Published:Updated:

ப்ளீஸ்... வீட்டுல இருங்க!

உழைக்கும் உள்ளங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உழைக்கும் உள்ளங்கள்

உழைக்கும் உள்ளங்கள்

மக்கள் வீட்டில் முடங்கியிருக்க, தங்கள் உயிரைப் பணயம் வைத்து பொதுமக்களுக்காக சேவை ஆற்றிக்கொண்டிருக்கும் சில நல்ல உள்ளங்கள் இங்கே நம்மோடு பேசுகிறார்கள்.

தீப்தி - கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்

“ `கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி, நான் வீட்டுக்குப் போயிருவேன்ல டாக்டர்’னு நோயாளிகள் கேட்கிற குரல் மட்டும்தான் இப்போதைக்கு எங்க காதுகள்ல ஒலிச்சுக்கிட்டே இருக்குது. நோயாளிகள் எங்களைத் தவிர வேறு யாரையும் பார்க்க முடியாத சூழலில் இருப்பதால், சிகிச்சையோடு சேர்த்து அன்பையும் கொடுத்துட்டு இருக்கோம்.

கொஞ்சம் கவனக்குறைவா இருந்தாகூட கொரோனா எங்களுக்கும் பரவிடும். அதிலேருந்து எங்களைக் காக்க அரசாங்கம் கொடுத்திருக்கிற உடை, க்ளவுஸ் எல்லாமே மூணு கிலோ எடை கொண்டதா இருக்கு. அதைப் போட்டுக்கிட்டா வேர்த்து வேர்த்து எங்களுக்கு நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படுது. அஞ்சு நாள் டியூட்டி பார்த்தா, அடுத்த ஏழு நாள் எங்களை நாங்களே தனிமைப்படுத்திக்க வேண்டியதா இருக்கு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ப்ளீஸ்... வீட்டுல இருங்க!

இளம் தாய்களாக இருக்கும் நிறைய செவிலியர்களும் மருத்துவர் களும் தங்கள் குழந்தைகளைப் பிரிந்து வாடும் சூழல் ரொம்ப கொடுமையானது. தாய்ப்பால்கூட கொடுக்கமுடியாத சூழலில் இருக்காங்க. இதையெல்லாம் தாண்டி, ஒரு மருத்துவரா மனிதர் களைக் காக்கும் கடமை எங்களுக்கு இருக்கு.''

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ப்ளீஸ்... வீட்டுல இருங்க!

அலி பாபா- துப்புரவுத் தொழிலாளர்

“எல்லாரும் வீட்டுக்குள்ள இருக்காங்கன்னு, நாங்களும் வீட்டுக்குள்ள இருந்தா ஊரு நிலைமை என்னாகும்... காலையில் ஆறு மணிக்கு க்ளவுஸ், மாஸ்க் போட்டுக்கிட்டு மதியம் 12 மணி வரைக்கும் தெருத்தெருவா போய் குப்பை சேகரிப்போம். முகத்துக்குப் போட்ட மாஸ்க்கை ரோட்ல வீசியிருப்பாங்க. அதை எடுக்கிறப்பதான் ரொம்ப பயமா இருக்கும். தயவுசெய்து குப்பைக் கூடையில போடுங்கய்யா. இதுல என்ன கொடுமைனா, நிறைய வீடுகளில் குடிக்க தண்ணி கேட்டாகூடக் கொடுக்க யோசிக்கிறாங்க. அதையெல்லாம் நினைச்சு வருத்தப்பட்டா காரியம் நடக்குமா?”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேவி - காவல் ஆய்வாளர்

‘‘தினம் தினம் பல்வேறு வகையான விழிப்புணர்வு விஷயங்களைக் கொடுத்துட்டு இருக்கோம். மக்களுக்கு இன்னும் நோயின் தீவிரம் புரியலை. தினம் ஒரு காரணம் காட்டி வெளியில் நடமாடுறாங்க. வேற வழியே இல்லாமதான் வித்தியாசமான தண்டனைகள் கொடுக்கிறது, வண்டிகளைப் பறிமுதல் செய்யறது மாதிரியான நடவடிக்கைகள்ல காவல்துறையினர் ஈடுபடுறாங்க.

ப்ளீஸ்... வீட்டுல இருங்க!

ஊரடங்கு அறிவிச்ச அன்னிக்குதான் என் குழந்தைகளைப் பார்த்தது. அவங்க முகத்தைப் பார்த்து இன்னியோட 15 நாளுக்கு மேல ஆகுது. ஒரு நாளைக்கு ரெண்டு முறை போன் பேசிப்பேன்... அவ்வளவுதான். காவல்துறையில இருந்தாலும் நானும் ஓர் அம்மாதான். நாட்டுக் காகவும் மக்களுக்காகவும்தான் எங்க வீட்டை விட்டுட்டு வேலை பார்க்கிறோம்.”

ஸ்ரீ தேவி - தன்னார்வலர்

``சென்னை மாநகராட்சியின் ஆதரவற்றவர் களை மீட்கும் குழுவில் இணைந்திருக்கிறேன். கடந்த 14 நாள்களாக, 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களை கொரோனா சிறப்பு முகாம் விடுதிகளில் தங்கவெச்சிருக்கேன். அவங்களை எல்லாம் தொட்டுத் தூக்குறதுனால கையை கவனமா கழுவறேன். விழிப்புணர்வு இல்லாதவங்களுக்கு கொரோனா பற்றி விளக்கம் கொடுக்கறேன்.''

ப்ளீஸ்... வீட்டுல இருங்க!

கொடியழகு - விவசாயி, காய்கறி விற்பனையாளர்

``எங்க தோட்டத்தில் கத்திரி, வெண்டை, தக்காளின்னு நாட்டுக்காய்கள் விதைச் சுருக்கோம். அடிப்படைப் பொருள்களை விற்க அரசு அனுமதிச்சதால், தினமும் கடையைத் திறந்திடுவோம். காய்கறியைக்கூட எடை போட்டு, ஜனங்க பையிலதான் போடுறேன். யாரையும் காய்கறியைத் தொட விடுறதில்லை. காசைத் தொட்டு வாங்குறதுனால கையை அடிக்கடி கழுவறேன். வியாபாரம் முன்ன மாதிரி இல்லை. நிறைய காய்கள் வீணாகத்தான் போகுது. அதையெல்லாம் மாட்டுக்குத்தான் போடுறோம். எல்லாம் சீக்கிரம் சரியாகணும்.''

இவர்கள் அனைவரும் மக்களான நம்மிடம் வைக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான்... அது ‘ப்ளீஸ் வீட்டுல இருங்க...’