Published:Updated:

எலாஸ்டிக் ஆபத்து இல்லவே இல்லை... பக்குவமான பருத்தி உள்ளாடைகள்! - பொன்மணி

பொன்மணி
பிரீமியம் ஸ்டோரி
News
பொன்மணி

உதவும் கரம்

“வாழ்க்கை ரொம்ப எளிமையானது. நாம்தான் வாழ்க்கையை ரொம்ப பிரமாண்டமாக நினைச்சுக்கிட்டு ஓடிக்கிட்டே இருக்கோம். நம்முடைய அடிப்படைத் தேவை களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வாழ ஆரம்பிச்சா... பரபரப்புகளுக்கும் பதற்றத்துக்கும் இடம்கொடுக்காமல் நிம்மதியா இருக்கலாம்’’ - பக்குவப்பட்ட மனநிலையுடன் பேச ஆரம்பிக்கிறார் பொன்மணி. ஃபேஷன் டிசைனரான இவர், கிருஷ்ணகிரி அருகில் உள்ள புளியானூர் கிராமத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சில பெண் களுடன் இணைந்து பருத்தி உள்ளாடைகள், துணி பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இனி, பொன்மணியே உங்களிடம் பேசுகிறார்...

“எனக்கு சொந்த ஊரு மதுரை. ஃபேஷன் டிசைனிங் மீது இருந்த ஆர்வத்தால் கோவையில் டிசைனிங் கோர்ஸ் படிச்சேன். கல்லூரியில் படிக்கும்போதே ஆடை வடிவமைப்பில் நிறைய புது முயற்சிகள் செய்து பார்த்திருக்கேன். ஒவ்வோர் ஆடை தயார் செய்யும்போதும் நிறைய துணிகள் வீணாகும். துணியிலிருக்கும் சமிக்கிகளும் ஸ்டோன்களும் மண்ணில் மட்குவதற்கு ஒரு வருஷம்கூட ஆகும்னு புரிஞ்சுது. ஆனால், காட்டன் துணிகள் நம்முடைய பயன்பாட்டுக்குப் பிறகு, முழுமையாக மண்ணில் மட்கும் தன்மை கொண்டவை. அதனால், நான் வடிவமைக்கும் ஆடை காட்டனில்தான் இருக்கணும்னு முடிவு பண்ணியிருந்தேன்.


எலாஸ்டிக் ஆபத்து இல்லவே இல்லை... பக்குவமான பருத்தி உள்ளாடைகள்! - பொன்மணி

படிப்பு முடிச்சு நிறைய இடங்களுக்குப் பயணங்கள் செய்ய ஆரம்பிச்சேன். பயணத்தின் மூலம் ‘குக்கூ’ என்கிற நண்பர்கள் குழுவினர் அறிமுகமானாங்க. வாழ்வியல் சார்ந்த விஷயங்களை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் அந்த நண்பர்கள் குழு வில் என்னையும் இணைச்சுக்கிட்டேன். `குக்கூ’ மூலமா புளியானூர் கிராம மக்கள் அறிமுகம் ஆனாங்க. அந்த மக்களோடு நெருங்கிப்பழகும்போது அவங்களுக்காக ஏதாவது பண்ணணும்னு தோணுச்சு. அங்கிருக்கும் பெண்களின் பொருளாதார தேவையை உயர்த்த, அங்கேயே தங்கி அவங்களுக்கு தையல் கத்துக்கொடுக்க லாம்னு முடிவு பண்ணேன். ஆரம்பத்தில் அதெல்லாம் வேண்டாம்னு சொன்னாங்க. கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி புரியவெச்சு சம்மதிக்க வெச்சேன். ஒருகட்டத்துல தையல் கத்துக்கிட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தர, நாங்களே ஒன்று சேர்ந்து ஏதாவது பெண்களுக்கு உபயோகமான ஆடைகளை வடிவமைக்கலாம்னு தோணுச்சு” என்ற பொன்மணிக்கு உருவான யோசனைதான் பருத்தி உள்ளாடைகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எலாஸ்டிக் ஆபத்து இல்லவே இல்லை... பக்குவமான பருத்தி உள்ளாடைகள்! - பொன்மணி

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“ஒரு ஃபேஷன் டிசைனர்னா அதிக விலை வைத்து விற்கக்கூடிய ஆடைகளை வடிவமைக்கணும்னு தான் எல்லாரும் நினைக்கிறாங்க. ஆனா, நான் வடிவமைக்கும் ஆடைகள் சராசரி மக்களுக்கும் பயன்படணும்னு நினைச்சேன். கிராமங்களில் நிறைய பெண்களுக்கு உள்ளாடை குறித்த விழிப்புணர்வு குறைவா இருக்கு. நாம் தேர்வு செய்யும் உள்ளாடைகள் சில நேரம் மார்பகப் புற்றுநோய்க்கு ஒரு காரணமா அமையும். அது மட்டுமல்ல; வண்ண வண்ண நிறங்களில் உள்ளாடை அணியும்போது வெள்ளைப்படுதல் பிரச்னையால், அதன் நிறத்தில் கவனம் செலுத்தணுங்கிறதுகூட பெண்கள் மறந்துடுறாங்க. அதனால் பெண்களுக்குப் பயன்படும் வகையில் சுத்தமான வெள்ளை நிற காட்டன் உள்ளாடைகள் தயாரிச்சு விற்பனை செய்யலாம்னு முடிவுக்கு வந்தேன்.

பொன்மணி
பொன்மணி

என்னோட ஐடியாவைச் சொன்னதும் நிறைய பேர் சிரிச்சாங்க. ‘காட்டன் துணியில் உள்ளாடையெல்லாம் மக்கள் வாங்க மாட்டாங்க’ன்னு சொன்னாங்க. ஆனா, எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. நண்பர்கள் சிலரிடமிருந்து பழைய தையல் மெஷின்களை வாங்கி ஆர்வம் இருக்கும் சில பெண்களோட இணைந்து களத்தில் இறங்கினேன். ‘துவம்’ என்கிற பெயரில் பருத்தி உள்ளாடைகள் தயாரிக்க ஆரம்பிச்சோம். எலாஸ்டிக் வெச்ச உள்ளாடைகள் உடம்புக்கு நல்லதில்லை. அதனால, பழைய முறைப்படி நாடா வெச்சதுதான் தைச்சுக் கொடுப்போம். வற்புறுத்தி கேட்கிற சிலருக்கு மட்டும் எலாஸ்டிக் வெச்சுக் கொடுப்போம். என்னோட முயற்சிகளுக்கு இல்லத்தரசிகள்கிட்ட நல்ல வரவேற்பு இருந்துச்சு. சமூக வலைதளங்கள் மூலமாகவும் நிறைய பேரை சென்றடைய முடிஞ்சுது.

இப்போ வெற்றிகரமா மூணு வருஷங்கள் ஆச்சு. முக்கியமா கேக்கறவங்களுக்கு மட்டும்தான் தயாரிச்சுக் கொடுக்கிறோம். காட்டன் துணியை மொத்தமாக ஈரோட்டிலிருக்கும் நெசவாளிகள்கிட்ட இருந்து வாங்குறோம். பெரிய அளவில் லாபம் இல்லைன்னாலும் சமுதாயத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும், பெண்களின் ஆரோக்கியத்திலும் என்னால் ஒரு சின்ன மாற்றத்தைக் கொண்டுவர முடிஞ்சுருக்குன்னு நினைக்கும்போது ஒரு திருப்தி கிடைக்குது.

இப்போ அடுத்த முயற்சியா துணியில் ஆன பொம்மைகள் தயார் செய்ய ஆரம்பிச்சுருக்கோம். யானை, மீன் வடிவில் பொம்மைகள் தயார் செய்றோம். இது குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்பதால் நிறைய பெற்றோர் ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. அடுத்தடுத்து செயல்படுத்த நிறைய திட்டங்கள் இருக்கு. நம்மால் முடிஞ்ச சின்ன மாற்றத்தையாவது சமூகத்தில் விதைப்போம்” - தம்ஸ்அப் காட்டுகிறார் பொன்மணி.