ரெம்யா பரமேஸ்வர் ஐயர், 2019-ம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருதினைப் குடியரசு தலைவரிடமிருந்து பெற்றவர். அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்தியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணிபுரிகிறார். கேரள மாநிலம் திருச் சூரில் பிறந்த இவர், ஏற்கெனவே சி.வி.ராமன் அறிவியல் ஆசிரியர் விருது, கேந்திரிய வித்யாலயா தேசிய ஊக்குவிப்பு விருது எனப் பல விருது களைப் பெற்றவர்.
``நான் பயோ கெமிக்கல் ஆராய்ச்சியில் எம்.எஸ் படித்த பிறகு, தனியார் பள்ளி ஒன்றில் பயோ டெக்னாலஜி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். பாடப் புத்தகத்திலிருந்து பயிற்றுவிப்பதைவிட நேரடி விளக்க பயிற்சி மிகுந்த பலனளிக்கும். அதனால் மாணவர்களை ஐ.ஐ.டி ஆராய்ச்சிக்கூடங்கள், மூலிகைப் பண்ணை, தாவரவியல் பூங்கா மற்றும் பல்வேறு நிலங்களுக்கு அழைத்துச்சென்று அடிப்படை விஷயங்களைப் புரியவைப்பது என் வழக்கம். பின்னர், கேந்திரிய வித்யாலயாவில் பணியில் சேர்ந்தேன். வீட்டில் இரு குழந்தைகளை கவனித்து வளர்க்கவேண்டிய பொறுப்புடன் தினமும் 70 கிலோமீட்டர் பயணம் செய்து பள்ளிக்குப்போக நேர்ந்தது. கலந்துரையாடி ஆர்வத்தையும் சிந்திக்கும் திறனையும் தூண்டி சந்தேகங் களை நிவர்த்தி செய்தால் பாடங்கள் பசுமரத்தாணி போல மனத்தில் பதியும். இதுவே நான் பயிற்றுவிக்கும் முறை.
மாணவர்களுக்கு ஆர்வத்தையும் சிந்திக்கும் திறனையும் தூண்டுங்கள்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
மாணவர்கள், தாங்கள் கற்றதை கிராமப்புறப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கலந்துரையாடல் மூலம் சொல்லிக்கொடுக்க பயிற்சி அளித்தேன். இதனால் தாங்கள் அறிந்த விவரங்களை நன்றாக மனத்தில் இருத்தி, புரிந்துகொள்ள முடிகிறது. இங்கு பயின்ற மாணவர்களில் பலர் தேசிய, சர்வதேச அளவில் நடந்த அறிவியல் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ளனர். பலர் வெளிநாடுகளில் மேற்படிப்பு படிக்கின்றனர். ஆசிரியர், நம் நண்பர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுடன் நல்லிணக்கத்துடன் பழக வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுக்கிறார் ரெம்யா பரமேஸ்வர் ஐயர்.