துடன் கொட்டித் தீர்க்கிறார் கற்பகம்.

“எதிர்பார்ப்புல மட்டுமே கரையுது எங்க வாழ்க்கை!” - ‘பேரழகன்’ சினேகாவின் கண்ணீர்க் கதை

வறுமை, பால்யத்திலேயே கற்பகத்துக்கு உளவியல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வீடே கதியாய் முடங்கியவருக்கு, முகவரி கொடுத்தது சினிமா உலகம். ‘பேரழகன்’ திரைப்படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றினாலும், ‘சினேகா’ கதாபாத்திரம் இவரைப் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. இந்தி உட்பட பல மொழிகளிலும் 30-க்கும் அதிகமான படங்களில் நடித் திருந்தாலும், பொருளாதார சவால் இன்றுவரை கற்பகத்தை விடாமல் துரத்துகிறது. சென்னை, வியாசர்பாடி தினசரி மார்க்கெட் பகுதியில் அமைந் துள்ள கற்பகத்தின் வீட்டுக்குச் சென்றிருந் தோம். வீட்டு வாசற்படியிலுள்ள சிறிய நடைபாதையில் அமர்ந்து வியாபாரத் தைக் கவனித்தவாறே தன் கதையை விவரித்தார்.

“சென்னை, செங்குன்றத்துல ஏழ்மை யான குடும்பத்துல ஆறாவது பொண்ணா பிறந்தேன். என் ரெண்டு வயசுலயே அம்மா தவறிட்டாங்க. அக்காக்கள் அஞ்சு பேரும்தான் என்னை வளர்த்தாங்க. எப்ப யாச்சும்தான் நல்ல சாப்பாடும் புதுத் துணியும் கிடைக்கும். கிழிஞ்ச டிரஸ்லதான் ஸ்கூல் போவேன். மதியம் ஒண்ணா சாப்பிடுறப்போ, ‘இதெல்லாம் சாப்பாடா?’ன்னு நான் கொண்டு போன பழைய சாப்பாட்டை ஃபிரெண்ட்ஸ் கீழ தட்டிவிட்ருவாங்க. ஸ்கூல் முடிஞ்சு வர்றப்போ என் புத்தகப்பையை தண்ணியில வீசிடுவாங்க. ஏழ்மையால நான் எதிர்கொண்ட பாகுபாடுகள்தான் கொஞ்சநஞ்சமில்லை. ஸ்கூல் போகப் பிடிக்காம நாலாங்கிளாஸோடு படிப்பை நிறுத்திட்டேன். வீட்டுலயே முடங்கி னேன். புது நபர்கள்கிட்ட பேசவும் பழகவும் ரொம்பவே பயப்படுவேன்” - மழலை உணர்வு மாறாதவராகப் பேசும் கற்பகம், திருமணத்துக் குப் பின்னரே இயல்புநிலைக்கு மாறியிருக் கிறார்.

“எதிர்பார்ப்புல மட்டுமே கரையுது எங்க வாழ்க்கை!” - ‘பேரழகன்’ சினேகாவின் கண்ணீர்க் கதை

“என் வீட்டுக்காரர் பேரு ராஜா. ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்துல அப்பு கேரக்டர் கமல் சார்கூட வரும் மாற்றுத்திறனாளிகள் மூணு பேர்ல ஒருத்தரா நடிச்சிருப்பார். ‘மதராச பட்டினம்’ படத்துல ஆர்யா சார்கிட்ட அட்ரஸ் கேட்கிறவரா வருவார். ‘கல்யாணம் வேணாம்’னு நான் அழுது அடம்பிடிச்சும், விடாப்பிடியா என் வீட்டுல அவருக்கு என்னைக் கட்டிவெச்சுட்டாங்க. பல மாசத்துக்கு அப்புறமாதான் அவர்மேல எனக்கு அன்பு வந்துச்சு. ரெண்டு குழந்தைங்க பிறந்த பிறகுதான் பய உணர்வு சரியாகி எல்லோர்கூடவும் சகஜமா பேச ஆரம்பிச்சேன்.

‘அற்புதத்தீவு’ படத்துல என் வீட்டுக்காரர் நடிச்சுகிட்டிருந்தார். அப்போ அவருக்கு உடல்நிலை சரியில்லைனு தகவல் வரவே, அவரைப் பார்க்கலாம்னு நேர்ல போனேன். அந்தப் படத்துல நடிச்ச ஏராளமான மாற்றுத் திறனாளிகளோடு சேர்ந்து என்னையும் நடிக்க வெச்சாங்க. அப்புறமா ‘ஜெயம்’ படத்துல ‘வண்டி வண்டி ரயிலு வண்டி’ பாட்டோட தொடக்கத்துல சின்ன ரோல்ல தலை காட்டினேன். ‘பேரழகன்’ படத்துக்குப் பிறகு தான், ஆக்டிங் ஆர்வம் எனக்கு அதிகமாச்சு. ஆனாலும், நிலையான சினிமா வாய்ப்பு இல்லாததால, ஊறுகாய் யாவாரம், துணி யாவாரம், காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருள்கள் விற்கிறதுனு கஷ்டப்பட்டேன். நரம்புத் தளர்ச்சியால என் வீட்டுக்காரர் படுக்கையில விழுந்துட்டதால, அவரின் சம்பாத்தியமும் தடைப்பட்டுச்சு. அப்போ குடிசை வீட்டுலதான் வாழ்ந் தோம். மழை வந்தா வீடே வெள்ளக்காடா மாறிடும். தூக்கமில்லாம விடிய விடிய அழுதுகிட்டிருப்போம். தற்கொலை பண்ணிக்கலாமான்னு எத்தனையோ முறை யோசிச்சதுண்டு. எல்லாம் சரியாகிடுங்கிற நம்பிக்கையில கடன் வாங்கி அவசர அவசரமா வீட்டைக் கட்டினோம். 2017-ம் வருஷம், கிரஹப் பிரவேசத்துக்கு நாலு நாள்களுக்கு முன்னாடி மாரடைப்புல என் வீட்டுக் காரர் இறந்துட்டார்...” ஊற்றெடுக்கும் கண்ணீர், கற்பகத்தின் பேச்சை இடைமறிக்க, சில நிமிடங்களுக்குப் பின்னர் தொடர்ந்தார்...

குடும்பத்தினருடன்...
குடும்பத்தினருடன்...

``படத்துல நடிக்கறதுக்கான சம்பளம் முழுசா கிடைக்கணும்னா, நடிகர் சங்கத்துல உறுப்பினராகணும்னு சொன்னாங்க. சங்கத்துல உறுப்பினரா சேர ஒரு லட்சம் ரூவா கட்டச் சொன் னாங்க. எங்க கஷ்டத்தை எடுத்துச் சொல்லி, நலிந்த கலைஞருக்கான உதவியோ அல்லது ஓய்வூதியமோ கேட்கலாம்னு முந்தைய, இப்போதைய நடிகர் சங்கப் பொறுப்பாளர்களைச் சந்திக்க முயற்சி செஞ்சும் எந்தப் பலனும் கிடைக்கலை. மனசு வெறுத்துப்போய் நடிக்கிறதையே நிறுத்திட்டேன். ஆட்சி யில இருந்தப்போ கருணாநிதி ஐயா, ஜெயலலிதா மேடத்தைச் சந்திச்சு பலமுறை மனு கொடுத்துட்டேன். எந்த நல்லதும் நடக்கலை” - கால் தேய நடந்தும் பலன் கிடைக்காத ஆதங்கம் கற்பகத்துக்கு மன உளைச்சலை அதிகப்படுத்தியிருக்கிறது.

“உயர் ரத்த அழுத்தம் இருக்கிறதால என்னால வெளியிடங்களுக்குப் போக முடியலை. சும்மா இருக்க வேணாமேனு வீட்டு வாசல்ல துணி யாவாரம் செய்றேன். அதுல சொற்ப வருமானம் தான் கிடைக்குது. என் மகன் ஆனந்த், செருப்புக்கடையில கூலி வேலைக்குப் போறான். அவனுக்கும் நிலையான வருமானமில்லை. எங்கப்பா ராணுவத்துல வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அவர் இறப்புக்கு அப்புறமா, அவரின் பென்ஷன் பணத்துக்காகப் பல வருஷமா போராடிக்கிட்டிருக்கேன். அதுவும் கிடைக்கலை.

அப்பாவின் பென்ஷன், என் பையனுக்கு ஒரு வேலை, நடிகர் சங்கத் துல எனக்கு ஓய்வூதியம்... இதுதான் எங்களுக்கான எதிர்பார்ப்பு. எங்க வாழ்க்கையில எப்போ வசந்தம் பிறக்கும்னு தெரியலை. அது வர்றப்போ வரட்டும்னுதான் எங்களால முடிஞ்ச வேலையைச் செஞ்சு பிழைப்பை நடத்திட்டிருக்கோம்!”- எதிர்பார்ப்பு களுடன் காலத்தைக் கரைத்துக் கொண்டிருக்கிறார் `பேரழகன்' சினேகா.

அரசாங்கமும், நடிகர் சங்கமும்தான் கற்பகத்தின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும்.`