ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அவள் என் பார்வையில்...

அவள் என் பார்வையில்...
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் என் பார்வையில்...

ஒருமுறை லேடீஸ் கிளப்பில் வருடாந்தர விழா கொண்டாடப்பட்டது. அதில் அவரவர்கள் ஏதாவது செய்து கொண்டு வாருங்கள்.

25-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் அவள் விகடன் இதழ் குறித்த கருத்தை உங்கள் புகைப்படத்துடன் எழுதி அனுப்பலாம் என்று வாசகர்களிடம் கேட்டிருந்தோம். அவற்றில் சில... மேலும் சில வாசகிகளின் கருத்துகள் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன.

அவள் என் பார்வையில்...

அவள் ஒரு கிரியா ஊக்கி

பெண்கள் தினம் தினம் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளையும் அலசி ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகள், வாழ்க்கையின் வெற்றிப் படிக்கட்டு ஏறி உச்சம் தொட்ட சாதனையாளர்களின் சரித்திரங்கள், என் போன்ற சாமானியர்களின் திறனை ஊக்கப்படுத்தும் வகையில் பிரசுரிக்கப்படும் கட்டுரைகள் என எல்லா வகை யிலும் சிறப்புற்று விளங்கும் அவள் விகடன் மகளிருக்கு ஒரு கிரியா ஊக்கி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. - மல்லிகா கோபால், புதுச்சேரி

அவள் என் பார்வையில்...

அவள் என் வருமானம்

ஒருமுறை லேடீஸ் கிளப்பில் வருடாந்தர விழா கொண்டாடப்பட்டது. அதில் அவரவர்கள் ஏதாவது செய்து கொண்டு வாருங்கள். அதை விற்று, அதில் வரும் வருமானத்தில் 10 சதவிகிதத்தை ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு மீதியை நீங்களே எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தனர். நான் அவள் 32 பக்க இணைப்பில் பார்த்த ரெசிப்பியில் மிளகு குழம்பும், பால் கேக்கும் செய்தேன். 1,500 ரூபாய் ஈட்டினேன். அன்று அவள் கொடுத்தது வருமானம் மட்டுமல்ல... எனக்கும் சமைக்க வரும் என்கிற தன்னம்பிக்கையையும்தான். - கிரிஜா ராகவன், கோவை-36

அவள் என் பார்வையில்...

அவள் என் ஏணி

சாதாரண வாசகியாக அறிமுக மான என்னை சமையற்கலைஞராக்கி விட்ட ஏணி அவள். இன்று வரை என்னை ஊக்கப்படுத்தி, உற்சாகப் படுத்தி தன்வசம் கொண்டவள். என் படைப்புகள் பலவிதங்களில் அவள் இதழில் வெளி யானாலும் அவள் விகடனை ஒவ்வொரு முறை படிக்கும்போது வாசகி என்கிற உணர்வே முதலில் தோன்றும். அதற்கு காரணம் ஜாலிடே நிகழ்ச்சிகள். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் உணர்வுகளைக் கேட்டுப் பாருங்கள்... அவளின் வாசகி யரின் உண்மையான கொண்டாட்டம் புரியும். - லட்சுமி ஸ்ரீநிவாசன், சென்னை-24

அவள் என் பார்வையில்...

அவள் தனியொருத்தி

மாதவிடாய் தொட்டு மெனோபாஸ் வரை எங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தி, போக்சோ முதல் சொத்தில் பங்கு வரை சட்டப் பாதுகாப்பை விவரித்து முன்னேற்றப் பாதையில் வழிநடத்தி, சாதனைப் பெண்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் எங்களை ஊக்கப் படுத்தி, பொது பிரச்னைகளை அலசி பெண்கள் பொது அறிவையும் வளர்த்து, போட்டிகள் மூலம் எங்கள் திறமைகளுக்கு சவால் விட்டு, உ(ய)ரிய அங்கீகாரத்துடன் பரிசுகளை அள்ளித்தரும் அவள் விகடன் என் பார்வையில் தனியொருத்தி. - மல்லிகா அன்பழகன், சென்னை-78

வாசகர்களே.... நீங்களும் அவள் விகடன் இதழ் குறித்த இதுபோன்ற உங்கள் கருத்தை 60 வார்த்தைகளுக்குள் உங்கள் புகைப்படத்துடன் எழுதி அனுப்பலாம்.

அவள் என் பார்வையில்...

அவள் நவீன வழிகாட்டி

சமையல், கோலம், ஆன்மிகம், ஆடை, அலங்காரம் என குடும்பப் பெண்களுக்கான இதழாக (மட்டும்) அமையாமல், நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும், உயர்ந்த லட்சியமுமாக சாதிக்கப் புறப்பட்ட இளைய தலைமுறைக்குத் தன்னம்பிக்கையும் தைரியமும் ஊட்டும் நவீன வழிகாட்டி அவள். பகிரங்கமாக பல பெண்கள் பிரச்னைகளை அழுத்தமாக அலசும், என்போன்ற கல்லூரி மாணவிகளுக்கு எனர்ஜி டானிக். அவள் விகடன் என் பிரியமான தோழியும் கூட. - அ.யாழினிபர்வதம், சென்னை-78.

அவள் என் பார்வையில்...

அவள் என் உணர்வு

முதுமைக்கு மரியாதை தொடரைப் படிக்க ஆரம்பித்ததும் கிராமத்தில் இருக்கும் என் தாய் - தந்தையுடன் இருக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது. அப்படித் தொடர்ந்து இருக்க முடியாத சூழ்நிலையில், எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ... அப்போதெல்லாம் என் குழந்தைகளுடன் சென்று விடுகிறேன். எங்களைப் பார்த்ததும் அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என் குழந்தைகளும் தாத்தா - பாட்டியின் அன்பை, கிராமத்து வாழ்க்கையைப் புரிந்துகொள்கின்றனர். அதற்கு காரணம் ‘அவள் விகடன்’தான் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்வேன். - எம்.நிர்மலா, புதுச்சேரி - 1

அவள் என் பார்வையில்...

அவள்... என்னவள்

நான் ஒரு தமிழாசிரியை. ஆனால், என் ஆசிரியையாகி விட்டவள் அவள். காலையில் பள்ளிக்குக் கிளம்பும் பரபரப்பான நேரத்திலும் செவ்வாய் விட்டு செவ்வாய் வாசலில் காத்திருக்கும் அவள்(ளை) கையிலெடுக் கும் அந்த நொடி முகத்தில் புன்னகை தானாக வந்து ஒட்டிக்கொள்ளும். என் ஆசிரியப் பணியில் என்னை எப்போதும் மேம்படுத்திக்கொள்ள அவளின் பங்கு அபரிமிதமானது. மாணவர்களுக்கு நான் சொல்ல புதிய கருத்துகளைக் கொண்டு வந்திருப்பாள் ஒவ்வொரு முறையும்! - வெ.கலைவாணி, சேலம் - 4

அவள் என் பார்வையில்...

அவள் என் மருத்துவர்

சிறு தொழில்கள் செய்து முன்னேறிக்கொண்டிருக்கும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களை உலகிற்கு அடையாளம் காட்டும் விதமாக பேட்டிகளை வெளியிட்டுக்கொண்டிருக்கும் அவள் விகடனின் பணி, வீட்டிலிருக்கும் பல பெண்களுக்கு வழிகாட்டி. முக்கியமாக பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் அவள் விகடன் என்னைப் போன்ற ஆண்களையும் கவர்ந்திருப் பதற்கு காரணம், நோய்களுக்கான மருத்துவக் குறிப்புகளை சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடமே பேட்டி கண்டு வெளியிடுவது. - ஏ.கணேசன், தூத்துக்குடி.

அவள் என் பார்வையில்...

அவள் என் மேடை

இதழுடன் வெளியாகும் 32 பக்க இணைப்புகளைப் பார்த்து நிறைய உணவு வகைகளை செய்து குடும் பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்து வேன். வாசகர் கைமணம் பகுதியில் எழுதுவேன். அப்படிப்பட்ட நேரத்தில், சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற மகளிர் திருவிழாவில் ஜூஸ் பயிற்சி எடுக்க மேடை அமைத்துக் கொடுத்தவள் அவள். அன்று அவள் கொடுத்த ‘உன்னாலும் முடியும் தோழி’ என்ற தன்னம்பிக்கை இன்று வரை தொடர்கிறது. - சுந்தரி காந்தி, சென்னை-56

அவள் என் பார்வையில்...

அவள் என் அம்மா வீட்டு சீதனம்

அப்பா எனக்கு அறிமுகப்படுத்திய அவள், 17 வருடங்களாக என் அன்னையாக, அக்காவாக, தோழி யாக, வழிகாட்டியாக, தன்னம் பிக்கை ஊட்டுகின்ற இதழாக என் அம்மா வீட்டு சீதனமாகக் கருதுகிறேன். அவள் விகடனில் வெளியாகும் கட்டுரைகள் புதிய புதிய வழிகளைத் திறந்துவிடும். நான் பத்து புத்தகங்கள் எழுதி வெளியிட்டு இருக்கிறேன் என்றால் அதற்கு அடிப்படை அவள் விகடன் தந்த ஊக்கமே. தாயாக இருந்து என்னை ஊக்கப்படுத்தும் அற்புதம், அவள். - முனைவர் உமாதேவி, திருவண்ணாமலை

அவள் என் பார்வையில்...

அவள் என் வழித்துணை

தினமும் பணி நிமித்தம் போக வர 100 கி.மீ பயணிக்கும் ஆசிரியை நான். பேருந்துப் பயணங்களை இனிதாக்குவதும் வழித்துணையாக வந்து களைப்பைப் போக்குவதும் அவள்தான். குறுக்கெழுத்துப் போட்டியில் பரிசுகள், கட்டுரைகள், அனுபவங்கள் என அவள் என்னை வளர்த்தெடுத்தாள். அவளில் நானும் அவ்வப்போது எழுதுகிறேன் என்பதே நினைக்கும்போது பெருமிதம் தருகிறது. இப்போதும் பல இதழ்களைப் பொக்கிஷங் களாக வைத்திருக்கிறேன். அவளை வழித்துணை யாகக் கொள்வதில் என் வழியெங்கும் வசந்தம். - கி.சரஸ்வதி, ஈரோடு

அனுப்ப வேண்டிய முகவரி: `அவள் என் பார்வையில்...', அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com