Published:Updated:

ஸ்டார்ட் அப்... சக்சஸ்: ஸ்டார்ட்அப் சக்சஸுக்கான முக்கிய ஃபார்முலா

ஸ்டார்ட் அப்... சக்சஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டார்ட் அப்... சக்சஸ்

`பிராஃபிட் அனால்டிகா’ காஜா மைதீன்

பணப் பிரச்னையா... இல்லவே இல்லை!

ந்த உலகில் யாருக்குமே பண பிரச்னை இல்லை, சிறந்த யோசனைகள் கிடைப்பதே பிரச்னையாக உள்ளது. இந்த உண்மையை ஸ்டார்ட்அப் தொழில்கள் இயற்கையாகவே நிறைவேற்றுகின்றன.

சராசரியான சிந்தனை வேண்டாமே!

சராசரியான சிந்தனை ஸ்டார்ட்அப் தொழில்களுக்கு உதவாது. புதிய சிந்தனையை சரியான முறையில் செயல்படுத்தினால் உங்களிடம் பணம் சேர்வதை யாரும் தடுக்க முடியாது. இவ்வளவு நாள் இந்தப் பணம் எங்கு இருந்தது என உங்களை யோசிக்க வைக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஸ்டார்ட் அப்... சக்சஸ்: ஸ்டார்ட்அப் சக்சஸுக்கான முக்கிய ஃபார்முலா

ஸ்டார்ட்அப் தொழிலும் புதுமையும்!

ஒரு சராசரி தொழிலுக்கும் ஸ்டார்ட்அப் தொழிலுக்கும் உள்ள வித்தியாசமே புதுமைதான். உங்கள் மார்க்கெட்டிங் விளம்பரங்கள் ஒரு புது முயற்சியாகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருக்க வேண்டும்.

உற்பத்தியில் புதிய கண்டுபிடிப்பு அல்லது புதிய முன்னேற்றம் எளிதாக விரிவுபடுத்தக்கூடிய தொழில் முறைகள், அதிகபட்ச வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உருவாக்கும் வாய்ப்பு ஆகிய அம்சங்கள் உள்ள தொழில்களே ஸ்டார்ட்அப் தொழில்கள் என்று நிர்ணயிக்கப்படுகின்றன.

இரண்டு கேள்விக்கான பதிலே ஒரு தொழிலின் முதற்கட்ட ஆரம்பம்!

1. வாடிக்கையாளர் ஏன் என் பொருளை அல்லது சேவையை வாங்க வேண்டும்?

2. ஏன் என்னிடம் வாங்க வேண்டும்?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் உங்களிடம் இருந்தால், அத்தொழிலை தாராளமாக ஆரம்பிக்கலாம். பதில் தெரியவில்லை அல்லது திருப்தி இல்லை என்றால், மீண்டும் தொழிலின் அடிப்படையைத் திட்டமிட்டுக் கொள்வது மிக முக்கியம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வாடிக்கையாளரின் வலியே ஸ்டார்ட்அப்களின் வலிமை

பொருள் சேவை வாடிக்கையாளரின் பிரச்னையை நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.

ஸ்டார்ட் அப்... சக்சஸ்: ஸ்டார்ட்அப் சக்சஸுக்கான முக்கிய ஃபார்முலா

சிறந்த மார்க்கெட்டிங் மட்டும் எப்போதும் வெற்றி பெறும்!

ஒருவரது சேவை மற்றும் தரம் மிகச் சிறந்தது என வாடிக்கையாளருக்கு எப்படித் தெரியும்? முதன்முறையாக அதைப் பயன்படுத்தும்போதுதான் கண்டிப்பாக உணர்வார்கள். முதன்முறை வாங்க வைக்க சிறந்த மார்க்கெட்டிங் உத்திகளே தேவை என்ற அடிப்படையைத் தொழில்முனைவோர் கருத்தில் கொள்ள வேண்டும்.

பெருமைகள் வாடிக்கையாளருக்குத் தேவையில்லை!

தொழில்முனைவோரின் தயாரிப்பு வாடிக்கையாளர்களின் பிரச்னையைத் தீர்ப்பதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தயாரிப்பின் பெருமைகளைக் கூறுவதால் வாடிக்கையாளரின் கவனத்தை இழக்க நேரிடும். பொருளின் பெருமையைக் கேட்க அவர்கள் தயாரில்லை. அவர்கள் பிரச்னைகளே அவர்களுக்கு முக்கியம். பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்வதையே இவ்வுலகம் விரும்பும்.

உணர்வுபூர்வமாக நிலைநிறுத்துங்கள்!

ஒரு பொருளை வாடிக்கையாளர் வாங்குவது என்பது பெரும்பாலும் உணர்வுபூர்வமான முடிவாகவே இருக்கிறது. தர்க்கரீதியான லாஜிக்கல் ரீசனிங் காரணம் உதட்டளவில்தான் சொல்லப்படுகிறது. உணர்வுபூர்வமான விஷயங்களே முடிவு எடுப்பதில் முக்கியம் பெறுகின்றன. ஆகவே, மார்க்கெட்டிங்கில் கவனம் செலுத் துங்கள். உணர்வுபூர்வமாக நிலை நிறுத்துங்கள். அப்படிச் செய்யும்போது அதிகபட்சம் உயர்ந்த விலைக்கு பொருளையோ சேவையையோ விற்க முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்கள் பொருள் அல்லது சேவையை அனைவருக்கும் விற்க முயலாதீர்கள்!

என் தயாரிப்பு எல்லோருக்கும் ஏற்றது என்று சொல்வது பேசுவதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். உண்மையில் அது மிகப்பெரிய தவறு. அனைத்து வாடிக்கையாளர்களையும் திருப்திபடுத்தும் முயற்சி என்பது எந்த ஒரு வாடிக்கையாளரையும் திருப்திப்படுத்த முடியாமல் போகலாம்.

ஸ்டார்ட் அப்... சக்சஸ்: ஸ்டார்ட்அப் சக்சஸுக்கான முக்கிய ஃபார்முலா

குறுகிய பகுதி மக்களின் பிரச்னையைக் குறிவைத்து அதைச் சரிசெய்வதற்கான தீர்வை முயற்சி செய்யுங்கள். இதுவே நீங்கள் வெற்றியை நோக்கி எளிதாகச் செல்ல உதவும்.

வாடிக்கையாளரைக் குழப்ப வேண்டாமே

போட்டியாளர் மூலமாகவே தங்கள் தொழிலுக்குப் பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக தொழில்முனைவோர் பலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. வாடிக்கையாளரைக் குழப்புவதன்மூலமே பெரும்பாலான தொழில் முனை வோர், புதிய வாடிக்கையாளரை இழக்கின்றனர். அதிகமான மாடல்கள் அல்லது சேவைகள் தேவைக்கு அதிகமான தகவல்கள் ஆகியவை வாடிக்கையாளரைக் குழப்பக்கூடும். இதன்மூலம் விற்பனையை இழக்க நேரிடும்.

தைரியமான உத்தரவாதம் தேவை

தொழில்முனைவோர்கள் தங்கள் பொருள் தரமானது என்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை அளிப்போம், என்றும் பொதுவான உத்தரவாதம் அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அடிப்படையில் எந்த நிறுவனமானாலும் தரமான பொருளையும் நல்ல வாடிக்கையாளர் சேவையும் கொடுக்க வேண்டியது அவசியம். இதில் பெரிய சிறப்பு ஒன்றும் இல்லை. ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் உத்தரவாதத்தை மிகத் தைரியமாக அளிக்க வேண்டும். வாடிக்கையாளர் அந்தப் பொருளை ஆர்டர் செய்வதற்கு எந்த ஒரு தயக்கமும் காட்ட முடியாதபடி அது அமைய வேண்டும்.

சிறிய அளவிலான இலவச யுக்தி

தேர்வு செய்யும் குழப்பத்தில் இருப்பவர் அல்லது அவசியம் வாங்க வேண்டுமா என்ற யோசனையில் வரும் வாடிக்கையாளரைக்கூட ஒரு சிறிய அளவிலான இலவச யுக்தி கவர்ந்து இழுக்கும். நிபந்தனையற்ற ஓர் உணர்வை வாடிக்கையாளருக்குக் கொடுக்கும். நன்றாக இருக்குமோ, இருக்காதோ என்ற நிச்சயமற்ற தயக்க உணர்வுடன் வாடிக்கையாளரை வைத்திருப்பது விற்பனையைத் தடுக்கும்.

இந்தியாவுக்கு இன்னும் பல ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான உத்திகள் தேவைப்படுகின்றன. அவை தனித்துவம் மிக்கவையாக இருக்க வேண்டும் என்பதே மிக முக்கியம்.

இன்று மிகப் பெரிய நிறுவனங்கள் விலைமதிப்புள்ள பொருள்களை வாடிக்கையாளருக்கு வாய்ப்பளிக்காமல் `வாங்கிச் செல்லுங்கள் நாங்கள் விற்பது தரமானவையே. உங்களுக்கு கண்டிப்பாகப் பிடிக்கும்' என ஒரு வகையான மிரட்டல் போக்கையே கடைப்பிடிக்கின்றனர். ஆனால், விருப்பம் என்பது ஒவ்வொருவருக்கும் மாறும் என்பதை தொழில்முனைவோர் மறந்துவிடக் கூடாது.

சராசரி வருமானம் வேண்டாமே

ஒரு நிறுவனத்துக்கு வரும் வருமானமானது, ஆர்வ முள்ள ரசிகர்களிடமிருந்து வரும் வருமானம் போல் உணர்வுடன் இருக்க வேண்டும். வாடிக்கையாளர் விருப்பத்துடன் உங்கள் சேவையையோ பொருளையோ வாங்க வேண்டும். சராசரி வருமானம் தொழிலுக்கு

ஒரு காலகட்டத்தில் ஆபத்தாக அமையும். ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர், வாடிக்கையாளர் மத்தியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

உங்கள் தொழிலின் ஒவ்வொரு நடவடிக்கையும் வாடிக்கையாளரை பரவசப் படுத்த வேண்டும். அவர்கள் இதை உணர்ந்து ரசிக்க வேண்டும். இந்த நிலையை எட்டிய நிறுவனங்கள் என்றும் செழிப்பாக இருக்கும். போட்டியாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும். இந்தியாவுக்கு இன்னும் பல ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான உத்திகள் தேவைப்படுகின்றன. அவை தனித்துவம் மிக்கவையாக இருக்க வேண்டும் என்பதே மிக முக்கியம்.

வாய்ப்புகளைச் சரியான முறையில் பயன்படுத்தி வளம்பெற வாழ்த்துகள்!