நாட்டிலுள்ள பொதுத்துறைக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று, நேஷனல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட். இந்த நிறுவனத்தில் பெண்களுக்குப் பயனளிக்கும் திட்டங்கள் பற்றியும் வேலைவாய்ப்புகள் பற்றியும் விளக்குகிறார் சென்னை மண்டல மேலாளர் அமுதா.

இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை பெண்களுக்கு விழிப்புணர்வு குறைவாக உள்ளது என்ற கருத்து பொதுவாக இருந்துவருகிறது. சேமிப்பு என்றாலே தங்கம் அல்லது வங்கி வைப்பு நிதியாகவே முதலீடு செய்வது வழக்கம். ஆனால், இன்ஷூரன்ஸ் தொகைதான் ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. மனிதர்களுக்கான இன்ஷூரன்ஸ் என்பதைத் தாண்டி வீட்டிலுள்ள உடைமைகளுக்கு இன்ஷூரன்ஸ் செய்துகொள்ள முடியும் என்பது பலருக்கும் புதிய தகவலாகவே இருக்கும். இந்த அடிப்படையில்தான் காப்பீட்டுத்துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நினைத்தோம். ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய பெண்கள்கூட, இன்று மாதம் 20,000 ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி வருகிறார்கள்” என்கிற அமுதா, முகவர்களாக விரும்பும் பெண்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறார்.

காப்பீட்டு முகவராகச் செயல்படுவதற்கு ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய பெண்கள்கூட, இன்று மாதம் 20,000 ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி வருகிறார்கள்!
அமுதா

“முகவராவதற்குப் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். அரசு நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களைத்தவிர, வேறு யார் வேண்டுமானாலும் பகுதிநேரப் பணியாக இதைச் செய்யலாம். மாதம் இத்தனை பாலிசிகள் எடுக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. அவர்கள் எடுக்கும் பாலிசிகளுக்கேற்ப கமிஷன் தொகை வழங்கப்படும்.

குடும்பத்துக்கு வருமானம் ஈட்டவேண்டிய நிலையிலுள்ள பெண்கள், கல்லூரி மாணவிகள் எனப் பலரும் இப்போது இன்ஷூரன்ஸ் முகவர்களாக இணைத்துக்கொள்கிறார்கள்.கொள்கிறார்கள்.

முகவராக இணைய விரும்புகிறவர்களுக்கு முதலில் இலவச பயிற்சி வழங்குகிறோம். அதன்பின் ஆன்லைன் தேர்வு நடைபெறும். அதில் வெற்றிபெற்றவர்களை முகவர்களாக நியமித்து, தேவையான தகவல்கள் வழங்கி பாலிசிகள் எடுக்க வைக்கிறோம். பெண்கள் நலன்கருதி தேர்வுக் கட்டணம், பயிற்சிக் கட்டணங்களையும் ரத்து செய்துள்ளோம்” என்கிறவர் பெண்களுக்கான பாலிசிகள் பற்றிக் குறிப்பிடுகிறார்.

``மகளிருக்கான தனிநபர் விபத்து காப்பீடு, மகளிருக்கான மருத்துவ காப்பீடு, மகளிர் தலைமையிலான குடும்ப மருத்துவக் காப்பீடு, பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவும் பாக்யஸ்ரீபாலிசி, மாணவர்களின் பாதுகாப்பு பாலிசி, பெண்கள் சுய உதவிக்குழுவினருக்கான குழு விபத்து காப்பீடு மற்றும் தனிநபர் பாலிசிகளும் உள்ளன. எங்கள் நிறுவனத்தில் அதிக பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். காப்பீட்டுச் சேவையைப் பெண்களிடம் கொண்டுசேர்க்கும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறோம்” என்கிறார்.