Published:Updated:

கொண்டாட்டம், தன்னம்பிக்கை, பரிசு, பரவசம்... வாசகிகளின் ‘ஜாலி டே’ அனுபவங்கள்!

 ‘ஜாலி டே’
பிரீமியம் ஸ்டோரி
‘ஜாலி டே’

ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் அவர்கள் திறமைக்கான மேடைகளையும், பரிசுகளையும் வழங்கி அவர்களைத் திக்கு முக்காடச் செய்யும் திருவிழா அது

கொண்டாட்டம், தன்னம்பிக்கை, பரிசு, பரவசம்... வாசகிகளின் ‘ஜாலி டே’ அனுபவங்கள்!

ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் அவர்கள் திறமைக்கான மேடைகளையும், பரிசுகளையும் வழங்கி அவர்களைத் திக்கு முக்காடச் செய்யும் திருவிழா அது

Published:Updated:
 ‘ஜாலி டே’
பிரீமியம் ஸ்டோரி
‘ஜாலி டே’
கொண்டாட்டம், தன்னம்பிக்கை, பரிசு, பரவசம்... வாசகிகளின் ‘ஜாலி டே’ அனுபவங்கள்!

அவள் விகடன் தன் வாசகிகளுக்கு அளிக்கும் ஆனந்த அனுபவப் பரிசு, `ஜாலி டே... உங்களுக்கே உங்களுக்கென்று ஒரு நாள்’ என்று ஊர் ஊராக நாம் நடத்தும் ‘ஜாலி டே’ திருவிழாக்களைத் திளைக்கத் திளைக்கக் கொண்டாடுவார்கள் வாசக தோழிகள். ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் அவர்கள் திறமைக்கான மேடைகளையும், பரிசுகளையும் வழங்கி அவர்களைத் திக்கு முக்காடச் செய்யும் திருவிழா அது. அப்படி, இதுவரை அவள் விகடன் நடத்திய ‘ஜாலி டே’ திருவிழாக்களில் கலந்துகொண்ட பெண்கள், தங்களது பரவச அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார்கள் இங்கு...

சுபா
சுபா

`ஜாலி டே' முடிஞ்சு ஒரு வாரம் அந்த உற்சாகத்துல இருப்பேன்! - சுபா, திருநெல்வேலி

‘`திருநெல்வேலியில அவள் விகடன் `ஜாலி டே' நடக்குதுனு முதல்முறை அறிவிப்பு பார்த்தப்போ, என்னன்னு போய் பார்க்க லாம்னுதான் போனேன். கோலம், அடுப் பில்லா சமையல், மௌனமொழி, பாட்டுக்குப் பாட்டுனு வெரைட்டி வெரைட்டியான போட்டிகள்ல பெண்கள் கலக்கிட்டு இருந் தாங்க.

அந்த அரங்குல இருந்த உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொள்ள, நாமளும் கலந்துதான் பார்ப்போமேனு போட்டிகளுக்குப் பேரு கொடுத்தேன். நம்மாள இவ்வளவு பண்ண முடியுமானு என் தன்னம்பிக்கை லெவலே கூடிடுச்சு. அடுத்தடுத்த `ஜாலி டே' நிகழ்ச்சி கள்லயும் தொடர்ந்து கலந்துக்க ஆர்மபிச்சேன். எங்க வீட்டுல யும், ‘நீ போய் என்ஜாய் பண் ணிட்டு வா’னு சொல்லி சந்தோஷமா அனுப்பிவெச் சாங்க. பரிசுகள் வாங்கினேன்.

முக்கியமா, அங்க எனக்கு நிறைய ஃபிரெண்ட்ஸ் கிடைச் சாங்க. ஏழு வருஷமா `ஜாலி டே'ல கலந்துட்டு இருக்கேன். ஒவ்வொரு முறை `ஜாலி டே' நிகழ்ச்சியில கலந்துட்டு வந்ததுக்கு அப்புறமும், ஒரு வாரம் வீட்டுல அதைப் பத்தியேதான் பேசிட்டு இருப்பேன்; அதே உற்சாகத்துலதான் இருப்பேன். அடுத்து எப்போ `ஜாலி டே' வரும்ங்கிற ஏக்கமும் வந்துடும்!”

கொண்டாட்டம், தன்னம்பிக்கை, பரிசு, பரவசம்... வாசகிகளின் ‘ஜாலி டே’ அனுபவங்கள்!

நான் வாங்கின சர்டிஃபிகேட்டை புடவையில தைச்சு உடுத்தினேன்! - வனஜா, தூத்துக்குடி

“நான் பத்து வருஷமா அவள் விகடன் `ஜாலி டே'க்கு வந்துட்டு இருக்கேன். எங்கள மாதிரி ஹோம் மேக்கர்ஸுக்கு எல்லாம் இந்த ரெண்டு நாள் அப்படி ஒரு கொண்டாட்டப் பரிசு. எங்க கடமைகள், கவலைகள் எல்லாம் மறந்து, பேருக்கு ஏத்த மாதிரி ஒரே ஜாலிதான்.

பலவிதமான போட்டிகள் நடத்துறது, வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்குறது, பரிசுகள், சர்ப்ரைஸ் பரிசுகள், பம்பர் பரிசுனு ஒரே பரிசு மழை பொழியுறதுனு செம்ம அனுபவம் அது. `ஜாலி டே' மூலமா எனக்கு நிறையா ஃபிரெண்ட்ஸ் கிடைச் சாங்க. `ஜாலி டே' சென்னையில நடந்த ஒருமுறை, தூத்துக்குடியில இருக்குற எங்களோட `ஜாலி டே' ஃபிரெண்ட்ஸ் குரூப் எல்லாரும் சென்னைக்கே கிளம்பிட் டோம். ஆனா, அங்க போனதுக்கு அப்புறம் என்ன பண்ணுறதுனு தெரியல. அவள் விகடன் டீம்கிட்டயே ஆலோசனை கேட்க, அவங்க எங்களுக்கு ரூம் ஏற்பாடு பண்ணிக்கொடுத்தாங்க.

ஒருமுறை, `ஜாலி டே' மாறுவேட போட்டியில நான் வாங்கின சர்டிஃபி கேட்டை என் புடவையில தைச்சு உடுத்திட்டு, அடுத்த `ஜாலி டே' நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதெல்லாம் மறக்கமுடியாத அனுபவம். 20, 30 வயசுக்காரங்க மட்டு மில்ல... 70, 80 வயசுக்காரங்க வரை `ஜாலி டே'ல கலந்துக்கிற பெண்கள் தங்களோட வயசை மறந்து என்ஜாய் பண்றதை பார்க் குறது கண்கொள்ளாக் காட்சி!”

கொண்டாட்டம், தன்னம்பிக்கை, பரிசு, பரவசம்... வாசகிகளின் ‘ஜாலி டே’ அனுபவங்கள்!

அம்மா கொடுக்க நினைச்ச பரிசை `ஜாலி டே' கொடுத்துச்சு! -
முத்துலஷ்மி, திருநெல்வேலி

“எங்க ஊர்ல `ஜாலி டே' நடக்கும்போது, என் சொந்தக் காரங்களை எல்லாம் கூட்டிட்டு கூட்டமா கிளம்பிடுவேன். அங்க எங்களை அவள் விகடன் குழு அவ்ளோ அன்பா, உற்சாகமா வரவேற்பாங்க.

ஒருமுறை, என் சித்தியை `ஜாலி டே'க்கு கூட்டிட்டுப் போனப்போ, அவங்க வயசு, கஷ்டம்னு எல்லாத்தையும் மறந்து அவ்ளோ ஆட்டம் போட்டதைப் பார்த்தப்போ, பெண்களுக்கு ‘ஜாலி டே’ எவ்ளோ பெரிய ரிலாக்சேஷன்னு புரிஞ்சது. சொல்லப்போனா, அன்னிக்கு அங்க அவ்ளோ சந்தோஷமா இருந்த எல்லா பெண்களையும் பார்த்தப்போ எனக்கு ஆனந்தக் கண்ணீரே வந்துடுச்சு.

என் பொண்ணும் எப்பவும் என்கூட `ஜாலி டே'க்கு கிளம்பிடுவா, பாட்டுப் போட்டியில கலந்துக்குவா. நானும் நடிப்பு, நானே எழுதிப் பாடின பாட்டுனு கலக்கியிருக்கேன். அப்போதான் தெரிஞ்சது எனக்கும் திறமை இருக்குனு. ஒருமுறை நாங்க மதுரையில இருக்க எங்க அத்தை வீட்டுக்குப் போயிருந்தப்போ, அங்க `ஜாலி டே' நடந்தது. நானும் அம்மாவும் கலந்துக்கிட்டோம். அப்போ அம்மாவுக்கு பம்பர் பரிசான ஃபிரிட்ஜ் கிடைச்சது. ‘எங்கம்மா எனக்கு வாங்கித் தர நினைச்ச பரிசை, இப்போ அவள் விகடன் கொடுத்திருக்கு’னு ஆனந்தக் கண்ணீரோட மேடையில சொன்னாங்க அம்மா!”

வாசகிகளின் `ஜாலி டே' அனுபவங்களைக் கேட்க கேட்க, ‘நாமளும் கலந்துக்கலாமே’ என்று தோன்றுகிறதா?

அறிவிப்பு காத்திருக்கிறது தோழிகளே உங்களுக்காக!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கொண்டாட்டம், தன்னம்பிக்கை, பரிசு, பரவசம்... வாசகிகளின் ‘ஜாலி டே’ அனுபவங்கள்!
கொண்டாட்டம், தன்னம்பிக்கை, பரிசு, பரவசம்... வாசகிகளின் ‘ஜாலி டே’ அனுபவங்கள்!