Published:Updated:

ரியானாவின் ட்வீட்... விமர்சனத்துக்குள்ளான தனிப்பட்ட வாழ்க்கை!

பாப் பாடகி ரியானா.
பிரீமியம் ஸ்டோரி
பாப் பாடகி ரியானா. ( Twitter )

எல்லாருக்கும் நாம் நல்லவர்களாக இருக்க முடியாது. ஆனால், நிச்சயமாக நம்மை பிடித்தவர்களுக்கு நாம் எப்படி இருந்தாலும் நம்மை பிடிக்கும்.

ரியானாவின் ட்வீட்... விமர்சனத்துக்குள்ளான தனிப்பட்ட வாழ்க்கை!

எல்லாருக்கும் நாம் நல்லவர்களாக இருக்க முடியாது. ஆனால், நிச்சயமாக நம்மை பிடித்தவர்களுக்கு நாம் எப்படி இருந்தாலும் நம்மை பிடிக்கும்.

Published:Updated:
பாப் பாடகி ரியானா.
பிரீமியம் ஸ்டோரி
பாப் பாடகி ரியானா. ( Twitter )
டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியிருந்தார் பிரபல பாப் பாடகி ரியானா. சர்ச்சையைக் கிளப்பியது அந்த ட்வீட். இதன் அடுத்தகட்டமாக கூகுளில் அதிகம் தேடப்பட்டன, விமர்சிக்கப்பட்டன இவரின் மத அடையாளங்களும் தனிப்பட்ட வாழ்க்கையும். ஒருவர் தனது கருத்தைப் பொதுவெளியில் வைக்கும்போது அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்வதும் விமர்சனம் செய்வதும் என்ன வகையான மனநிலை?
ரியானாவின் ட்வீட்... விமர்சனத்துக்குள்ளான தனிப்பட்ட வாழ்க்கை!

தன் குழந்தைப் பருவத்தில் பெற்றோரின் திருமண உறவு சிக்கலால் பாதிக்கப்பட்டவர் ரியானா. மன அழுத்தத்துடன் போராடியவர், தன்னை திசை திருப்ப பயன்படுத்திய வழிதான் இசை. 16 வயதில் தற்செயலாக இசை உலகில் நுழைந் தார். மூன்றாவது பாடலிலேயே உலகளவில் பிரபலமடைந்து, இசையுலகில் முக்கியமான கிராமி விருதைப் பெற்றார். பணமும் புகழும் கைக்கு வந்து சேர்ந்தாலும் பழையதை மறக்கவில்லை அவர்.

குடும்ப பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் 2006-ம் ஆண்டு ‘தி பிலீவ் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத் தொடங்கி இன்றுவரை உதவி வருகிறார். அதுமட்டுமன்றி, கடந்த 2012-ம் ஆண்டு முதல் ‘கிளாரா லயனல் ஃபவுண்டேஷன்’ மூலம் கல்வி மற்றும் அவசரகால உதவிகளையும் உலகளவில் செய்துவருகிறார். ரியானாவின் அந்தரங்கத்தை விமர்சிக்கும் பலருக்கும் அவரது இன்னொரு பக்கம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பாப் பாடகி ரியானா.
பாப் பாடகி ரியானா.

ஒருவரை விமர்சிக்கும்போது அவர் எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாகிறார் என்பதை உணராமலேயே பல வேளைகளில் நாம் கடந்து விடுகிறோம். ஒரு வரியில் சொன்னால், ‘உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா’ கதைதான் இப்போது வரை தொடர்கிறது.

“எல்லாருக்கும் நாம் நல்ல வர்களாக இருக்க முடியாது. ஆனால், நிச்சயமாக நம்மை பிடித்தவர்களுக்கு நாம் எப்படி இருந்தாலும் நம்மை பிடிக்கும்” என்று சொல்லும் ரியானா, இந்த விமர்சனத்தையும், சலசலப் பையும் புன்னகையுடன் கடந்தி ருக்கிறார்!

இதே புன்னகையோடும் தைரியத்தோடும் நில்லுங்கள் ரியானா.