Published:Updated:

‘திரௌபதி முர்முவாகிய நான்..!’

திரௌபதி முர்மு
பிரீமியம் ஸ்டோரி
திரௌபதி முர்மு

பழங்குடிப் பெண் எழுதியிருக்கும் குடியரசுத் தலைவர் வரலாறு

‘திரௌபதி முர்முவாகிய நான்..!’

பழங்குடிப் பெண் எழுதியிருக்கும் குடியரசுத் தலைவர் வரலாறு

Published:Updated:
திரௌபதி முர்மு
பிரீமியம் ஸ்டோரி
திரௌபதி முர்மு

திரௌபதி முர்மு... இந்திய துணை கண்டத்தையும் தாண்டி மேற்கு நாடுகள் வரை சமீபத்தில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர். ஒடிசா மாநிலத்தின் கடைக்கோடி மலைக் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சந்தாலி பழங்குடி இனத்தில் பிறந்த பெண் ஒருவர், தனது அதிதீவிர அரசியல் ஈடுபாட்டால் படிப்படியாக உயர்ந்து நாட்டின் குடியரசுத் தலைவர் என்ற இமாலய உச்சத்தை இன் றைக்கு தொட்டிருக்கிறார். மேலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக அறியப்படும் இந்திய தேசத்தின் முதல் பழங்குடி பெண் குடியரசுத் தலைவர் என்ற வரலாற்றுப் பெருமையையும் வசப்படுத்தியிருக்கிறார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக கடந்த 2007-ம் ஆண்டு பிரதிபா தேவிசிங் பாட்டில் நியமிக்கப்பட்டபோது எழுந்த கொண்டாட் டங்களைவிட, இம்முறை அதிகக் கொண்டாட்டங்கள். திரௌபதி, நவீன அரசியல் நீரோட்டத்தில் இன்றளவும் கலந்திராத தொல்குடி சமூகத்தில் இருந்து வந்திருக்கும் பெண் என்பதே காரணம்.

ஆண்களாலேயே ஆளப்பட்ட உலக வரலாற்றில், ஒரு சில பெண்கள் ஆங்காங்கே வந்து போயிருக்கிறார்கள் அவ்வளவுதான். மன்னர் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப் பட்டு நூற்றாண்டுகளைக் கடந்தும் பல நாடுகளில் அவ்வளவு எளிதில் பெண்கள் அரியணை ஏற முடியவில்லை. அதிபர், பிரதமர் போன்ற உச்சபட்ச பதவிகளின் அதிகாரங்கள் நாட்டுக்கு நாடு மாறு பட்டாலும், இத்தகைய பதவிகள் பெண் களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றன. 1960-ம் ஆண்டு இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் பல்வேறு போராட்டங்களை கடந்து வெற்றிபெற்றார் சிறிமாவோ பண்டார நாயக்கே. இலங்கையின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையுடன், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட உலகின் முதல் பெண் பிரதமராக சரித்திரத் தில் முதல் கணக்கை தொடங்கி வைத்தார்.

‘திரௌபதி முர்முவாகிய நான்..!’

இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தி பொறுப்பேற்றபோது, ’இந்தியாவில்தான் இது சாத்தியம்’ என, உலகின் வளர்ந்த நாடுகள் பல இந்திய மக்களுக்கு புகழாரம் பாடின. கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் மிகவும் முன்னேறிய வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்கா வில் அதிபர் நாற்காலியை, இதுவரை பெண்களை நெருங்க விடாமல் ஆண்கள் கட்டி காத்து வருகின்றனர். எனில், பின்தங்கிய மற்ற நாடுகளில் பெண்களின் நிலை பற்றி சொல்ல வேண்டாம். இதுபோன்ற உலக அரசியல் சூழலில்தான், இன்றைக்கு நம்முன் குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு அமர்ந்திருப்பது சிறப்பு பெறுகிறது. மேலும், எங்கிருந்து, எவ்வளவு தூரம் அவர் வந்திருக் கிறார் என்பதும் கொண்டாட்டத் துக்குரியது.

ஜமீன்தார்களாலும் ஆங்கி லேயர்களாலும் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட சந்தாலி பழங்குடி இனத்தில் பிறந்தவர் திரௌபதி. அவர் உயர்கல்வி கற்று கல்லூரி பேராசிரியராக உயர்ந்ததே வாழ்நாள் சாதனை என்பதான பின்புலம். அதைக் கடந்து, அரசியலில் தீவிர வேட்கை கொண்டு, ஆசிரியப் பணியை துறந்தார்.

1997-ம் ஆண்டு ராய்ரங்பூர் பகுதியில் உள்ள ஒரு வார்டில் பா.ஜ.க கவுன்சிலராக போட்டி யிட்டு வெற்றியும் பெற்றார். முதல் வெற்றியுடன் தனது முதல் அடியை உற்சாகத்துடன் எடுத்து வைத்த திரௌபதி, 2002-ல் ராய்ரங்பூர் சட்ட மன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டார். பின்னர், ஒடிசாவின் போக்குவரத்து அமைச்சராக இரண்டு ஆண்டுகளும், மீன்வளத் துறை அமைச்சராக இரண்டு ஆண்டுகளும் பதவி வகித்தார். ஒடிசாவின் சிறந்த சட்டமன்ற உறுப்பினர் விருதை 2007-ம் ஆண்டு பெற்று கவனம் ஈர்த்தார். இந்தியாவின் முதல் பழங்குடி ஆளுநர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற வரலாற்றுச் சாதனையை 2015-ம் ஆண்டு உருவாக்கியவரும் இவரே.

அரசியலில் தொடர் ஏறுமுகம் என்றாலும் குடும்ப வாழ்க்கை அவ்வளவு இனிமையாக அமைந்துவிடவில்லை திரௌபதிக்கு. அடுத்தடுத்து கணவன் மற்றும் மகன்களை இழந்து தவித்தார். அதற்கு மருந்தாகவும் மக்கள் பணியையே பற்றிக்கொண்டவர், இன்று நாட்டின் முதல் குடிமகள்.

இதுவரை 15 குடியரசுத் தலைவர்களை பார்த்திருக்கும் நம் நாட்டில், பெண் குடியரசுத் தலைவர் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தியிருக்கிறார் திரௌபதி. மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது நாடான இந்தியாவில், பழங்குடிகள் வெறும் 8% மட்டுமே உள்ளனர். சுமார் 650 பழங்குடி இனக்குழுக்கள் வாழ்ந்து வந்தாலும் பெரும்பாலான அவர்கள் சொந்த மண்ணில் அகதிகளைப் போல பரிதவித்து வருகின்றனர். இன்னும் சொல்லப் போனால் திரௌபதியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கும் வரை அவரது சொந்த ஊருக்கு மின் வசதி கிடையாது.

இதுபோன்ற அரசியல் சூழலில், `பழங்குடி யின’ என்ற பெருமை பிரதிநிதித்துவ அடையாள அரசியலாக நின்றுவிடாமல், விளிம்பு நிலை மக்களின் வாழ்வை மேம்படுத்தி சமூக நீரோட்டத்துடன் கலக்க வைக்கும் மாபெரும் பொறுப்பை நிறைவேற்றட்டும் திரௌபதி முர்மு.

உண்மையான பெயர் என்ன தெரியுமா?

``என் பெற்றோர் எனக்கு வைத்த பாரம்பர்ய பழங்குடி பெயர் `புடி' (Puti). அந்தப் பெயர் பிடிக்காத என் பள்ளி ஆசிரியர்தான், எனக்கு மகாபாரதத்தில் வரும் ’திரௌபதி’யின் பெயரை வைத்தார். திருமணத்துக்குப் பிறகு கணவரின் துணைப் பெயரான ‘முர்மு’ சேர்ந்தது.’’ - திரௌபதி முர்மு