லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

மனம் சோர்ந்துபோகும்போது... என்ன செய்யலாம்?!

மனம் சோர்ந்துபோகும்போது... என்ன செய்யலாம்?!
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் சோர்ந்துபோகும்போது... என்ன செய்யலாம்?!

#Avaludan

‘மனம் சோர்ந்துபோகும்போது பாசிட்டிவிட்டி பெற நீங்கள் செய்யும் குட் பிராக்டீஸ் என்ன?’ என்று அவள் விகடனின் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே..!

Dhanalakshmi Sivaramakrishnan

வீட்டில் வளர்க்கும் செடிகளிடம் போய் நிற்பேன். அந்தப் பச்சை, துளிர்விடும் புதிய இலைகள், பூக்கள் எல்லாம் மனதை புத்துணர்வாக்கும். கொஞ்ச நேரம் அவற்றுடன் செலவழித்துவிட்டு வந்தால், குழந்தையுடன் விளையாடிவிட்டு வந்ததுபோல இருக்கும்.

Radhika Ravindrran

வீட்டைவிட்டு வெளியே சென்று சிறிது நேரம் காலாற, காற்றாட நடந்துவிட்டு வருவேன். வானம், மரங்கள், எதிர்ப் படும் மனித முகங்களை எல்லாம் பார்க்கும்போது மனது லேசாகிவிடும்.

Srividhya Prasath

என் வாழ்க்கையில் நான் பெற்ற பரிசுகள், கோப்பைகள், பதக்கங்கள், என்னை என் ஆசிரியரும் பேராசிரியர்களும் பாராட்டிய தருணங்கள் போன்றவற்றை மனதுக்குள் அசைபோடுவேன். உடனே மனது சிறு குழந்தை போல துள்ளிக்கொண்டு, அடுத்த சாதனையை நிகழ்த்துவது பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடும். என் மனதுக்கான குளுக்கோஸ் இதுதான்.

Menaga Sathia

ஒரு நிமிடம் கண்ணாடியில் என்னைப் பார்த்துவிட்டு, ஐந்து நிமிடங்கள் கண்ணை மூடி இருந்துவிட்டு, பின்னர் முகம் கழுவினால் மனம் ஃப்ரெஷ் ஆகிவிடும்.

Ramya Karthick

மனம் மிக சோர்வானதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று லிஸ்ட் போடுவேன். அதில் உப்பு, சப்பு இல்லாத விஷயங்கள்கூட இடம்பெறும். பின் அமைதியாக உட்கார்ந்து, அந்த லிஸ்ட்டில் உள்ள 10 பிரச்னைகளில், இதை எப்படி சரிசெய்யலாம் என்று ஒவ்வொன்றாக யோசித்து, ஒவ்வொரு பிரச்னையாக அழித்துவிடுவேன். அதிலேயே பிரச்னை சரி ஆனது போல் ஒரு நிம்மதி கிடைத்துவிடும். கடைசியாக இரண்டு பிரச்னைகளே மிஞ்சி இருக்கும். ‘அட இவ்வளவுதானா, இதுக்கா சோகமா இருந்தோம், வா பாத்துக்கலாம்...’ என்று சொல்லி மனதை அணைத்துக் கொள்வேன்.

Shenba

பாரதியின் வீரக் கவிதைகளை வாசிப்பேன். என் புத்தகக் குவியலுக்குள் சென்று ஊக்கம் தரும் கவிதை களை சுவாசிப்பேன். சண்டை வந்தால் அதற்குப் பதில் பேசி அதை வளரவிடாமல், எனக்குப் பிடித்த ஒரு கட்டுரையை எழுத உட்கார்ந்துவிடுவேன். மொத்தத்தில், எழுத்துகள் போதும் என்னை மீட்டெடுக்க!

Chitra Panneerselvam

என் `ப்ளேலிஸ்ட்டில் உள்ள, எனக்கு மிகவும் பிடித்த பழைய பாடல்களைக் கேட்பேன். பொதுவாக, நல்ல புத்தகங்கள் படிக்கும்போதும், சிறந்த பேச்சாளர்களின் பேச்சைக் கேட்கும்போதும் அதில் பிடித்தமான வரிகளை எழுதிவைப்பது என் வழக்கம். அதை எடுத்து ஒருமுறை படித்தால் போதும்... மனம் பேக் டு ஃபார்ம்.

மனம் சோர்ந்துபோகும்போது... என்ன செய்யலாம்?!

காயத்ரி முருகன்

பலவிதமான லவ் பேர்ட்ஸ், நாய்க்குட்டிகள் வளர்க்கும் நான் அவற்றுடன் நேரம் செலவழிக்கும்போது என் கவலைகள் எல்லாமே காணாமல் போய்விடும்.

யமுனா தேவி

அட, ஒரு மட்டன் பிரியாணி வாங்கிச் சாப்பிடுங்கப்பா... எல்லாம் சரியா போகும்!

Mahima Mahi

‘இது நிரந்தரம் இல்ல, இதுவும் கடந்து போகும்’னு எனக்கு நானே சொல்லிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவேன்.

R. Brinda

சமையல் அறைக்குச் சென்று வித்தியாசமான ஏதாவது ஓர் உணவு வகையைச் சமைக்க ஆரம்பித்து விடுவேன். கவலை காணாமல் போய்விடும்.

Sridhar Dorairaj

மனதிடம் ‘வெயிட் ப்ளீஸ்’னு சொல்லிட்டு போய் நல்லா ஒரு தூக்கத்தைப் போட்டுடுவேன். மீண்டும் எழும்போது சோர்வுக்கு டாட்டா சொல்லிடலாம்.