Published:Updated:

21 வருடங்களாக புடவையே வாங்காத இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி!

ஆ.சாந்தி கணேஷ்

''என் கணவருடைய எளிமைப் பண்புதான் என்னையும் தொற்றிக்கொண்டது என்று நினைக்கிறேன்.''

சுதா மூர்த்தி
சுதா மூர்த்தி ( www.iforher.com )

எளிமையானவர்கள் எளிய வாழ்க்கை வாழ்வது என்பது, அவர்களுடைய சூழ்நிலையால் நிகழ்வதாகவும் இருக்கலாம். ஆனால், பொருளாதாரத்தில் மிக மிக மேல்தட்டில் இருப்பவர்கள், அடிப்படை விஷயங்களில்கூட எளிமையாக வாழ்வதை அறிய நேரிடும்போது, நம்மையறியாமல் நம் புருவங்கள் மேலெழும்பத்தான் செய்கின்றன. சமீபத்தில், அப்படி நாம் ஆச்சர்யப்பட்டது இன்ஃபோசிஸ் தலைவர் சுதா மூர்த்தியின் புடவை சிம்ப்ளிஸிட்டியைப் பற்றி கேள்விப்பட்டுத்தான்...

'ஆள் பாதி ஆடை பாதி' மனப்பான்மை கொண்டவர்களால், தன்னை மதிப்பு குறைவாக எடை போட்ட அனுபவங்களை அடிக்கடி சந்திருக்கிறார் சுதா மூர்த்தி.

விலையுயர்ந்த ஆடைகள் அணிவதற்கு உலகமே விருப்பமாக இருக்க, சுதா மூர்த்தியோ... கடந்த 21 வருடங்களாக தனக்காக புதிதாக புடவை எடுக்காமல் இருக்கிறார். அதுமட்டுமல்ல, தனக்கென காஸ்ட்லியான துணிகள், நகைகள் வாங்குவதிலும் விருப்பமில்லாமல் இருக்கிறார்.

''காசிக்குப் போனால், நமக்குப் பிடித்தமான ஒரு விஷயத்தை விட்டுத்தர வேண்டும். நான் காசி யாத்திரை சென்று நதியில் மூழ்கியபோது, ஷாப்பிங், அதில் முக்கியமாக எனக்கென புடவைகள் வாங்குவதை விட்டுத்தர முடிவெடுத்தேன். தற்போது, தேவையான பொருள்களை அன்றி வேறெதையும் நான் வாங்குவதில்லை'' என்கிறார்.

சுதா மூர்த்தி
சுதா மூர்த்தி
thelifestories.in

தன் எளிமை காரணமாக, தன்னுடைய உடைகளின் காரணமாக, 'ஆள் பாதி ஆடை பாதி' மனப்பான்மை கொண்டவர்களால், தன்னை மதிப்பு குறைவாக எடை போட்ட அனுபவங்களை அடிக்கடி சந்தித்திருக்கிறார் சுதா மூர்த்தி. ஆனால், அவையெல்லாம் அவருடைய 'எளிமையான வாழ்க்கை'யை எந்த வகையிலும் அசைத்துப்பார்க்கவில்லை என்பதுதான் மிக நல்ல ஆச்சர்யம்.

தன் எளிமை பற்றிய கணவருடைய கண்ணோட்டத்தைப் பற்றி சொல்கையில், ''என் கணவருடைய எளிமைப் பண்புதான் என்னையும் தொற்றிக்கொண்டது என்று நினைக்கிறேன். அவர், எப்போதும் என் அழகைப்பற்றியும் என் ஆடைகளைப்பற்றியும் சிலாகித்துப் பேசியதே இல்லை. ஆனால், நான் ஒரு நல்ல மனுஷி என்பதில் மட்டும் மிகுந்த நம்பிக்கை உடையவர்.

காசிக்குப் போனால், நமக்குப் பிடித்தமான ஒரு விஷயத்தை விட்டுத்தர வேண்டும்.

ஒருவருடைய அழகு என்பது அவருடைய திறமையிலும் நம்பிக்கையிலும் இருக்கிறது. அவருடைய உடைகளில் இல்லை என்பதுதான், சுதா மூர்த்தி இந்த உலகத்துக்குச் சொல்கிற பாடம்.

Article Courtesy: www.iforher.com