Published:Updated:

தேவதாசிகளுக்கு துரோகம் செய்தவரா டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி?

தேவிகா
பிரீமியம் ஸ்டோரி
தேவிகா

நான் அனைவரிடமும் கேட்டுக் கொள்வது, நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படிப்பதுடன், உங்களுக்குத் தெரிந்த மாணவிகளையும் இதைப் படிக்க வையுங்கள்

தேவதாசிகளுக்கு துரோகம் செய்தவரா டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி?

நான் அனைவரிடமும் கேட்டுக் கொள்வது, நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படிப்பதுடன், உங்களுக்குத் தெரிந்த மாணவிகளையும் இதைப் படிக்க வையுங்கள்

Published:Updated:
தேவிகா
பிரீமியம் ஸ்டோரி
தேவிகா

புதுக்கோட்டையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, பெண்கள் கல்வி கற்பது மிகவும் சவாலாக இருந்த காலகட்டத்தில் வாழ்ந்தபோதும் பல தடைகளைத் தாண்டி மருத்துவர் ஆக வேண்டும் என்ற தன் கனவை எட்டிப் பிடித்தவர் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி. தேவதாசி முறையை ஒழிப்ப தற்கு உறுதுணையாக இருந்து சமூக சீர்திருத்தங்களிலும் முன் நின்றவர். அவரது வாழ்க்கை வரலாறு குறித்து, ‘Muthulakshmi Reddy- A Trailblazer In Medicine And Women’s Rights’ என்ற ஆங் கிலப் புத்தகத்தை எழுதிய கலாசார செயற்பாட்டாளர் வி.ஆர்.தேவிகா விடம் பேசினோம். தன் மீது வைக்கப் பட்ட விமர்சனங்களைக் கடந்து, ஆளுமையாக எழுந்து, குறிப்பாக பெண்களுக்கு தன்னம்பிக்கைச் சுட ராக மிளிர்ந்துகொண்டிருக்கும் முத்து லெட்சுமி ரெட்டியின் வாழ்க்கைப் பக்கங்களை நமக்குப் புரட்டிக் காட்டினார் தேவிகா.

``முத்துலெட்சுமி ரெட்டியின் பெயர் தமிழகத்தின் வரலாற்றில் மிக முக்கியமான பெயர். சமூக சீர்திருத்தத் தில் அவருடைய பங்கு அளவிட முடியாதது. ஆனால் காலப்போக்கில் இடையில் வந்த சிலரால் முத்து லெட்சுமி ரெட்டியின் சமூக சீர்திருத்த செயல்கள் தவறான கண்ணோட்டத் தில் பார்க்கப்பட்டன. 1980களில் அம்ரித் நிவாசன் என்ற பெண்மணி எழுதிய கட்டுரையில், தேவதாசி முறையை ஒழித்தது தவறு என்று எழுதினார். அந்தக் காலகட்டத்தில் முத்துலெட்சுமி ரெட்டிக்கு எதிரான இத்தகைய கருத்தை அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய வெளி நாடுகளைச் சேர்ந்த ஆய்வறிஞர்கள் உட்பட பலரும் ஆதரித்தனர்.

தேவதாசிகளுக்கு துரோகம் செய்தவரா டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி?

முத்துலெட்சுமி ரெட்டிக்கு எதிரான இந்த கருத்துகளை நானும் நம்பிக்கொண்டு தான் இருந்தேன். 1985-ல் `மெட்ராஸ் கிராஃப்ட் ஆர்கனைசேஷன்' (Madras craft organization) என்ற அமைப்பில் உறுப்பினராகி அதன் மூலம் அவ்வை இல்லத்தில் பணியாற்றியபோது, முத்துலெட்சுமி ரெட்டி பற்றி நிறைய தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்தது. 2000-ம் ஆண்டு முத்துலெட்சுமி ரெட்டி குறித்த டாக்குமென்ட்ரி பதிவுக்கு ஸ்கிரிப்ட் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக முத்துலெட்சுமி ரெட்டி சம்பந்தமான பல நபர்களை சந்தித்து நேர்காணல் செய்தேன். சமூகச் செயற்பாட்டாளர் சரோஜினி வரதப்பன், மருத்துவர் சாந்தா, முத்துலெட்சுமி ரெட்டியின் மகன் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி எனப் பலரிடம் விவரங்கள் சேகரித்தேன். முத்துலெட்சுமி ரெட்டி எழுதிய கட்டு ரைகளைப் படித்தேன். அப்போது தான் எனக்கு முத்துலெட்சுமி ரெட்டி பற்றி முழுமையாகத் தெரிந்தது. அவருடைய வாழ்க்கைப் பயணம், அவர் சந்தித்த கஷ்டங்கள் என அனைத்தும் புரிந்தது’’ என்றவர், ஓர் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

``சென்னையில் நடந்த ஒரு நடன நிகழ்வில் கலைத்துறையைச் சேர்ந்த ஒரு பிரபலமான கலைஞரின் பேச்சை கேட்க வேண்டி வந்தது. அவர், `முத்து லெட்சுமி ரெட்டி தானே ஒரு தேவதாசி. ஆனால், ஒரு சட்ட திருத்தத்தால் இந்த பெண்களின் வாழ்வை சட்டத்திற்கு புறம்பானதாக மாற்றிவிட்டார்’ என்று பேசினார். இந்த பேச்சு எனக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. முத்து லெட்சுமி ரெட்டி எதற்காகப் பாடு பட்டார், எதனால் தேவதாசி முறையை ஒழித்தார் என எதுவுமே தெரியாமல் பேசுகின்றனரே எனத் தோன்றியது.

முத்துலெட்சுமி ரெட்டியின் வாழ்க்கைக் குறித்து இந்த உலகுக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் பல மேடை களில் பேசினேன், கட்டுரைகள் எழுதி னேன். புற்றுநோய் மருத்துவர் சாந்தா என்னிடம், `அம்மா பற்றி இன்னொரு புத்தகம் எழுத வேண்டும். நீங்கள் அதை எழுதுங்கள்' என்றார். 2020-ம் ஆண்டு சாந்தா இறந்துவிட்டார். ஆனால் அவர் என்னிடம் சொன்னதை செய்து முடிக்க, கோவிட் 19 பெருந்தொற்று ஊரடங்கில் வேலைகளைப் பார்த்தேன். முத்து லெட்சுமி ரெட்டியின் குடும்பத்தினர், உறவினர்கள், அவரைப் பற்றி தெரிந்த வர்கள் எனப் பலரிடம் பேசினேன்.முத்துலெட்சுமி ரெட்டியின் வாழ்க்கை விவரங்கள் குறித்து ஆய்வு மேற் கொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் இந்தப் புத்தகத்தை விரைவாக எழுதி முடிக்க முடிந்தது’’ - தன் வாழ் வுக்கு அர்த்தமான ஒரு பெரும் செயலை நிறைவேற்றிய திருப்தி தேவிகாவிடம்.

தேவதாசிகளுக்கு துரோகம் செய்தவரா டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி?

``புத்தகத்தை எழுதி முடித்ததும் பதிப்பிக்க எந்தப் பதிப்பகங்களும் ஆர்வம் காட்டவில்லை. நியோகி புக்ஸ் (Niyogi books) என்ற நிறுவனம் முன்வந்து, `இது எங்களுக்கு மிகவும் முக்கியமான புத்தகம்’ எனக் கூறியதோடு, ’நவீன இந்தியாவின் முன்னோடிகள் (Pioneers of modern India)’ என்ற புத்தகத் தொகுப்பு வரிசையில் இந்தப் புத்தகத்தை வெளி யிட்டனர். புத்தக வெளியீட்டு விழாவை ருக்மிணி தேவி நாட்டியக்ஷேத்ரா ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழாவோடு இணைத்து நடத்தினோம்.

நான் அனைவரிடமும் கேட்டுக் கொள்வது, நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படிப்பதுடன், உங்களுக்குத் தெரிந்த மாணவிகளையும் இதைப் படிக்க வையுங்கள். அவர்களுக்கு இது கொடுக் கக்கூடிய தெளிவும், உத்வேகமும் முக்கிய மானது. முத்துலெட்சுமி ரெட்டியை பற்றி அறிந்துகொள்ளும் இளம் பெண் களுக்கு, நாமும் எதையாவது சாதிக்க வேண்டும்; வழக்கமான வாழ்வை வாழா மல் வித்தியாசமாக வாழ வேண்டும் என்ற தன்னம் பிக்கையை அவர் மனதில் நிரப்புவார்” என்கிறார் தேவிகா.

தலைமுறைகள் தாண்டியும் பெண் களுக்கு வழிகாட்ட நின்று ஒளிரும் சுடர்... முத்துலெட்சுமி ரெட்டி.