Published:Updated:

ராஜஸ்தான்: மாதவிடாய் நாள்களில் அரசு பெண் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைசெய்ய பரிந்துரை!

சித்தரிப்பு படம்
News
சித்தரிப்பு படம்

ராஜஸ்தான் சமூக நல வாரியம், மாநில அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை முன் வைத்துள்ளது. அதில், மாதவிடாய் நாள்களில் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று.

ராஜஸ்தான்: மாதவிடாய் நாள்களில் அரசு பெண் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைசெய்ய பரிந்துரை!

ராஜஸ்தான் சமூக நல வாரியம், மாநில அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை முன் வைத்துள்ளது. அதில், மாதவிடாய் நாள்களில் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று.

Published:Updated:
சித்தரிப்பு படம்
News
சித்தரிப்பு படம்

வேலைக்குச் செல்லும் பெண்கள் அன்றாடம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். ஒருசில பணியிடங்களில் சரியான கழிவறை வசதி கூட இல்லாமல் இருக்கும். இது போன்ற பிரச்னைகளை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் சமூக நல வாரியம், மாநில அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை முன் வைத்துள்ளது.

அதில், மாதவிடாய் நாள்களில் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்பது முக்கியமான ஒரு பரிந்துரையாக உள்ளது. அதோடு குட் டச், பேட் டச் (Good touch, Bad touch) தொடர்பாக குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்துதல், குடும்ப கவுன்சலிங் சென்டர் அமைத்தல், முதியோர் முகாம்களை அமைத்தல் போன்ற பரிந்துரைகளையும் அர்ச்சனா சர்மா தலைமையிலான சமூக நல வாரியம் மாநில அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.

அர்ச்சனா சர்மா
அர்ச்சனா சர்மா

இது குறித்து அர்ச்சனா சர்மா கூறுகையில், ``பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தும் நோக்கில் இந்த சமூகநல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் மற்றும் மேம்பாட்டிற்கு பயனுள்ள கொள்கையை தயாரிக்கவும், மற்றும் பல்வேறு சமூக நலத்திட்டங்களை திறம்பட செயல்படுத்தவும் இந்த வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். குட் டச், பேட் டச் குறித்து குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்படும். 6 மாதம் முதல், 6 வயது வரையிலான குழந்தைகளை கவனிக்கும் சென்டர்களை தொடங்கும்படியும் நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாறிவரும் சமுதாயச் சூழ்நிலை காரணமாக குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, குடும்ப கவுன்சலிங் சென்டர் தொடங்கும்படி மாநில நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

தற்போது பீகார் மாநிலத்தில் மட்டும் பெண் அரசு ஊழியர்களுக்கு மாதவிடாய் நாள்களில் இரண்டு நாள்கள் விடுமுறை கொடுக்கப்பட்டு வருகிறது.