Published:Updated:

80 வகையான உணவு, 80 கிலோ கேக் - ஐந்து தலைமுறைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய 80 வயது மூதாட்டி!

80 வகையான நவதானிய இனிப்பு, கார வகைகள் பரிமாறப்பட்டன

ஐந்து தலைமுறைகள் கண்ட 80 வயது மூதாட்டியின் பிறந்தநாளை அவரின் குடும்ப உறவுகள், ஊர்ப் பொதுமக்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.

80 வகையான உணவு, 80 கிலோ கேக் - ஐந்து தலைமுறைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய 80 வயது மூதாட்டி!

ஐந்து தலைமுறைகள் கண்ட 80 வயது மூதாட்டியின் பிறந்தநாளை அவரின் குடும்ப உறவுகள், ஊர்ப் பொதுமக்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.

Published:Updated:
80 வகையான நவதானிய இனிப்பு, கார வகைகள் பரிமாறப்பட்டன
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவர் விமலாதேவி (80). இவரின் கணவர் சுப்புராம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். விமலாதேவி வம்சாவளியில் எட்டு மகள்கள்; இரண்டு மகன்கள், 40 பேரன் பேத்திகள், 25 கொள்ளுப்பேரன்கள், 4 எள்ளுப்பேரன் பேத்திகள் என மொத்தம் 120 பேர் உள்ளனர்.

திருமணமான மகள்கள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கின்றனர். மகன்கள் இருவர் தாயுடன் வசித்து வருகின்றனர். ஐந்து தலைமுறைகள் கண்ட விமலாதேவிக்கு நேற்று 80வது பிறந்த நாள். இதையொட்டி குடும்பத்தினர் 120 பேரும் ஒன்றுகூடி ஊர் மக்களுடன் விமலா தேவியின் பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.

இரண்டு நாள் இந்தப் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் மகள்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் விமலா தேவிக்குப் பிடித்த 80 வகையான நவதானியங்களால் ஆன உணவுகளைச் சமைத்துப் பரிமாறினர். 100 ரூபாய் நோட்டுகளாக 80,000-த்தை மாலையாக அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று அவரது 80 வயதைக் குறிக்கும் வகையில் 80 கிலோ கேக் வெட்டியும், கிராம மக்கள் அனைவருக்கும் சைவம் மற்றும் அசைவ உணவுகளைப் பரிமாறியும், மகன், மகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரப்பிள்ளைகள் மற்றும் எள்ளுப் பேரப்பிள்ளைகளுடன் ஆடல், பாடல் என விமலாதேவியின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பணமாலையுடன் மூதாட்டி விமலாதேவி
பணமாலையுடன் மூதாட்டி விமலாதேவி

இது குறித்து அவரின் மூத்த மகன் ஜெயகிருஷ்ணன், "எங்க அம்மா 80வது பிறந்த நாளை தன்னுடைய மக்கமாரோட கொண்டாடணும்னு நினைச்சாங்க. அதுக்காகத்தான் இந்த ஏற்பாடு செஞ்சோம். நான்தான் வீட்டுக்கு மூத்த பிள்ளை, கடந்த ரெண்டு மாசமா இதுக்கான ஏற்பாடுகளைச் செஞ்சுகிட்டு வந்தோம். வெளியூரு, வெளி மாநிலத்தில் இருந்த என்னோட தங்கச்சிகளுக்கெல்லாம் தகவல் சொல்லி, அவங்க லீவ் போட்டு அம்மா பிறந்தநாளைக் கொண்டாட இரண்டு நாளைக்கு முன்னாடியே பிள்ளைகளோட வந்துட்டாங்க. எங்க அம்மாவுக்கு இயற்கை உணவுகள் எல்லாம் ரொம்பப் பிடிக்கும், அதனாலதான் நவதானியங்களிலே 80 வகையான இனிப்பு, கார வகைகள் செஞ்சு என் அம்மாவுக்குக் கொடுத்தோம். இன்னைக்கு மண்டபத்துல, கிராம மக்களோடு சேர்ந்து 80 கிலோ கேக் வெட்டி பேரன், பேத்தி, எங்களோட எல்லாம் சேர்ந்து ஆடிப் பாடிக் கொண்டாடி, பிறந்தநாள் நல்லா என்ஜாய் பண்ணாங்க. கிராம மக்கள் எல்லோருக்கும் அசைவ, சைவ உணவும் வழங்கினோம்.

எங்க அம்மா எங்களை எல்லாம் கட்டிப்பிடிச்சு ’இது போதும்டா எனக்கு, என்னோட மக்கமாரு எல்லாரையும் ஒன்னா பாத்துட்டேன்’ன்னு ரொம்ப சந்தோஷப்பட்டு, ஆனந்தக் கண்ணீர் விட்டாங்க. எங்க குடும்பம் மட்டுமல்ல, கிராம மக்களே எங்க அம்மா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கினதைப் பார்த்து எங்களுக்கும் அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. அடுத்து எங்க அம்மாவோட நூறாவது பிறந்த நாளை இதைவிட விமர்சையாகக் கொண்டாடுவோம்” என மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.