Published:Updated:

54 மணி நேரம்,130 மைல்கள்!- புற்றுநோய்க்கு எதிராக எதிர்நீச்சலடித்த `சூப்பர் உமன்’

இங்கிலீஷ் கால்வாயை நான்குமுறை கடந்த ஒரே நீச்சல் வீரர் என்கிற சாதனையை எட்டியிருக்கிறார் சாரா.

Sarah Thomas
Sarah Thomas

லண்டனுக்கும் பாரிஸுக்கும் இடையிலான இங்கிலீஷ் கால்வாia யில் கிட்டத்தட்ட 130 மைல்கள் வரை 54 மணி நேரம் நீச்சலடித்து சாதனை படைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா தாம்ஸன். சுமார் 80 மைல்கள் வரை மட்டுமே நீச்சலடிக்க இருந்த இவரின் திட்டம், அலையின் சீற்றம் அதிகம் இருந்ததால் பயண தூரம் அதிகரித்திருக்கிறது. அதனால், நான்கு முறை கால்வாயில் நீச்சலடித்து இதுவரையில் இருந்த உலக சாதனையை சாரா முறியடித்திருக்கிறார்.

Sarah Thomas
Sarah Thomas

சாரா மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகப் போராடி மீண்டவர். கடந்த வருடம் செப்டம்பர் 11-ல் தான் அதற்கான சிகிச்சை முழுவதையும் முடித்து புற்றுநோயிலிருந்து முழுவதுமாக மீண்டார். புற்றுநோய்க்கு எதிராகப் போராடிய நாள்களில் நீச்சல் பயிற்சிதான் அவருக்குப் பக்கபலமாக இருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

நீச்சலை முடித்துக் கரை சேர்ந்த பின் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளித்த அவர், ``நீச்சலடிக்கும்போது முகத்தில் ஜெல்லி மீன் ஒன்று கொட்டிவிட்டது. வலி பொறுக்கமுடியவில்லை என்றாலும் விடாப்பிடியாக நீந்தினேன். 80 மைல் தூரம்தான் எனக்கு நீச்சல் இலக்காக இருந்தது. ஆனால், உயரமான அலைகள் எழவும் எனது நீச்சல் தூரமும் அதிகரித்தது.

ஒரே நாடு, ஒரே மொழி... பெரியார் சொன்னது என்ன தெரியுமா?#HBDPeriyar141

நீச்சல் அடிக்கும்போது புரதம் உள்ள பானங்களைத்தான் குடித்தேன். வேறு எதுவும் சாப்பிடவில்லை. இவ்வளவு தூரத்தை நான் கடந்ததை நம்ப முடியவில்லை. கரை சேர்ந்ததும் பல பேர் கூட்டமாக எனக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக நின்றதைப் பார்த்தேன். அது, வலிமையானதாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இந்த நீச்சலை எனக்கும் என்னைப் போன்றவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் அர்ப்பணிக்கிறேன்” என்றார். 

Sarah Thomas- Open Water Marathon Swimmer
Sarah Thomas- Open Water Marathon Swimmer

இங்கிலீஷ் கால்வாயை நான்கு முறை கடந்த ஒரே நீச்சல் வீரர் என்கிற சாதனையை எட்டியிருக்கிறார் சாரா. சாராவின் இந்த சாதனையைப் பாராட்டி `சூப்பர் உமன்’ எனக் கொண்டாடுகின்றனர் பிரபல நீச்சல் சாம்பியன்கள்.