Published:Updated:

குழந்தைகளை நல்வழிப்படுத்த பொம்மைகளும் கதைகளும் போதும்!

- ‘பொம்மலாட்டம்’ பத்மினி
பிரீமியம் ஸ்டோரி
- ‘பொம்மலாட்டம்’ பத்மினி

- ‘பொம்மலாட்டம்’ பத்மினி

குழந்தைகளை நல்வழிப்படுத்த பொம்மைகளும் கதைகளும் போதும்!

- ‘பொம்மலாட்டம்’ பத்மினி

Published:Updated:
- ‘பொம்மலாட்டம்’ பத்மினி
பிரீமியம் ஸ்டோரி
- ‘பொம்மலாட்டம்’ பத்மினி

தமிழர்களின் தொன்மை யான கலைகளில் ஒன்று பொம்மலாட்டம். அழிந்துவரும் இந்தக் கலைக்குப் புத்துயிர் அளித்து வருகிறார் பத்மினி ரங்கராஜன். தன் மகனுக்குக் கதை சொல்வதற்காக பொம்மலாட்டக் கலையைக் கற்றுக்கொண்டவர், பல ஆயிரம் பேருக்கு இந்தக் கலையைப் பயிற்றுவித்திருப்ப துடன், பொம்மைகள் வாயிலாகக் கதை சொல்லியாகவும் செயல்படுகிறார். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர், கர்நாடகாவில் வளர்ந்து, திருமணத்துக்குப் பிறகு, ஹைதரா பாத்தில் குடியேறியுள்ளார்.

“என் பையன் குழந்தையா இருந்தப்போ, அவனை ஆக்டிவ்வா வெச்சுக்க நிறைய கதைகள் சொல்வேன். அவனோடு அக்கம் பக்கத்துக் குழந்தைகளும் என்கிட்ட ஆர்வமா கதை கேட்டாங்க. குழந்தைகளோடு சேர்ந்து மண் பொம்மைகள் செய்யுறது, கார்ட்டூன் கேரக்டர்கள் மாதிரி நடிக்குறதுனு மழலைகளின் உலகத்துல முழுமையா இணைஞ்சேன். ஒருமுறை பையனோட ஸ்கூல்ல கதை சொல்ற வாய்ப்பு கிடைச்சது. நான் பயன்படுத்தின குரங்கு பொம்மையின் பேரு என்னன்னு ஒரு குழந்தை கேட்ட கேள்வி, என்னை யோசிக்க வெச்சது. பிறகு, பொம்ம லாட்டக் கலைஞர்கள் சிலரைச் சந்திச்சு, பொம்மைகளுக்குப் பெயர் வெச்சு, இந்தக் கலையின் மூலமா முறைப்படி கதை சொல்லக் கத்துக்கிட்டேன்” என்பவர், அந்த ஆர்வத்தில் பயிற்சியாளராகவும் மாறியிருக்கிறார்.

குழந்தைகளை நல்வழிப்படுத்த பொம்மைகளும் கதைகளும் போதும்!
குழந்தைகளை நல்வழிப்படுத்த பொம்மைகளும் கதைகளும் போதும்!

“விலை அதிகமான பொம்மைகளை வெச்சுதான் கதைகள் சொல்லணும்னு அவசியமில்ல. பேப்பர் பொம்மைகளைப் பயன்படுத்தியும் கதை சொல்லலாம். கதை களைக் குழந்தைகள்கிட்ட கொண்டுபோக உதவுற கருவிகள்தான் பொம்மைகள். பிள்ளைகளை ஈர்க்கும் வகையில கதை சொல்றதுதான் முக்கியமானது. அதனாலதான், 15 வருஷங்களுக்கு மேலாக வேஸ்டேஜ் பொருள்களை மட்டுமே பயன்படுத்தி பொம்மைகள் செய்யுறேன்” என்று யதார்த்தம் சொல்கிறார். ஹைதராபாத்திலுள்ள கலாசார வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்குப் பொம்மைகளைக் கொண்டு கதை சொல்லப் பயிற்றுவித்திருக்கிறார் இவர்.

‘ஸ்பூர்த்தி தியேட்டர்’ என்னும் தனது பயிற்சி மையத்தின் மூலம், பொம்மலாட்டக் கலையின் வாயிலாக புராணக் கதைகளை மேடைகளில் அரங்கேற்றுகிறார். குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, குழந்தைத் திருமணத் தடுப்பு, பழங்குடிகள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர் களுக்கான அரசின் நலத்திட்டங்களைப் பிரபலப்படுத்துவது, பள்ளி மாணவர்களுக்குக் கதை சொல்வது எனச் சமூக நோக்கத்திலான பல்வேறு பணிகளையும் செய்து வருகிறார்.

குழந்தைகளை நல்வழிப்படுத்த பொம்மைகளும் கதைகளும் போதும்!
குழந்தைகளை நல்வழிப்படுத்த பொம்மைகளும் கதைகளும் போதும்!
குழந்தைகளை நல்வழிப்படுத்த பொம்மைகளும் கதைகளும் போதும்!

“பொம்மையில கயிறுகட்டி, கதைக்கேற்ப ஆடச் செய்யுற நூல்பாவைக்கூத்தும், துணியாலான திரைக்குப் பின்னே பொம்மை களைக் காட்சிப்படுத்துற தோல்பாவைக் கூத்தும், இரும்பு உலோகத்தாலான பொம்மையில கயிற்றைப் பயன்படுத்தி ஆடச் செய்யுற கட்ட பொம்மலாட்டமும்தான் தமிழகம் உட்பட பல மாநிலங்கள்லயும் பிரபலம். இந்த முறைகளைவிடவும் எளிமை யானதா இருக்குறதால, பொம்மைகளைக் கையில பிடிச்சு கதைகளைச் சொல்லுற கைப்பாவைக்கூத்து முறையைத்தான் அதிகம் கடைப்பிடிக்கிறேன். நல்லது கெட்டதைப் புரியும்படிச் சொல்லி, குழந்தைகளைச் சரியான வழியில வளர்க்கவும், அவர்களின் சிந்தனை யாற்றலைச் சீர்படுத்தவும் கதைகள் ரொம்பவே பயன்தரும். எளிமையான உருவங்களைச் செஞ்சு, ஆண், பெண், விலங்குகள்னு ஒவ்வொரு கேரக்டருக்குமான குரல்களை வித்தியாசப் படுத்தி, நாமும் குழந்தையாய் மாறிய உணர்வில் கதை சொல்லிப்பாருங்க. குழந்தைகள் கதைகளின் வழியே பாடங்களையும்கூட ஆர்வமா கவனிப்பாங்க”

- கதை சொல்வதன் அவசியத்தை, காரணத் துடன் கூறுபவர், கிச்சன் மற்றும் பூஜைப் பொருள்களின் கழிவுகளிலிருந்து அகர்பத்தி தயாரித்துப் பயன்படுத்திவருவதுடன், பயிற்சியும் அளிக்கிறார்.

“ஒரு காலத்துல பொம்மலாட்டத்தின் மூலமா, மக்களை நல்வழிப்படுத்துற இதிகாசக் கதைகளையும், முக்கியமான செய்திகளையும் தெரியப்படுத்தினாங்க. கல்யாண வரன்கள் பத்தின தகவல்களைப் பரப்பி, குடும்ப சிக்கல் களுக்கு ஆலோசனைகள் கொடுத்ததுடன், தமிழ்நாட்டுல இந்தக் கலையின் வழியே அரசியல் பிரசாரமும் செய்திருக்காங்க. கால ஓட்டத்துல, பொம்மலாட்டம் உள்ளிட்ட பெரும்பாலான கிராமியக் கலைகளுக்கும் வரவேற்பு குறைஞ்சுடுச்சு. பாரம்பர்ய கலைகள் அருகிவருவதால் இந்தத் தொழிலை நம்பியிருக்குற கலைஞர்களின் வாழ்வாதாரம் முடங்குவதோடு, நம் கடந்த கால அடையாளங் களும் தொலைந்துபோகும்”

- பத்மினியின் ஆதங்கக் குரல், எச்சரிக்கை மணியாக உரக்க ஒலிக்கிறது.