ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அவள் என் பார்வையில்...

வசந்தா, கீதா, மெஹ்ருன்னிசா பேகம்
பிரீமியம் ஸ்டோரி
News
வசந்தா, கீதா, மெஹ்ருன்னிசா பேகம்

வெளியிடங்களுக்கு அதிகம் செல்லாமல் வீட்டிலேயே உறவுகளுடன் வலம்வரும் நிலையில் எனக்கான ஒரே உற்சாகம் அவள் விகடன்.

25-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் அவள் விகடன் இதழ் குறித்த கருத்தை வாசகிகளிடம் கேட்டிருந்தோம். அவற்றில் சில...

அவள் என் உற்சாகம்

2010-ம் ஆண்டு ‘குட்டீஸ் குறும்பு’ பகுதிக்கு என் பேரன் செய்த குறும்பை எழுதினேன். இதழில் அது பிரசுரமான துடன் பரிசு ரூ.150 வந்தது. தொடர்ந்து எழுத ஆரம்பித் தேன். நான் எழுதியது தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியாக... எழுத்தாளராகிவிட்ட பெருமையை அடைந்தேன். என்னைப் போன்ற அனைத்து வாசகிகளுக்கும் எழுதத் தூண்டும் ஓர் உற்சாக டானிக் `அவள்'.- வசந்தா மாரிமுத்து, சென்னை-64

மெஹ்ருன்னிசா பேகம்
மெஹ்ருன்னிசா பேகம்

அவள் என் ஸ்டார்

அவள் விகடன் இதழை கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வாங்கிப் படிக்கும் அம்மா நான். பெண்களின் சிந்தனையை மெருகேற்றி சாதிக்கத் தூண்டும் அற்புதமான தகவல் சுரங்கமான அவள் இதழை படித்து, படித்து என் மகளையும் பத்திரிகையில் எழுத வைக்க வேண்டும் என்று நினைத்தேன். முயற்சி செய் தேன். என் மகள் சிவரஞ்சனி `சுட்டி ஸ்டார்' ஆனதும் நான், சூப்பர் ஸ்டாராக உணர்ந்தேன். - கீதா முருகானந்தம், கும்பகோணம்

அவள் என் தாய்

வெளியிடங்களுக்கு அதிகம் செல்லாமல் வீட்டிலேயே உறவுகளுடன் வலம்வரும் நிலையில் எனக்கான ஒரே உற்சாகம் அவள் விகடன். சகோதரியாக, தோழியாக, வழி காட்டியாக, ஆசிரியராக... எல்லாவற்றுக்கும் மேலாக பல சோதனைகளிலிருந்து மீட்டு வாழ்க்கையில் முன்னேற ஒரு தாய் எப்படி வழி நடத்துவாளோ, அப்படி என் தாயாக வழி நடத்திவருபவள் `அவள்'. - மெஹ்ருன்னிசா பேகம், திருச்சி

வாசகர்களே.... நீங்களும் அவள் விகடன் இதழ் குறித்த இதுபோன்ற உங்கள் கருத்தை 60 வார்த்தைகளுக்குள்

உங்கள் புகைப்படத்துடன் எழுதி அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி: `அவள் என் பார்வையில்...', அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com