Published:Updated:

தனியொருத்தி! - 3 - "ஆணும் பெண்ணும் கணவன் - மனைவியா பிரிஞ்சிடலாம்... ஆனா, பேரன்ட்ஸா பிரிய முடியாது!"

- பர்கா மால்பானி
பிரீமியம் ஸ்டோரி
- பர்கா மால்பானி

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள்

தனியொருத்தி! - 3 - "ஆணும் பெண்ணும் கணவன் - மனைவியா பிரிஞ்சிடலாம்... ஆனா, பேரன்ட்ஸா பிரிய முடியாது!"

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள்

Published:Updated:
- பர்கா மால்பானி
பிரீமியம் ஸ்டோரி
- பர்கா மால்பானி

- பர்கா மால்பானி

உங்களுக்குத் தேவையற்றதைச் சுமக்காதீர்கள்.

`` ‘போராட்டங்கள்லேருந்து மீண்ட, போராடி ஜெயிச்ச கதையை ஒருநாள் நீங்க சொல்ல நேரலாம்... அது யாரோ ஒருத்தருக்கான வழிகாட்டியா அமையலாம்’னு ஒரு பொன்மொழி இருக்கு. அந்த நம்பிக்கையில தான் என் வாழ்க்கைப் பயணத்தை முதல் முறையா ஷேர் பண்றேன்...’’ - எந்த நிமிடமும் உதிரக் காத்திருக்கும் கண்ணீரை அடக்கியபடி பேச ஆரம்பிக்கிறார் பர்கா மால்பானி. சென்னையைச் சேர்ந்த பர்கா, ‘தேங் காட் இட்ஸ் ஹோம் மேடு’ என்ற பெயரில் கிளவுட் கிச்சன் நடத்துபவர். நக்ஷ், நீல் என இரட்டை இளவரசர்களின் அம்மா.

காதல், கல்யாணம், அதைத் தொடர்ந்த ஏழரை வருட உறவுப் போராட்டம், தாய்மை, பிசினஸ்வுமன் என பர்காவின் கதை ‘சர்வைவல் ஆஃப் தி ஸ்ட்ராங்கெஸ்ட்’ ரகம்.

``எம்பிஏ முடிச்சிட்டு, அட்வர்டைசிங் துறையைத் தேர்ந்தெடுத்தேன். வேலை பார்த்துக்கிட்டே மீடியா மேனேஜ்மென்ட் படிச்சேன். நான் என் எதிர்காலத்தைப் பத்தி கனவுகள் கண்டுகிட்டிருந்தபோது எங்க வீட்டுல கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சாங்க. ஆனா, கல்யாணத்தை பத்தி எனக்குள்ள நிறைய கேள்விகள் இருந்தது. வேலையோ, பிசினஸோ சரியா அமையலைன்னா மாத்திக்க லாம். ஆனா, கல்யாண வாழ்க்கை சரியா அமையலைன்னாங்கிற கேள்வியோடு, அரேன்ஜ்டு மேரேஜ் பத்தின பயமும் இருந்தது. அந்த நேரத்துல வேலை தொடர்பா எனக் கொரு அவார்டு கிடைச்சது. அங்கதான் என் எக்ஸ் ஹஸ்பண்டை சந்திச்சேன். அறிமுகம் நட்பாச்சு... காதலாச்சு. கல்யாணம் பண்ணிக்க லாமான்னு கேட்டார். ‘உனக்கு இதுதான் சரின்னு தோணினா எனக்கு ஓகே’ன்னு சொல்லி, ஊரே வியக்குற அளவுக்கு 2011-ம் வருஷம் பிரமாண்டமா கல்யாணம் பண்ணி வெச்சார் அப்பா. தேவதைக் கதைகள் எல்லாம் நிஜமான மாதிரி சந்தோஷமாதான் ஆரம்பிச்சது வாழ்க்கை... ஆனா அது ஒரு வருஷம்கூட நீடிக்கலை...’’ அமைதியாகிற பர்காவுக்கு கலாசாரங்கள் கடந்த கல்யாணம், அதில் ஏற்பட்ட கருத்து வேற்றுமைகள், மனக் கசப்புகள் என பிரச்னைகள் அணிவகுக்க ஆரம்பித்திருக்கின்றன.

``எது நடக்கக்கூடாதுன்னு பயந்தேனோ அது நடந்திடுச்சு. கல்யாண விஷயத்துல நான் எடுத்த முடிவு தப்பாயிடுச்சுங்கிற உண்மையை என்னால ஏத்துக்க முடியலை. மொழி, கலாசாரம்னு எங்களுக்குள்ள எல்லா விஷயங் கள்லயும் வேறுபாடுகள். பரஸ்பர மரியாதை இருந்தா இதையெல்லாம் கடந்து வாழ்ந்திருக்க முடியும். ஆனா அது இல்லாதது தான் பிரச்னையாச்சு... ஆல் ரவுண்டரா அறியப் பட்ட நான், என் படிப்பு, கரியர்னு எல்லாத் தையும் ஓரங்கட்டி வெச்சுட்டு, குடும்பத்தைச் சரியாக்கறதை மட்டுமே யோசிக்க ஆரம்பிச் சேன். அப்படியே ஏழரை வருஷங்களைக் கடந்திருந்தபோது கிட்டத்தட்ட என் வாழ்க்கை சூன்யத்தை நோக்கிப் போயிருந் தது...’’ அம்மா பேசும் தமிழ் புரியாவிட்டாலும் அவரின் உணர்வுகள் புரியும்தானே... பிள்ளை களுக்கு முன் அழுதுவிடக்கூடாதென்ற உணர்வில் அவர்களை வேறு அறைக்கு அனுப்பிவிட்டுத் தொடர்கிறார் பர்கா.

தனியொருத்தி! - 3 - "ஆணும் பெண்ணும் கணவன் - மனைவியா பிரிஞ்சிடலாம்... ஆனா, பேரன்ட்ஸா பிரிய முடியாது!"

``ஒரு நாள் எனக்கு திடீர்னு ஞானோதயம் வந்தது. செத்துப்போன ஒரு செடிக்கு தண்ணிவிட்டு அது மறுபடியும் துளிர்க்கும்னு தப்பான நம்பிக்கையோட அத்தனை நாளும் இருந்திருக்கேன்னு புரிஞ்சது. நான் இருக்கிற இடம் எப்பவுமே சந்தோஷமா, கலகலப்பா இருக்கும்னு எல்லாரும் சொல்லுவாங்க அப்படிப்பட்ட நான் கல்யாண வாழ்க்கை யில் பிரச்னை வந்ததுக்கப்புறம் கடுமையான மன அழுத்தத்துக்குள்ள போயிட்டேன். உயிருக்கும் மேலா நேசிச்ச ஒருத்தர் இனிமே வாழ்க்கையில நம்மகூட தொடரப் போற தில்லைங்கிற உண்மையை என்னால ஏத்துக்க முடியலை. டைவர்ஸுங்கிற வார்த்தையையே என்னால கற்பனை பண்ணிப் பார்க்க முடியலை.

இதுக்கிடையில நான் ப்ரெக்னன்சிக்காக ட்ரீட்மென்ட் எடுத்து இரட்டைக் குழந்தை களை வயித்துல சுமந்துகிட்டு இருந்தேன். ஒரு மகளா, ஒரு மனைவியாவே என்னால டைவர்ஸ் முடிவை எடுக்க முடியாத ஸ்டேஜ்ல ஒரு அம்மாவா நான் எப்படி அந்த முடிவை எடுக்கப்போறேன்ற பயமும் சேர்ந்தது. அப்பதான் என் டிப்ரெஷனுக்காக கவுன் சலரை சந்திச்சேன். கல்யாண வாழ்க்கையிலேருந்து வெளியே வர குழந்தைங்களைக் காரணமா சொல்ல வேண்டியதில்லைங்கிற தெளிவு அங்கே கிடைச்சது.

பிரியறதுன்னு முடிவெடுத் ததும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குழந்தைகளோடு குடியேறினேன். ‘ஹஸ்பண்ட் வெளியூர்ல இருக்கார்’னு பொய் சொன்னேன். அந்தப் பொய்யை ரொம்ப நாள் சொல்ல முடியலை. ஒருநாள் உண்மையைச் சொல்ல வேண்டி வந்தது. ஆனா, அந்த ஹவுஸ் ஓனர் என் நிலைமையைப் புரிஞ்சுகிட்டார். இனி எந்தக் கேள்வியும் கேட்க மாட்டேன்னு சொன்னார். கிட்டத்தட்ட நாலு வருஷங்கள் நான் தீவிரமான டிப்ரெஷனுக்குள்ளே இருந்தேன். யார்கூடவும் பேசப் பிடிக்காது. எந்த வேலை யும் செய்யப் பிடிக்காது. ஏராளமான ஹெல்த் பிரச்னைகள்... எக்கச்சக்கமா வெயிட் போட் டேன். ஒருநாள் என்னை கண்ணாடியில பார்த்தபோது இது நான் தானானு தோணுச்சு. பிரச்னைகளை பத்தி பேசினது போதும், இனி தீர்வுகளை யோசிப்போம்னு முடிவு பண்ணினேன்.

சென்னையில ‘சென்னை சிங்கிள் பேரன்ட்ஸ்’ என்ற குரூப்பை நடத்திக்கிட்டு இருந்த ப்ரியா வேணுகோபால் அறிமுகம் கிடைச்சது. அவங்களும் என்னை மாதிரியே சிங்கிள் பேரன்ட். நூற்றுக்கணக்கான சிங்கிள் பேரன்ட்ஸுக்காக அந்த குரூப்பை ஆரம்பிச் சிருந்தாங்க. டைவர்ஸுங்கிற வார்த்தை யையே அவமானமா நினைச்சிட்டிருந்த எனக்கு, அதை இயல்பா ஏத்துக்க, கடக்க முடியும், டைவர்ஸுக்கு பிறகும் சந்தோஷ மான வாழ்க்கை சாத்தியம்னு புரிய வெச்சது அவங்களுடனான சந்திப்பு’’ - குழம்பிய குட்டையாக இருந்த பர்காவின் மனநிலை, தெளிந்த நீரோடையாக மாறிய தருணம் அது. அந்தத் தெளிவு அவரை தன்னம்பிக்கை மனுஷி யாக மாற்றியிருக்கிறது.

``டைவர்ஸ்னு முடிவெடுத்த போது எனக்கும் என் குழந்தைங் களை எப்படி வளர்க்கப் போறேங்கிற கவலை இருந்தது. சென்னையில ஒரு பிரபல அட்வர்டைசிங் கம்பெனியில நான் ஆசைப்பட்ட வேலைக்கு அழைப்பு வந்தது. ‘டைவர்ஸுக்கு அப்ளை பண்ணிட்டு, பசங்களை வேலைக்காரங்ககிட்ட விட்டுட்டு இவ பாட்டுக்கு வேலைக்குக் கிளம்பிட்டா’ன்னு பேசினாங்க.

வேலையிலேருந்து ஒரு பிரேக் எடுத்தேன். எனக்கு சின்ன வயசுலேருந்தே சமையல்ல ஆர்வம் அதிகம். அதுவரைக்கும் ஹாபியா மட்டுமே இருந்த சமையலை பிசினஸா பண்ணா என்னன்னு தோணுச்சு. நான் தேடற சந்தோஷம் எனக்கு என் கிச்சன்ல கிடைக்கும்னு தோணுச்சு. ‘தேங் காட் இட்ஸ் ஹோம் மேடு’ என்ற பெயர்ல கிளவுட் கிச்சன் ஆரம்பிச்சேன். எங்கேயோ தொலைச்ச என்னை என் கிச்சன்ல கண்டுபிடிச்சேன். கஸ்டமர்ஸோட பாராட்டும், பாசிட்டிவ் கமென்ட்ஸும் கொடுத்த நம்பிக்கையில 'லிட்டில் டம்மீஸ்' என்ற பெயர்ல இன்னொரு பிசினஸ் ஆரம் பிக்கப் போறேன். குடியிருக்க வீடுலேருந்து வேலை கிடைக் கிறதுவரைக்கும் சிங்கிள் பேரன்ட்ஸுக்கு லைஃப்ல நிறைய சவால்கள் இருக்கு. அதையும் மீறி பொருளாதார சுதந்திரம் தேவைப்படுது. என் அனுபவத்துல நான் சந்திச்ச பிரச்னைகளை வெச்சு என்னை மாதிரி பெண்களுக்காக என் பிசினஸ்ல ‘ஆல் வுமன் டீம்’ வெச்சிருக்கேன்’’ - இழந்த சந்தோஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் இருக்கும் பர்கா, பிள்ளை வளர்ப்பையும் புதிய கோணத்தில் அணுகியிருக் கிறார்.

``கல்யாணம்ங்கிறது ரெண்டு குடும்பங்களை இணைக்கிற விஷயமா இருந்தாலும் டைவர்ஸுங்கிறது ரெண்டு தனி நபர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது. குழந்தைங்க இருக்கிறதால அது மாறிடாதுன்னு நம்பினேன். அப்பதான் எனக்கு ‘கோ பேரன்ட்டிங்’ பத்தி தெரிய வந்தது. எங்களுக்குள்ள பிரச்னை... பிரியறதுனு முடிவெடுக்கறோம்... பசங்க அம்மாகிட்ட வளரணுமா, அப்பாகிட்டயா... அந்த முடிவெடுக்கும் வயசு அப்போ என் குழந்தைங்களுக்கு இல்லை. குழந்தைங்களோட சந்தோஷம்தான் எனக்குப் பெருசா இருந்தது. அதனால மன உணர்வுகளை ஓரமா வெச்சிட்டு யோசிச்சேன்.

குழந்தைங்களுக்கு அம்மா, அப்பா ரெண்டு பேரும் முக்கியம். கோ பேரன்ட்டிங் கான்செப்ட்டை ஏத்துக்க அசாத்தியமான பக்குவம், பொறுமை வேணும். சிங்கிள் பேரன்ட்டா இருக்கிறதைவிட கோ பேரன்ட்டிங் தான் என் குழந்தைங்களுக்கு சரியானதுனு முடிவெடுத்தேன். இன்னிக்கு என் பசங்க ரெண்டு பேர்கிட்டயும் இருக்காங்க. நீங்க யாராவது ஒருத்தர்கிட்டதான் வளரணும்னு அவங்க மேல நான் எந்த பிரஷரையும் போடறதில்லை. குழந்தைங் களோட படிப்பு, ஹெல்த், எதிர்காலம்னு எல்லாத்தையும் நாங்க பகிர்ந்துக்கறோம்.

நான் ஏத்துக்கிட்ட கோ பேரன்ட்டிங்தான் சரின்னு சொல்ல மாட்டேன். ஆனா ,இது மோசமானதில்லைனு சொல்ல முடியும். எப்போதும் சண்டைபோடற அம்மா, அப்பாவைப் பார்த்து வளர்றதைவிட இது பெட்டர்னு தோணுது. ஓர் ஆணும் பெண்ணும் கணவன்-மனைவியா பிரிஞ்சிடலாம்... ஆனா, பேரன்ட்ஸா பிரிஞ்சிட முடியாது. வாழ்க்கையில பிரச்னை இருக்கு... ஆனாலும் குழந்தைங் களுக்காக சேர்ந்திருக்கோம்னு சொல்றதைவிட, பிரிஞ்சிருந் தும் அந்தக் குழந்தைங்களை சந்தோஷமா வெச்சிருக்க முடியும்னு நம்பறேன்.

வாழவே பிடிக்காம, தற்கொலை முயற்சிகள் எடுத்து, டிப்ரெஷனுக்குள்ளே போன நான் இன்னிக்கு வாழணும்னு ஆசைப்படறேன். பெரிசா சாதிக்கணும்னு நினைக்கிறேன். பாதிக்கப்பட்டவள் என்ற இடத்துலேருந்து போராளிங்கிற இடத்துக்கு வந்திருக்கேன். மறுபடி கனவுகள் காண ஆரம்பிச்சிருக்கேன். கனவு காணத் தெரிஞ்சவங்களுக்கு அதை நனவாக்கவும் தெரியும்தானே...’’

அத்தனை கனவுகளும் நனவாகட்டும் பர்கா.

- வெற்றிக்கதைகள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism