Published:Updated:

`இதுதான் முதல்முறை!' கடற்படையில் சாதித்த 2 பெண்கள்... ரஃபேலுக்கும் வருகிறார் பெண் போர் விமானி!

இந்தியக் கடற்படை ( Photo: Twitter / SpokespersonMoD )

இந்தப் பெண் அதிகாரிகள் தங்கள் கன்ட்ரோலில் இருக்கும் சென்ஸார் உதவியைப் பயன்படுத்தி, எதிரியின் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்கப்பல்களை பற்றி ஹெலிகாப்டரில் இருப்பவர்களுக்குத் தகவல் கொடுக்க, அவர்கள் தாக்குதலைத் தொடங்குவார்கள்.

`இதுதான் முதல்முறை!' கடற்படையில் சாதித்த 2 பெண்கள்... ரஃபேலுக்கும் வருகிறார் பெண் போர் விமானி!

இந்தப் பெண் அதிகாரிகள் தங்கள் கன்ட்ரோலில் இருக்கும் சென்ஸார் உதவியைப் பயன்படுத்தி, எதிரியின் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்கப்பல்களை பற்றி ஹெலிகாப்டரில் இருப்பவர்களுக்குத் தகவல் கொடுக்க, அவர்கள் தாக்குதலைத் தொடங்குவார்கள்.

Published:Updated:
இந்தியக் கடற்படை ( Photo: Twitter / SpokespersonMoD )

ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் எல்லா துறைகளிலும் சாதிக்க முடியும் என்று நாளுக்கு நாள் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றனர். இந்தியக் கடற்படையிலும் இப்போது இரண்டு பெண்கள், முதல் பெண் போராளிகளாக கடற்படையின் ஹெலிகாப்டரை போர்க்கப்பலின் தளத்தில் இருந்து இயக்க உள்ளனர். அவர்கள், குமுதினி த்யாகி மற்றும் ரிதி சிங் (Sub Lieutenant Kumudini Tyagi and Sub Lieutenant Riti Singh).

இதற்கு முன்பு பெண்கள் மருத்துவர் உள்ளிட்ட பிற பொறுப்புகளில் கடற்படையில் பணிபுரிந்து வந்தாலும், போர் முனையில் தாக்குதல் நடத்தும் குழுவில் இடம்பெற்றதில்லை. தங்கும் இடத்தில் ப்ரைவஸி இல்லாதது, பெண்களுக்கான பாத்ரூம் வசதி இல்லாதது எனப் போர் தளத்தில் பெண்களுக்கான வசதிகள் இல்லாத காரணத்தால், பெண்கள் போர் முனைப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படாமலேயே இருந்தனர்.

இப்போது, குமுதினியும் ரிதியும் அந்த வெற்றிடத்தை நிரப்பவுள்ளனர். போர் நிலை வருமெனில், இந்தப் பெண் அதிகாரிகள் தங்கள் கன்ட்ரோலில் இருக்கும் சென்ஸார் உதவியைப் பயன்படுத்தி, எதிரியின் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்கப்பல்களை பற்றி ஹெலிகாப்டரில் இருப்பவர்களுக்குத் தகவல் கொடுக்க, அவர்கள் தாக்குதலைத் தொடங்குவார்கள். நாளடைவில் இவர்கள் கடற்படையின் உயர் ரக MH-60 R ஹெலிகாப்டரிலும் பறப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதே நேரத்தில், இந்திய விமானப்படையிலும் ஒரு பெண்ணின் பெயர் போர் விமானியாக ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், ரஃபேல் ஜெட்டை வானில் இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கும். மேலும், சில பயிற்சிகளின் பின்னர்தான், இவர் நியமனம் உறுதிசெய்யப்படும் என்று கூறப்படுகிறது.

பெண்கள் / கடற்படை
பெண்கள் / கடற்படை
Photo: Twitter / SpokespersonMoD

ஏற்கெனவே, 2016-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் மூன்று பெண்கள் முதன்முதலாகப் போர் விமானிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது விமானப்படையில் மொத்தம் 1,875 பெண்கள் உள்ளனர். இதில் 10 பேர் போர் விமானிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த மாத இறுதியில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷன் வழங்கக் குழு அமைத்திருக்கின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும், பெண்கள் போர்க்களத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. திருமணம், குழந்தை போன்ற காரணங்களால் பெண்களின் பணி, மாற்றத்துக்கு உட்படும் போன்ற காரணங்களால், அந்த வாய்ப்பு நிராகரிக்கப்பட்டு வருகிறது.