Published:Updated:

தனியொருத்தி - 9 - ``திருமணத்தைப் போலவே விவாகரத்தும் வலியில்லாமல் முடியட்டும்!’’

தனியொருத்தி
பிரீமியம் ஸ்டோரி
தனியொருத்தி

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள் - ராஜி கிருஷ்ணகுமார்

தனியொருத்தி - 9 - ``திருமணத்தைப் போலவே விவாகரத்தும் வலியில்லாமல் முடியட்டும்!’’

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள் - ராஜி கிருஷ்ணகுமார்

Published:Updated:
தனியொருத்தி
பிரீமியம் ஸ்டோரி
தனியொருத்தி

காலம் வலிகளை ஆற்றுவதில்லை... வலிகளோடு வாழக் கற்றுக்கொடுக்கிறது.

சென்னையின் பிரதான ஏரியாக்களில் பிரபலமாக இருந்த உணவகங்களில் முக்கிய மானது ‘கிருஷ்ண விலாசம்’. கணவர் கிருஷ்ணகுமார் தொடங்கிய அந்த உணவ கத்தை, அவரது இழப்புக்குப் பின் தனக்கான விலாசமாக மாற்றிக்கொண்டார் ராஜி கிருஷ்ணகுமார். கொரோனா சூழலில் பல உணவகங்களும் மூடப்பட்ட நிலையில், பெரிய போராட்டத்துக்குப் பிறகு தன் உணவ கத்தின் விலாசத்தை மட்டும் மாற்றியிருக்கிறார் ராஜி. ஏனெனில் ராஜிக்கு ‘கிருஷ்ண விலாசம்’ என்பது வெறும் உணவகமல்ல, உணர்வகம். கிருஷ்ணாவைப் பிரிந்து ஏழு ஆண்டுகளான நிலையிலும் உளப்பூர்வமாக அவருடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். ராஜியின் வார்த்தைகளிலும் அவரது வாழ்க்கையிலும் கிருஷ்ணாவே நிறைந்திருக்கிறார்.

‘`அப்பா காவல்துறை அதிகாரி. அம்மா ஹோம் மேக்கர். பிள்ளைங்க நாலு பேருமே மாஸ்டர்ஸ் டிகிரி முடிச்சிட்டுதான் கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிறதுல அப்பா உறுதியா இருந்தார். நான் எம்.எஸ்ஸி மைக்ரோபயாலஜி முடிச்சேன். நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சிங்கப்பூர் மற்றும் பாங்காக் ஏஷியன் ஸ்கூல் ஆஃப் டெக்னாலஜியில ரெண்டாவது மாஸ் டர்ஸ் டிகிரி படிச்சேன். அப்புறம் என்விரான் மென்ட்டல் டெக்னாலஜில பிஹெச்.டி முடிச் சேன். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பங்கிறதால நான் வெளிநாட்டுக்குப் போய் படிக்க அம்மாவும் அப்பாவும் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க.

 கணவர் படத்துடன்...
கணவர் படத்துடன்...

அம்மாவும் அப்பாவும் ஆதர்ச தம்பதியா இல்லாம ஆத்மார்த்த தம்பதியா வாழ்ந்து காட்டினவங்க. ஒருத்தரை ஒருத்தர் நிறை களுக்காக மட்டுமில்லாம குறைகளுக்காகவும் நேசிச்சவங்க. அவங்களுக்குள்ள நிறைய வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடுகள் வந்திருக்கு. கடைசியில குடும்ப நலன், குழந்தைகள் நலனுக்காக யோசிச்சு முடிவெடுப் பாங்க.

குடும்பம் என்பது ஓர் அமைப்பில்லை, அது ஆணுக்கும் பெண்ணுக்குமான ஆழமான புரிந்துணர்வுங்கிற பார்வையிலதான் நாங்க நாலு பேரும் வளர்ந்தோம். அம்மா- அப்பா வைப் பார்த்து எல்லா கணவன் - மனைவியும் இப்படித்தான் இருப்பாங்க போலங்கிற எண்ணத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனா, யதார்த்தம் வேற மாதிரி இருந்தது...’’ நிதர்சனம் உணர்ந்தவரின் வாழ்க்கையில் விதி வேகமாக விளையாடியிருக்கிறது.

‘`அம்மா - அப்பா பார்த்து நடத்திவெச்ச திருமணம். கணவர் பெயர் ரவி. ரொம்ப நல்ல மனிதர். எங்களுக்குள்ள பிரச்னைகள்னு எதுவும் இல்லை. ஆனாலும் என் எதிர்பார்ப்பு களை அவராலயும் அவரோட எதிர்பார்ப்பு களை என்னாலயும் நிறைவேத்த முடியலை. முதல் வருடத்துலயே நாங்க பொருத்தமான தம்பதியர் இல்லைனு புரிஞ்சிடுச்சு. அதுக்கு மேலயும் அந்த வாழ்க்கையில தொடர்வது சரியா இருக்காதுன்னு தோணுச்சு. மனமுவந்து விவாகரத்து பண்ணிட்டோம். திருமணத்தை எவ்வளவு மகிழ்ச்சியா, மனநிறைவோடு பண்றோமோ, விவாகரத்தையும் அதே மாதிரி அடுத்தவங்களுக்கு பொருளாதார சிக்கலையோ, வலியையோ கொடுக்காம செய் துட்டா, சம்பந்தப்பட்ட அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் அடுத்து வரப்போற வாழ்க்கை சுமுகமா இருக்கும்...’’ பிரிவை அழகாக்கும் ஆலோசனை சொல்லும் ராஜிக்கு திருமண மான ஒரே வருடத்தில் விவாகரத்தாகி யிருக்கிறது.

‘`விவாகரத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் தனிமை வாழ்க்கைதான் வாழ்ந்தேன். கனடாவுல சயின்ட்டிஸ்ட்டா என் பயணம் ஆரம்பமானது. 2009-2010-ல தமிழ்நாட்டுக்கு வந்து ஈஷா ஃபவுண்டேஷன் நடத்தும் பள்ளிகள்ல எஜுகேஷனல் கோ ஆர்டினேட்டரா வேலை பார்த்தேன். அந்தப் பணியில தொடரணும், தமிழ்நாட்டுலயே இருக் கணும்னு ஆசைப்பட்ட எனக்கு அது நடக்கலை. 2001 முதல் 2008 வரை வெளி நாட்டுல சிங்கிளா என்னால சந்தோஷமா இருக்க முடிஞ் சது. ஆனா தமிழ்நாட்டுல அப்படி வாழ முடியலை. ‘நீ ஏன் கல்யாணம் பண்ணிக் கலை... எப்போ பண்ணிக்கப் போறே... நீ கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் உனக்கு செகண்ட்ஹேண்டா தான் ஒருத்தன் கிடைப் பான்...’ இந்த மாதிரியான கேள்விகளும் விமர்சனங் களும் என்னை விடலை. அந்த வலியை சகிச்சுக்க முடியாம மறுபடி நான் கனடா போயிட்டேன்.

‘நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்’னு ஒருநாள் எனக்கொரு மெயில் வந்தது. யாரோ என்னைக் கலாய்க் கிறாங்கன்னு நினைச்சேன். ‘என் பெயர் கிருஷ்ணகுமார். நான் துபாய்ல உணவகம் நடத்திட்டிருக்கேன். உங்களை பத்தி தெரிஞ்சு தான் கேட்கறேன்’னு சொன்னார். ‘நான் கல்யாணம் பண்ற மனநிலையில இல்லை, நான் உங்க குடும்பத்துக்குப் பொருத்தமா இருப்பேனான்னும் தெரியலைன்னு சொன் னேன். அடுத்த சில நாள்ல துபாய்லேருந்து கனடாவுக்கு என்னைப் பார்க்க வந்துட்டார். பேசினோம், பழகினோம். ரெண்டு பேர் வீட்டு சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக் கிட்டோம்.

கிருஷ்ணாவுக்கும் அது இரண்டாவது திருமணம். கல்யாணத்துக்குப் பிறகு நானும் கிருஷ்ணாவும் வாழ்ந்த ஐந்து வருஷ வாழ்க்கை அவ்வளவு ஈஸியானதா இல்லை. ஆன்மிக நம்பிக்கையுள்ள, ரொம்ப டிரெடிஷனலா வளர்க்கப்பட்ட பெண் நான். ஆனாலும் பத்து வருஷ வெளிநாட்டு வாழ்க்கை எனக்குக் கொடுத்திருந்த சுதந்திரத்தை துபாய் வாழ்க்கை கொடுக் கலை. மூணாவது வருஷ முடிவுல நாங்க பிரிஞ்சிட லாமானுகூட யோசிச்சோம். ஆனா சண்டை போடவோ, பிரியவோ ஒரு நபர் உயிரோட இருக்கறது எவ்வளவு முக்கியம்னு கிருஷ்ணாவை இழந்த பிறகு புரியுது...’’ வார்த்தை கள் வர மறுக்க, ராஜியின் பார்வை கிருஷ்ணாவின் படத்தை வெறிக்கிறது.

தனியொருத்தி - 9 - ``திருமணத்தைப் போலவே
விவாகரத்தும் வலியில்லாமல் முடியட்டும்!’’

``கிருஷ்ணாவோடு வாழ்ந்த கடைசி ரெண்டு வருஷ வாழ்க்கை கவிதை மாதிரி இருந்தது. துபாய்ல மாசம் ஐந்து லட்ச ரூபாய் சம்பளத்துல நான் பார்த் திட்டிருந்த சயின்ட்டிஸ்ட் வேலையை விட்டுட்டு கிருஷ்ணாவுக்காக இந்தியா வந்தேன். நான் நினைச்சதை அவர் பண்ற தும் அவருக்காக நான் விட்டுக் கொடுக்கிறதுமா எங்களுக்குள்ள நல்ல அந்நியோன்யம் வந்திருந்தது.

கிருஷ்ணாவுக்கு பைக் ஓட்டறது ரொம்ப பிடிக்கும். ஒருநாள் ஸ்போர்ட்ஸ் பைக்ல, ஈசிஆர்ல ரைடு போயிட்டு வரேன்னு கிளம்பினவர், திரும்ப வரவே இல்லை. ஆக்ஸிடன்ட்ல இறந்துட்டார். ஒருவேளை நான் கொஞ்சம் அலர்ட்டா இருந்திருந்தா கிருஷ்ணா என்னைவிட்டுப் போயிருக்க மாட்டாரோ, காப்பாத்திருக்கலாமோங்கிற கேள்வி கிட்டத்தட்ட ஒரு வருஷம் என்னை அரிச்செடுத்தது. அந்தக் குற்ற உணர்வுலேருந்தும், மன அழுத்தத்துலேருந்தும் என்னை மீட்டவங்க என் நண்பர்கள். ‘ கிருஷ்ணாவோட இறப்புக்கும் உனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதுலேருந்து வெளியே வா’ன்னு சொல்லி, கூடவே நின்னாங்க. கிருஷ்ணா இல்லாம வாழ ஆரம்பிச்ச பிறகு நிறைய கஷ்டங்கள்... சவால்கள்... அப்பல்லாம் ‘கிருஷ்ணா இருந்திருந்தா நல்லாருந்திருக்கும்ல’னு தோணிருக்கு. அவரை நன்றி யோடு நினைச்சுப் பார்த்திருக்கேன். இருக்குறவரை கிருஷ்ணாவோட நிறைய சண்டை போட்டிருக்கேன். இன்னிக்கு என்னால அவரை நேசிக்க மட்டும்தான் முடியும். யாராலயும் ஈடுசெய்ய முடியாதபடி ஒரு வெற்றிடத்தைக் கொடுத்துட்டுப் போயிட்டார்...’’ ராஜியின் நினைவுப் பகிரலில் நமக்கு கண்கள் கசிகின்றன. ஆனால், அழக்கூடாதென்பதில் அவ்வளவு வைராக்கியம் ராஜிக்கு.

‘ஒருகட்டத்துல எல்லாத்துலேருந்தும் மீண்டு, கிருஷ்ணாவோட ஹோட்டல் பிசினஸை கையில எடுத் தேன். ‘பொம்பிளை ஹோட்டல் பிசினஸ் பண்றதா, மூணே மாசத்துல மூடிடுவா’ன்னு காதுபட பேசினாங்க. கொரோனா சூழலுக்கு நானும் தப்பலை. சென்னையின் பிரதான ஏரியாக்கள்ல இருந்த ரெஸ்டாரன்ட்டுகளை மூடிட்டு, ஐஐடிக்குள்ளேயும் அண்ணா யுனிவர் சிட்டிக்குள்ளேயும் ஆரம்பிச்சேன். மாணவர்களுக்கு குறைந்த விலையில நிறைவான சாப்பாடு கொடுக்கிற திருப்தியோடு ஓடிக்கிட்டிருக்கேன். முதல் கல்யாணம் விவாகரத்தாகி, கிட்டத்தட்ட பத்து வருஷங்களை சிங்கிளா வாழ்ந்திருக்கேன். அதுல எனக்கு எந்தப் பிரச்னையுமே இல்லை. ஆனா ரெண்டாவது திருமணம், அதுல கணவனை இழந்து தனியா வாழற வாழ்க்கை வேற மாதிரி இருக்கு. கிருஷ்ணாவைப் பிரிஞ்ச பிறகான இந்த ஏழு வருஷ வாழ்க்கை ரொம்பவே கடினமானதா இருக்கு. அடுத்தென்னனு யோசிச்சா, இன்னொரு கல்யாணம், அது மூலமா உறவுகள், குழந்தைகள், குல தெய்வக் கோயில் பிரார்த்தனைகள், விசேஷங்கள்னு மறுபடி வாழ்க்கை அதே பாதையிலதான் பயணிக்க வைக்கும். அந்தக் கட்டத்துலதான் தனிமைங்கிறது எவ்வளவு பெரிய வரம்னு புரிஞ்சது.

தனியா வாழ பயந்துட்டு நம்ம சமூகத்துல நிறைய பெண்கள் தப்பான திருமண வாழ்க்கையை சகிச்சுக்கிட்டு இருக்காங்க. கணவரைப் பிரிஞ்ச சிலர், யோசிக்காம உடனே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறாங்க. குடும்பம் என்ற அமைப்பு முக்கியம்தான். அதுல மாற்றுக் கருத்து இல்லை. ஆனா, இந்த உலகத்துல மத ரீதியா, கல்வி ரீதியா, அரசியல் ரீதியா... இப்படி இன்னும் எல்லாத்துலயும் மாற்றம் வரணும்னா, அது பெண்களால மட்டும்தான் முடியும். குடும்ப வாழ்க்கையில இருக்குற பெண் களால அதுக்கு நேரம் ஒதுக்க முடியாது. சிங்கிள் வுமனாலதான் அது சாத்தியம்.

எனக்கு சம்பாதிக்கணும், சேர்த்து வைக்கணும்ங்கிற தேவை இல்லை. என்னை மாதிரியே ஏதோ ஒரு மூலையில தனிமையில இருக்கும் ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்கலாம்னு தோணுச்சு. என்னால அரசியல் மாற்றத்தையோ, விஞ்ஞான மாற்றத்தையோ கொண்டு வர முடியாது. ஆனா, ஒரு பெண் குழந்தையோட வாழ்க்கையில மாற்றம் வர நான் காரணமா இருக்கலாமேன்னு தோணுச்சு. அதுக்கான முயற்சி களை நோக்கிதான் நகர ஆரம்பிச்சிருக்கேன்’’ என்பவர் மீண்டும் கண்களை ஈரமாக்குகிறார்.

இந்த முறை அது ஆனந்த ஈரம்!

- வெற்றிக்கதைகள் தொடரும்...