Published:Updated:

வீட்டை க்யூட்டாக்க... வாசகிகளின் ஐடியாக்கள்! #Avaludan

வீட்டை க்யூட்டாக்க
பிரீமியம் ஸ்டோரி
வீட்டை க்யூட்டாக்க

#Utility

வீட்டை க்யூட்டாக்க... வாசகிகளின் ஐடியாக்கள்! #Avaludan

#Utility

Published:Updated:
வீட்டை க்யூட்டாக்க
பிரீமியம் ஸ்டோரி
வீட்டை க்யூட்டாக்க

வள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் வாசகிகளிடம் `வீட்டை சுவாரஸ்யமான லுக்கில் அலங்கரிக்க சிம்பிளான, க்யூட்டான ஐடியாக்கள் ப்ளீஸ்' என்று கேட்டிருந்தோம். பலரும் ஆர்வத்துடன் தங்கள் பதில்களை கமென்ட்களாகப் பதிவு செய்திருந்தனர். #Avaludan என்ற ஹேஷ்டேக் குடன் அவர்கள் பகிர்ந்திருந்தவற்றில் சிறந்த கமென்ட்கள் இங்கே...

Radhika Ravindrran

ஒவ்வோர் அறையிலும் வேலைப்பாடுகள் ஃப்ரேம் கொண்ட ஒரு கண்ணாடி வைத்தால் அறை பெரிதாக, அழகாகத் தெ‌ரியும். இயற்கை மற்றும் செயற்கை செடிகளை அலங்காரத் தொட்டிகளில் அங்கங்கே வைக்கலாம்.

Rani Ponmathi

Eco-friendly பனை கைவினைப் பொருள்கள், மரப்பாச்சி பொம்மைகள், சணலால் ஆன சுவர் அலங்காரப் பொருள்கள், இயற்கைச் சாயங்களில் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் ஆகியவை அழகை கூட்டுவதுடன், குழந்தைகளுக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்பைச் சொல்லிக்கொடுக்கும். கைவினைஞர்களின் வாழ்வாதாரமும் வளம் பெறும்.

Valli Abhaya

பழைய துணிகளை உங்கள் கிரியேட்டிவிட்டியுடன் தீரைச்சீலை ஆக்கினால் யுனீக்காக இருக்கும். ‘வாவ் இது வித்தியாசமா இருக்கே... எங்கே வாங்குனீங்க?’ - கமென்ட்கள் பெறலாம்.

வீட்டை க்யூட்டாக்க... வாசகிகளின்
ஐடியாக்கள்! #Avaludan

Hemalatha Srinivasan

துளசி, கற்பூரவள்ளி செடிகள் உள்ள தொட்டிகளை வெயில் படும் இடங்களில் வீட்டுக்குள் வைக்கும்போது பார்க்க அழகாக இருப்பதுடன் ஆக்ஸிஜனும் சப்ளை ஆகும்.

Ruku Guru

தேவையற்ற பொருள்களை தயவுதாட்சண்யமே இல்லாமல் நீக்கினாலே (Decluttering) வீடு பாதி அழகாகிவிடும்.

Sarasvathi Swaminathan

ஹாலில், வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, கண்கவர் வண்ண, நறுமணப் பூக்களை போட்டுவைத்தால், உள்ளே நுழையும்போதே கண்களையும் நாசியையும் `வெல்கம்' செய்யும்.

Subha Yogesh Kannan

குழந்தைகளின் காலடி அச்சுகள், கை அச்சுகளை குழந்தைகளின் கைகள் மற்றும் கால்களில் அக்ரிலிக் பெயின்ட் தடவி சார்ட் பேப்பர் அல்லது கான்வாசில் பதித்து சுவரில் மாட்ட, அழகோ அழகுதான்.

Chitra Kumar

சின்னச் சின்ன பந்துகளில் விதவிதமான முக பாவனைகள் வரைந்து தொங்கவிடலாம், ஒட்டி வைக்கலாம்... வித்தியாசமாக இருக்கும்.