Published:Updated:

"இது என் சுதந்திரம்!" - கருணைக் கொலை செய்ய அனுமதி பெற்ற பெண் உளவியல் ஆலோசகர்!

நீதிமன்றத் தீர்ப்பு- சித்தரிப்பு படம்

தன்னைக் கருணை கொலை செய்ய வேண்டும் என அனா என்பவர் தொடர்ந்த வழக்கில், அதற்கான அனுமதியை அளித்து பெரு நாட்டு உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. பெரு நாட்டு சட்டப்படி, ஒருவரின் தற்கொலைக்கு உதவுவதும் நோய்வாய்ப்பட்ட நோயாளியைக் கருணை கொலை செய்வதும் தண்டனைக்குரியது.

"இது என் சுதந்திரம்!" - கருணைக் கொலை செய்ய அனுமதி பெற்ற பெண் உளவியல் ஆலோசகர்!

தன்னைக் கருணை கொலை செய்ய வேண்டும் என அனா என்பவர் தொடர்ந்த வழக்கில், அதற்கான அனுமதியை அளித்து பெரு நாட்டு உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. பெரு நாட்டு சட்டப்படி, ஒருவரின் தற்கொலைக்கு உதவுவதும் நோய்வாய்ப்பட்ட நோயாளியைக் கருணை கொலை செய்வதும் தண்டனைக்குரியது.

Published:Updated:
நீதிமன்றத் தீர்ப்பு- சித்தரிப்பு படம்

கருணைக்கொலை என்ற கருத்தை இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகள் ஏற்காத நிலையில், பெரு நாட்டில் ஒரு பெண்ணைக் கருணைக்கொலை செய்வதற்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கருணைக்கொலை
கருணைக்கொலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரு நாட்டைச் சேர்ந்த 44 வயது உளவியல் ஆலோசகர் அனா எஸ்ட்ராடா. இவர் பாலிமயோசிட்டிஸ் (Polymyositis) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். உடலின் தசைகள் பலவீனமாகி இருந்த இடத்தில் இருந்து எழுந்து கொள்ளக்கூடிய முடியாத வகையில் உடலை பலவீனப்படுத்தும் நோய் இது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஐந்து ஆண்டுகளாக பெரும்பாலான நேரம் படுத்த படுக்கையில் செயற்கை சுவாசத்துடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தன்னைக் கருணை கொலை செய்ய வேண்டும் என, அனா வழக்கு தொடர்ந்தார். தற்போதுதான் அதற்கான அனுமதியை அளித்து கருணைக் கொலைக்கான உரிமையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவு
உச்ச நீதிமன்ற உத்தரவு

பெரு நாட்டு சட்டத்தின்படி ஒருவரின் தற்கொலைக்கு உதவுவதும் நோய்வாய்ப்பட்ட நோயாளியைக் கருணை கொலை செய்வதும் தண்டனைக்குரியது. கருக்கலைப்பு மற்றும் தன்பால் ஈர்ப்புத் திருமணம் ஆகியவையும் சட்ட விரோதமானவை. இந்நிலையில் கருணைக்கொலை பற்றிய இந்தத் தீர்ப்பு, ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. லத்தீன் அமெரிக்கா நாடுகளில் கொலம்பியாவில் மட்டுமே சில நிபந்தனைகளின் கீழ் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

தீர்ப்பில், அனா தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்கான விருப்பத்தை வெளிப்படுத்திய நாளில் இருந்து 10 நாள்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனாவின் வாழ்வை நிறைவு செய்வதற்காக மருந்து வழங்கும் மருத்துவரையும், உச்சநீதிமன்றம் தண்டனைகளில் இருந்து விடுவித்துள்ளது.

கருணைக் கொலை
கருணைக் கொலை

தீர்ப்பு பற்றி தெரிவித்துள்ள அனா "நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு என் உடலின் தவிர்க்க முடியாத துயரத்தை சமாளிக்க உதவும். நான் துன்பத்தைத் தவிர்க்க விரும்புகிறேன். அதனால் வலிகளைத் தவிர்க்கிறேன்‌. எல்லாவற்றுக்கும் மேலாக இது என் வாழ்க்கையை மட்டுமல்லாமல் என் சுதந்திரத்துடன் தொடர்புள்ளது" என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக உள்நாட்டிலேயே எதிர்ப்புக் குரல்களும் கிளம்பியுள்ளன.