Published:Updated:

போக்சோ வழக்கு நிலவரம்... பாதிக்கப்பட்டவர் வாட்ஸ் அப்பில் அறியும் வசதி அறிமுகம்!

போக்சோ

அடுத்த கட்டமாக , போக்சோ வழக்கு விசாரணைக்கு வரும் நாட்கள் போன்ற விவரங்கள், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது புகார்தாரர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், அவர்களின் மொபைல்போனுக்கு வாட்ஸ் அப் அல்லது குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தும் முறை அறிமுகமாகி உள்ளது.

போக்சோ வழக்கு நிலவரம்... பாதிக்கப்பட்டவர் வாட்ஸ் அப்பில் அறியும் வசதி அறிமுகம்!

அடுத்த கட்டமாக , போக்சோ வழக்கு விசாரணைக்கு வரும் நாட்கள் போன்ற விவரங்கள், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது புகார்தாரர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், அவர்களின் மொபைல்போனுக்கு வாட்ஸ் அப் அல்லது குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தும் முறை அறிமுகமாகி உள்ளது.

Published:Updated:
போக்சோ

போக்சோ வழக்கின் நிலையை, பாதிக்கப்பட்டவர்கள் வாட்ஸ் அப்பில் எளிதில் அறிந்து கொள்ளும் வசதி, தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் முதல்முறையாக அறிமுகமாகியுள்ள இத்திட்டம், விரைவில் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, `பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்)’ நாட்டில் அமலில் உள்ளது. அத்துடன், தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க காவல்துறை பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது.

அஸ்ரா கார்க்
அஸ்ரா கார்க்

பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக உரிய நீதி கிடைக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, நாட்டிலேயே முதன்முறையாக போக்சோ வழக்கின் நிலையை, பாதிக்கப்பட்டவர்கள் வாட்ஸ் அப் மூலம் அறியும் புதிய வசதி 4 தென் மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

குற்றங்களில் தொடர்புடையோர் வழக்குப் பதிவு செய்தல், குற்றவாளிகளைக் கைது செய்தல் மட்டுமன்றி, குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படியான உரிமைகளையும், சலுகைகளையும் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சூழலுக்கேற்ப, தேவைப்படும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்ததில் தொடங்கி, நீதிமன்ற விசாரணை முடியும்வரை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனிருந்து உதவி புரிய ஒருவரை, குழந்தைகள் நல குழுமத்திடம் இருந்து வேண்டிப் பெறலாம் என்ற சட்ட வழிவகை தெரியப்படுத்தப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளில் அடுத்த கட்டமாக , போக்சோ வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணைகள், வழக்கு விசாரணைக்கு வரும் நாள்கள் போன்ற விவரங்கள், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது புகார்தாரர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், அவர்களின் மொபைல்போனுக்கு வாட்ஸ் அப் அல்லது குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தும் முறை அறிமுகமாகி உள்ளது.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; அதன்படி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில், இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் ஒரு குழு உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்தகட்டமாக இத்திட்டம், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக, காவல்துறை தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.