பாலியல் சர்ச்சையில் சிக்கிய பி.ஜே.பி-யைச் சேர்ந்த கே.டி.ராகவனுக்கு ஆதர வாகப் பேசியிருந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமானுக்கு, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கண்டனம் தெரிவித் திருந்தார். அது குறித்துக் கேட்கப்பட்டபோது, ‘ரொம்ப கஷ்டமா இருந்தா விஷம் குடிச்சு செத்துப் போ’ என ஜோதிமணியை ஒருமையில் பேசியிருந்த சீமானின் பேச்சு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என அவள் விகடன் சமூக வலைதளப் பக்கத்தில் கேட்டிருந்தோம். #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சில...

Uma Krishnan
அரசியல்வாதிகளின் முற்போக்கு வேடம் எல்லாம், பெண்கள் தொடர்பான கேள்விகளில் வெளுத்து விடுகிறது.
Someswari Gopi
ஜோதிமணி ஓர் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்றும் பாராமல், அவர் வகிக்கும் எம்.பி பதவிக்கும் மரியாதை தராமல் பேசுகிறார் என்றால்... ஒரே காரணம், அவர் பெண் என்பதுதான். எம்.பி பதவியில் இருக்கும் பெண்ணுக்கே இந்த நிலை என்றால், சாதாரண பெண்களின் நிலை..?!
Srividhya Prasath
அரசியல் நாகரிகம் என்பது இன்று பல அரசியல்வாதி களிடமும் இல்லை.
Kkr Kkravi
முக்கியமான காரியங்கள் பற்றிக் கருத்துகள் கூறும்போதுகூட சீமான் எதையாவது சொல்லிவிட்டு அவரே சிரித்துக்கொள்கிறார். பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு, கண்ணியத் தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் செய்வதில்லை.
Kanmani Kanmaniramesh
பொதுவெளியில் இயங்கும் எவ்வளவு உறுதியான, தைரியமான பெண்களாக இருந்தாலும், இதுபோன்ற விமர்சனங்கள் மற்றும் நாகரிகமற்ற பேச்சுகளை இன்னும் கேட்டுத்தான் ஆக வேண்டியதிருக்கிறது. ‘பெண்களை மதிக்கிறோம்’ என்ப தெல்லாம் வெறும் கட்டுக்கதையே.
Arul Mozhi
பெண்களை அவமதிக்கும் அரசியல் வாதிகளை மக்கள் ஊக்குவிக்கக் கூடாது.
Skpromoters Pandy
சீமான் தலைவனாக மட்டுமல்ல, ஒரு மனிதனாகவும் இங்கு தோற்று விட்டார்.
Shalomsuzan Pal
சீமான் தன் தொண்டர்களுக்குத் தவறான முன்னுதாரணம்.
Hasan Mydeen
இது சீமான் - ஜோதிமணி தனிப்பட்ட பிரச்னை அல்ல. இதற்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.
Sachin Ragu
கேள்விக்கான சரியான விளக்கம் சொல்ல முடியாமல் போகவே, தனது இயலாமையை இப்படி ஓர் அருவருக் கத்தக்க பதிலில் வெளிப்படுத்தி யுள்ளார்.
Bala Krishnan
பிரபாகரன் பெயர் சொல்லி வளர்ந்ததால், சீமானை நல்ல தலைவன் என்று நினைத்தேன். ஆனால் பிரபாகரனோ, அவரது ராணுவமோ பெண்களைத் தரக்குறைவாக நடத்தியதாக வரலாறு இல்லை. அவரது தொண்டனாகக்கூட தகுதியில்லாத மனிதர் சீமான்.
Krishlin
சீமான் கட்சியைச் சேர்ந்த இளைஞர் களின் சிந்தனையையும், இது போன்ற இவருடைய பேச்சு கீழ்த்தரத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது.
Natesan Annamalai
பெண்களைக் கீழ்மைப்படுத்துபவர்கள், தலைவன் என்ற சொல்லுக்குத் தகுதி இல்லாதவர்கள்.

Akram Akram
இளைய சமுதாயத்தினர், அரசியல் மாணவர்கள் இதுபோன்ற பேச்சுகளைப் பார்க்கும்போது அரசியல்வாதிகள் குறித்தும், பெண் அரசியல்வாதிகள் குறித்தும் என்ன நினைப் பார்கள்..?
Pravin Raj
விளம்பரத்துக்காக தேர்தலில் ஆண் களுக்கும் பெண் களுக்கும் சரிசமமாகத் தொகுதிகள் ஒதுக்கினால் மட்டும் போதாது... அடிப்படை இயல்பிலேயே பெண் களை மதிக்கும் குணம் வேண்டும்.
Karunakaran K
தற்கொலைக்குத் தூண்டு வதாக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.