Published:Updated:

``அதுக்கு, மூணு கோடி ரூபாய் தேவை... ஆனா, ஆறு லட்சத்துலயே முடிச்சிட்டோம்!”

ஸ்ரீமதி கேசன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீமதி கேசன்

பிரமிக்க வைக்கும் ஸ்பேஸ் கிட்ஸ் ‘ராக்கெட்ரி’

``அதுக்கு, மூணு கோடி ரூபாய் தேவை... ஆனா, ஆறு லட்சத்துலயே முடிச்சிட்டோம்!”

பிரமிக்க வைக்கும் ஸ்பேஸ் கிட்ஸ் ‘ராக்கெட்ரி’

Published:Updated:
ஸ்ரீமதி கேசன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீமதி கேசன்

விண்வெளி அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்களைக் கண்டடைந்து இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப்பு. இந்த அமைப்பின் மூலம் இதுவரையில் 18 பலூன் சாட்டிலைட்களும் செயற்கைக்கோளின் சுழல் வட்டப்பாதையின் துணைப்பாதையில் சுற்றக் கூடிய (sub orbital) இரண்டு சாட்டிலைட்களும் அனுப்பப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்குபேஷன் சென்டரில் இந்த அமைப் பின் அலுவலகத்துக்காக ஓர் இடம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதன் திறப்பு விழாவில் `ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ நிறுவனர் ஸ்ரீமதி கேசனை சந்தித்தோம்...

“விண்வெளி அறிவியலில் பல சாதனைகளை நிகழ்த்துற திறமை நம்ம குழந்தைகள்கிட்ட இருக்கு. அதை வெளிக்கொண்டு வர்றதுக்கான ஒரு தளத்தை அமைச்சுக் கொடுக்கணும்னுதான் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப்பைத் தொடங்கினேன். மற்ற நாடுகளில் எல்லாம் படிப்பையும் வேலையையும் தொடர்பு படுத்திக்க மாட்டாங்க. ஆனா, நம்ம நாட்டுல என்ன படிக்கிறோமோ அந்த வேலைதான் பார்க்கணும்னு இருக்கு. அந்த எண்ணத்தை மாத்தணும். ராணுவத்துக்குப் போகணும், விஞ்ஞானி ஆகணும்னு பல கனவுகளோட இருந்தேன். ஆனா 18 வயசுலயே கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. 16 ஆண்டுகள் இல்லத்தரசியா இருந்தப்புறம் என் தோழி மூலமா நாசாவில் நடக்குற கண்காட்சிக்குப் போற வாய்ப்பு கிடைச்சுது. அதான் என் வாழ்க்கையோட திருப்புமுனை. நம்ம நாட்டுல பல விஞ்ஞானிகளை உருவாக் கணும்ங்கிற நோக்கத்துல ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப்பைத் தொடங்கினேன்” என்று இதன் தொடக்கம் குறித்துப் பேசுகிறார் ஸ்ரீமதி.

``அதுக்கு, மூணு கோடி ரூபாய் தேவை... ஆனா, ஆறு லட்சத்துலயே முடிச்சிட்டோம்!”

‘`விண்வெளி அறிவியலை விரும்புற பலருக் கும் நாசா போறது பெருங்கனவா இருக்கும். அங்க போயிட்டு வந்தப்புறம் அறிவும் ஆர்வ மும் இன்னும் விசாலமடையும். இந்தியா, துபாய், நைஜீரியான்னு பல நாடுகள்லேருந்தும் 3,500 குழந்தைகளை நாசாவுக்குக் கூட்டிட்டுப் போயிருக்கேன். நாசாவில் மூன்று நாள்கள் விண்வெளி அறிவியல் பத்தின பாடம் நடத்து வாங்க. அதன் மூலமா அடிப்படை விண்வெளி அறிவியலை தெரிஞ்சுப்பாங்க. பெருநகரங் களில் வசிக்குற வசதியான வீட்டுக் குழந்தைகள் மட்டுமில்லாம சிறு/குறு நகரத்து மாணவர்களை யும் நாசாவுக்குக் கூட்டிட்டுப் போயிருக்கேன்.

விண்வெளி அறிவியல் சார்ந்த அறிவும் ஈடுபாடும் கொண்ட பள்ளி மாணவர்களை வெச்சு சின்ன அளவுல சாட்டிலைட் பண்ண லாம்னு முடிவு பண்ணினேன். ஒரு சாட்டி லைட் தயாரிக்கவே மூணு கோடி ரூபாய் ஆகும். அதை 700 கோடி ரூபாய் மதிப்புள்ள ராக்கெட்டுல அனுப்பி வைக்கணும். நம்ம கிட்ட அவ்வளவு வசதி இல்லாததால சின்ன சாட்டிலைட் பண்ணி 2015-ம் ஆண்டு ஹீலியம் பலூன் மூலமா மேல அனுப்பினோம். இதுக்கு எங்களுக்கு ஆறு லட்சம் வரை செலவாச்சு. இந்த ஏழு ஆண்டுகள்ல 18 ஹீலியம் பலூன் சாட்டிலைட் லாஞ்ச் பண்ணயிருக்கோம். இந்தியாவிலேயே முதல்முறையா செயற்கைக்கோளின் சுழல் வட்டப்பாதையின் துணைப்பாதையில் சுற்றக் கூடிய (சப் ஆர்பிட்டல்) செயற்கைக்கோளான கலாம் சாட் - ஐ எங்க மாணவர்கள் மூலமா தயாரிச்சு லாஞ்ச் பண்ணியிருக்கோம். உலகின் மிகச்சிறிய சாட்டிலைட் அதுதான். நாசா மூலமா அதை அனுப்பினோம். இஸ்ரோ மூலமா சதிஷ் தவான்ங்குற ஆர்பிட்டல் சாட்டிலைட்டை அனுப்பி அதன் மூலமா விண்வெளியின் அழுத்தம் பற்றி ஆய்வு செஞ்சோம்.

75-வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் 75 பெண் குழந்தைகளின் பங்களிப் பில் தயாரிக்கப்பட்ட ஆஷாதி சாட்டி லைட்டை லாஞ்ச் பண்ண இருக்கோம். அதுக் கான வேலைகள் தீவிரமா நடந்துகிட்டிருக்கு. எங்க ஆய்வுகளுக்காக அண்ணா பல்கலைக் கழகத்தின் இன்குபேஷன் வளாகத்துல ஓர் இடம் கொடுத்திருக்காங்க” என்றவர் எதிர்காலத் திட்டம் குறித்தும் கூறினார்.

``அதுக்கு, மூணு கோடி ரூபாய் தேவை... ஆனா, ஆறு லட்சத்துலயே முடிச்சிட்டோம்!”

“விண்வெளி அறிவியல் படிக்க விரும்புற வங்களுக்காக ‘இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் பார்க்’ உருவாக்கணும்ங்கிறதுதான் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்போட மிகப்பெரிய இலக்கு. அரசு எங்களுக்கு குறைஞ்சபட்சம் ஏழு ஏக்கர் நிலம் கொடுத்தா அந்த இடத் துலயே இந்தப் பயிலகத்தை உருவாக்க முடியும். வசதியில்லாத ஏழை மாணவர் களுக்கு இது ரொம்பவும் பயனுள்ளதா இருக்கும். உலக நாடுகளே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு நம் குழந்தைகளை விண்வெளி அறிவியல்ல சாதிக்க வைக்கிறதுதான் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்போட முதன்மை நோக்கம்” - நம்பிக்கையோடு முடிக்கிறார் ஸ்ரீமதி கேசன்.