Published:Updated:

“காரைக்குடியில் இருந்து ஐரோப்பாவுக்கு பட்டுச்சேலை பார்சல்!”

சுபா
பிரீமியம் ஸ்டோரி
சுபா

அடுத்ததாக, பேக்கிங். வழக்கமான அட்டை டப்பாவில் கொடுக்காமல், உறுதியான ‘கப்பா பாக்ஸி’ல் எங்கள் புடவைகளை டெலிவரி செய்தோம்

“காரைக்குடியில் இருந்து ஐரோப்பாவுக்கு பட்டுச்சேலை பார்சல்!”

அடுத்ததாக, பேக்கிங். வழக்கமான அட்டை டப்பாவில் கொடுக்காமல், உறுதியான ‘கப்பா பாக்ஸி’ல் எங்கள் புடவைகளை டெலிவரி செய்தோம்

Published:Updated:
சுபா
பிரீமியம் ஸ்டோரி
சுபா

சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இருப்பவர்களுக்குக் கிடைக்கும் தொழில் வாய்ப்புகளை, இப்போது சிறு நகரங்களில் இருக்கிறவர்களுக்கும் ஏற்படுத்திக்கொடுக்கிறது இன்றைய டிஜிட்டல் உலகத்தின் ஆன்லைன் வர்த்தகம். அதற்கு மற்றுமோர் உதாரணம், 32 வயதாகும் சுபா சுப்ரமணியன். பட்டுப் புடவைகளுக்கான தன் பிரத்யேக பிராண்டை உருவாக்கியவர், தனித்துவமான டிசைன்களால் அவற்றை காரைக்குடியில் இருந்தபடி கண்டம் விட்டு கண்டம் தாண்டி விற்றுக்கொண்டிருக்கிறார். ஐடி துறையில் இருந்து புடவை விற்பனைக்கு வந்துள்ள சுபாவிடம், அந்தப் பயணம் பற்றிக் கேட்டோம்.

“காரைக்குடியில் இருந்து ஐரோப்பாவுக்கு பட்டுச்சேலை பார்சல்!”

``உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், புடவைகள் மேல் எனக்கு ஆரம்பத் தில் பெரிய ஆர்வமில்லை. ஐடி துறையைச் சேர்ந்த நான் முதலில் இன்ஃபோசிஸ் நிறுவனத்திலும், பிறகு கத்தார் ஏர்வேஸிலும் பணியாற்றினேன். என் கணவர் ஒரு புகைப் படக் கலைஞர். அவர் தொழில் தொடங்க விரும்பியதால் கத்தாரிலிருந்து காரைக்குடிக்கு வந்தோம். என் கணவருக்கு உதவியாக பல போட்டோ ஷூட்களில் பணியாற்றியபோது, பல புடவை நிறுவனங்களுக்கான புராஜெக்ட் களிலும் பணியாற்றினோம். அப்போதுதான் புடவைகளை பற்றி நான் அறிந்துகொண்டேன். ஆனால், எல்லா நிறுவனங்களும் ஒரே மாதிரியான புடவைகளையே விற்று வந்ததை யும் உணர முடிந்தது. வெகு சில நிறுவனங்களின் புடவைகளில் மட்டுமே புதுமை இருந்தது. அப்போதுதான், ஏன் நாமே ஒரு புடவை பிராண்டை உருவாக்கக் கூடாது என்ற எண்ணம் வந்தது’’ என்பவருக்கு, மொத்தக் குடும்பமும் உறுதுணையாக இருந்திருக்கிறது.

``என் முதுகெலும்பு என் கணவர்தான். மாமனார், தொழிலின் முதலீட்டுக்கு ஒரு பங்கு தந்து உதவினார். எங்கள் புடவைகளின் சிறப்பம்சம் டிசைன்தான் என்று முடிவெடுத்த போது என் அம்மா, மாமியார், நாத்தனார் என இவர்கள் எல்லோரும்தான் என் டிசைனர்ஸ் ஆனார்கள். என் மகள் பெயரில் எங்களது ‘ஐலா சில்க்ஸ்’ ஆரம்பமானது. பத்தாயிரம் ரூபாயிலிருந்து, பட்டுப்புடவைகள் மட்டுமே விற்கிறோம். காஞ்சிபுரம், ஆரணி நெசவாளர்களிடம் நாங்கள் எதிர்பார்க்கும் டிசைன்களைக் கூறி, அவர்கள் ஆலோசனை களையும் பெற்று புதிய டிசைன்களை நெய்து வாங்குகிறோம்.

“காரைக்குடியில் இருந்து ஐரோப்பாவுக்கு பட்டுச்சேலை பார்சல்!”

உதாரணமாக, சமீபத்தில் ‘லெப்பர்ட் பிரின்ட்’ புடவையை அறிமுகப்படுத்தினோம். சிறுத்தையின் தோல் போன்ற டிசைனில் சட்டை, டி-ஷர்ட் போன்ற உடைகளைப் பார்த்திருப்போம். ஆனால், பட்டுப் புடவை யில் அதை டிசைன் செய்தபோது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல, கலைடாஸ்கோப் டிசைன், மழைத்துளிகள் தெளித்தாற் போன்ற டிசைன், மலை முகடுகள் வரிசையாக இருப்பது போன்ற டிசைன், புடவையின் பாடியில் மாடர்ன் டிசைன் - பார்டரில் பாரம்பர்யம் என பட்டில் எதிர்பார்க்காத டிசைன்களை எல்லாம் நாங்கள் உருவாக்கிய தால், அந்தத் தனித்துவத்தாலேயே பெண் களுக்கு அவையெல்லாம் மிகவும் பிடித்துப் போய்விட்டது.

“காரைக்குடியில் இருந்து ஐரோப்பாவுக்கு பட்டுச்சேலை பார்சல்!”

பொதுவாக தாங்கள் கட்டியதைப் போன்ற புடவையை மற்றவர்கள் கட்டியிருப்பதை பெண்கள் விரும்புவதில்லை. எங்களிடம் ஒரு டிசைனில் அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று புடவைகள் மட்டுமே இருக்கும், சில டிசைன்கள் ஒன்றே ஒன்றுதான் இருக்கும். ஆக, எங்களிடம் புடவை வாங்கும் பெண்கள், அதே டிசைன் புடவையுடன் மற்றொரு பெண் தங்கள் முன் வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்பதை நன்றாகவே உணர்ந் துள்ளனர். இதுதான் திரும்பத் திரும்ப பெண்கள் எங்களைத் தேடிவருவதற்கு முக்கியக் காரணம்’’ என்று தன் பிசினஸின் யுஎஸ்பி (USP - Unique Selling Point) பற்றி கூறியவர்,

‘`அடுத்ததாக, பேக்கிங். வழக்கமான அட்டை டப்பாவில் கொடுக்காமல், உறுதி யான ‘கப்பா பாக்ஸி’ல் எங்கள் புடவைகளை டெலிவரி செய்தோம்; அதை அப்படியே வார்ட்ரோபில் வைத்துக் கொள்ளலாம் என்பதால் பெண்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. எங்களைப் பொருத்தவரை எங்களிடம் புடவை வாங்கும் ஒவ்வொரு பெண்ணும் செலிபிரிட்டிதான்’’ என்றார்.

“காரைக்குடியில் இருந்து ஐரோப்பாவுக்கு பட்டுச்சேலை பார்சல்!”
“காரைக்குடியில் இருந்து ஐரோப்பாவுக்கு பட்டுச்சேலை பார்சல்!”

``பிராண்டை ஆரம்பித்த சில மாதங்களி லேயே, தொழிலில் நல்ல வளர்ச்சி. நாங்கள் செய்வது ஆன்லைன் சார்ந்த விற்பனை என்பதால் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் விற்பனை செய்கிறோம். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா எனப் பல நாடுகளில் எங்கள் வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். காரைக்குடிக்கு வருபவர்கள், எங்களிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட்டு வந்து நேரடி ஷாப்பிங் செய்யலாம். சோஷியல் மீடியா, குறிப்பாக இன்ஸ்டாகிராம் எங்கள் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் எனலாம். இப்போது மாதம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் பார்க்க முடிகிறது’’ என்று சொல்லும் சுபா, சக பெண்களுக்குத் தரும் தொழில்முனைவோர் டிப்ஸ் இவைதான்...

``அதிகமாக யோசித்து, ஒரு பிசினஸை ஆரம்பிக்கும் எண்ணத்தைக் குழப்பத்துக்கு உள்ளாக்கி, அந்த முடிவை தள்ளிப் போடாதீர்கள்; கைவிடாதீர்கள். நிச்சயமாகத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்பு திட்டமிடல் அவசியம்தான். ஆனால், தயக்கம் வேண்டாம். முதலீடு அவசியம்தான்; மிகப் பெரிய தொகை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் மனதில் ஓர் எண்ணம் தோன்றி, அதை செய்ய உறுதி இருந்தால்... வாழ்த்துகள்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism