Published:Updated:

‘பிகில்’ வளையல், ‘மூக்குத்தி அம்மன்’ ஜிமிக்கி... கலகல ஷாப்பிங் அனுபவம்!

ஷாப்பிங் அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
ஷாப்பிங் அனுபவம்

வெ.ஹேமமாலினி

‘பிகில்’ வளையல், ‘மூக்குத்தி அம்மன்’ ஜிமிக்கி... கலகல ஷாப்பிங் அனுபவம்!

வெ.ஹேமமாலினி

Published:Updated:
ஷாப்பிங் அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
ஷாப்பிங் அனுபவம்

``உலகத்துலேயே முதல் ஷாப்பிங் மால், நம்ம மதுர புதுமண்டபம்தான். கோடைக்காலத்துல வசந்தவிழா நடத்த திருமலைநாயக்கர் கட்டுன இந்த கல் கட்டடத்துக்கு 350 வயசு. 40, 50 வருஷமா இது, பொண்ணுங்க கம்மல், செயின், வளையல்னு ஏ டு இஸட் ஆக்சஸரீஸ் வாங்குற ஷாப்பிங் கார்னர். இங்க வெரைட்டிக்குக் குறைவில்ல, ஆனா விலை ரொம்பக் குறைவு’’ - ‘மருத’ பெருமை பேசிய கல்லூரி மாணவிகள் லாரா, ஜாஸ்மின், பெனீஷியா, வேலன்டினா, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எதிரில் அமைந்திருக்கும் புதுமண்டபத்தில் ஷாப்பிங் செய்ய ஆரம்பித்தனர்.

‘பிகில்’ வளையல், ‘மூக்குத்தி அம்மன்’ ஜிமிக்கி... கலகல ஷாப்பிங் அனுபவம்!

‘தங்கச்சி, அண்ணே கடையில இல்லாத அயிட்டமே இல்ல, என்ன வேணும் சொல்லுங்க’ என கடைக்குக் கடை கஸ்டமர் சர்வீஸில் கலக்கிக்கொண்டிருந்தார்கள் அண்ணாத்தேகள்.

‘ஹே கேர்ள்ஸ், ஒரு கடையில ஒரு பொருளுக்கு பேரம் பேசி கடைசி விலை ஃபிக்ஸ் பண்ணணும். அப்புறமும் அதை வாங்கிடாம, ‘இதோ வர்றேன்...’னு பக்கத்துல கடையில போய் அதே பொருளுக்கு அதே மாதிரி பேரம் பேசி பாக்கணும். ரெண்டுல எது குறைவா இருக்கோ அங்க வாங்கிடலாம்’’ என்று ஷாப்பிங் நுட்பங்கள் சொல்லிக் கொடுத்தார் லாரா.

‘பிகில்’ வளையல், ‘மூக்குத்தி அம்மன்’ ஜிமிக்கி... கலகல ஷாப்பிங் அனுபவம்!

அவர்களின் மைண்ட் வாய்ஸை கேட்ச் செய்து பேசிய கடைக்காரண்ணா... ‘`சிஸ்டர்ஸ்... இதே பொருள நீங்க மால்ல, பெரிய கடைகள்ல வாங்கும்போது அந்தக் கடை வாடகை, ஏ.சி, லைட்டு அலங்காரம், யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு அங்க வேலபாக்குற ஆளுங்களுக்கு சம்பளம்னு எல்லாத்துக்கும் நீங்க வாங்குற பொருள்லதான் விலை வைப்பாங்க. அட்டையில போட்டிருக்குற காசை மறு பேச்சு பேசாம கொடுத்துட்டு வந்துடுவீங்க. ஆனா, அதே பொருள இங்கே பாதி விலைக்கும் குறைவாவே வாங்கலாம். பேரம் பேசுற சந்தோஷமும் கெடைக்கும். மால்ல சனி, ஞாயிறுதான் வியாபாரம் நடக்கும். இங்க தெனம் தெனம் திருவிழாதான். அடுத்தடுத்து கடைகளும் இருக்குறதால பார்த்துப் பார்த்து வாங்கலாம். வாங்க வாங்க...’’ என்று சொல்ல, ‘`வாவ்... சிம்ப்பிளா ஒரு பிசினஸ் கிளாஸ் எடுத்துட்டீங்கண்ணே’’ என்று உற்சாகமானார் ஜாஸ்மின்.

‘பிகில்’ வளையல், ‘மூக்குத்தி அம்மன்’ ஜிமிக்கி... கலகல ஷாப்பிங் அனுபவம்!

“இந்தக் கடைகள்லாம் எங்க அப்பாக்கள் காலத்துல இருந்து, 40 வருஷத்துக்கும் மேல இருந்துட்டு வருது. உங்கள மாதிரி காலேஜ் கேர்ள்ஸ்னு எல்லாரும் இங்க ரெகுலர் கஸ்டமருங்க’’ - கம்மல் பார்த்தபடியே கடைக் காரர்களிடம் கதை கேட்டுக்கொண்டிருந்தார் பெனீஷியா.

‘பிகில்’ வளையல், ‘மூக்குத்தி அம்மன்’ ஜிமிக்கி... கலகல ஷாப்பிங் அனுபவம்!

அடுத்தடுத்த கடை களில் இருந்த ஃபேன்ஸி அயிட்டங்களின் பெயர்கள் எல்லாம் தாறுமாறு. ‘`இது ‘பிகில்’ வளையலு... நயன்தாரா போட்டிருப்பாங்களே. ‘செம்பருத்தி’ செயின், ‘மூக்குத்தி அம்மன்’ செயின், ஜிமிக்கி... எல்லாம் இருக்கு எடுங்க எடுங்க. ‘மாஸ்டர்’, ‘வலிமை’ வளை யல்லாம்கூட எங்ககிட்ட இப்போவே வந்துடுச்சு. அட, இந்த வளையல போட்டவுடனே ‘ராஜா ராணி’ ஆல்யா மானஸா மாதிரி ஆகிட்டீக...’’ என்று கடைக்காரர் சொல்ல, ‘`இது ஒலக மார்க்கெட்டிங்டா சாமீ’’ என்று வெடித்துச் சிரித்தார் வேலன்டினா.

``ஒரு மணி நேரத்துக் குள்ள, ஆயிரம் ரூபாய்க்கு எவ்ளோ அயிட்டம்ஸ் வாங்கியிருக்கோம் பாத்தீங்களா..?!” - நாம் கொடுத்த டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்த உற்சாகம் கேர்ள்ஸிடம்!