Published:Updated:

அமேசான் வேலையை விட்டேன்... ஆசைப்பட்ட கலையில் சாதிச்சேன்! - க்ரோஷே கலையில் அசத்தும் ஐரின்

ஐரின்
பிரீமியம் ஸ்டோரி
ஐரின்

சொர்ண மீனா ராமநாதன் - படம்: ரமேஷ் பாலாஜி

அமேசான் வேலையை விட்டேன்... ஆசைப்பட்ட கலையில் சாதிச்சேன்! - க்ரோஷே கலையில் அசத்தும் ஐரின்

சொர்ண மீனா ராமநாதன் - படம்: ரமேஷ் பாலாஜி

Published:Updated:
ஐரின்
பிரீமியம் ஸ்டோரி
ஐரின்

வேலைக்குப் போகாதவர்களும் அதிகம் படிக்காதவர்களும் மட்டுமே கைவினைக் கலைகளில் ஈடுபாடு காட்டியது அந்தக் காலம். இன்று கைவினைக் கலை என்பது ஒரு பிசினஸ் மாடல். மெத்தப் படித்த பலரும் கைவினைக் கலைகளில் ஈடுபடுவதோடு, பயிற்சி வகுப்புகள், பிசினஸ் என அதை அடுத்தகட்டம் நோக்கி நகர்த்த ஆரம்பித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த ஐரின் அவர்களில் ஒருவர். பலருக்கும் தெரியாத க்ரோஷே கலையில் நிபுணத்துவம் பெற்ற ஐரின், சென்னையில் அதற்கென பிரத்யேக பயிற்சி மையம் வைத்திருக்கிறார்.

“எம்பிஏ முடிச்சிட்டு, அமேசான்ல வேலை பார்த்திட்டி ருந்தேன். எதிர்பாராத காரணங்களுக்காக வேலையை விட்டேன். வேலையை விட்டதுக்காக பலரும் காயப்படுத்தி னாங்க. அப்பதான் நான் ரொம்ப நாளா கத்துக்கணும்னு ஆசைப்பட்ட க்ரோஷேவை எனக்கு சொல்லிக்கொடுத் தாங்க என் மாமியார். ரொம்ப ஆர்வமா கத்துக்கிட்டேன். இப்போ எனக்கு ஸ்வெட்டர், குல்லா, மஃப்ளர், ஓவர்கோட், வீட்டை அழகுப்படுத்தும் பொருள்கள், பொம்மைகள்னு நிறைய செய்யத் தெரியும்’’ என்கிறார் ஐரின்.

அமேசான் வேலையை விட்டேன்... ஆசைப்பட்ட கலையில் சாதிச்சேன்! - க்ரோஷே கலையில் அசத்தும் ஐரின்

“கடந்த ஏழு வருஷங்களா நான் செய்யும் க்ரோஷே பொருள்களை விற்பனையும் செய்யறேன். 2017-ம் வருஷம், 14.9 கி.மீ. நீளத்துக்கு ஸ்கார்ஃப் செய்து கின்னஸ் பட்டியல்ல இடம்பிடிச்சேன். 2019-ம் வருஷத்துலேருந்து ‘ஆர்டி டெக்ஸ்சர் க்ரோஷே அகாடமி’ (Arty Texture Crochet Academy) என்ற பயிற்சி மையம் தொடங்கி, இந்தக் கலையை மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுக் கறேன்’’ என்பவருக்கு பல நாடுகளிலிருந்தும் மாணவர்கள் இருக்கிறார்கள்.

க்ரோஷே கற்றுக்கொண்டு 100 ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கலாம் என்கிற ஐரின், தன்னிடம் பயிற்சி எடுப்போருக்கு க்ரோஷே கலைக்குத் தேவையான பொருள்களை விற்க பிரத்யேக கடையும் வைத்திருக்கிறார்.

அமேசான் வேலையை விட்டேன்... ஆசைப்பட்ட கலையில் சாதிச்சேன்! - க்ரோஷே கலையில் அசத்தும் ஐரின்
அமேசான் வேலையை விட்டேன்... ஆசைப்பட்ட கலையில் சாதிச்சேன்! - க்ரோஷே கலையில் அசத்தும் ஐரின்

‘`க்ரோஷே வேலைப்பாடுன்னாலே உல்லன் நூல்ல மட்டும்தான் செய்ய முடியும்னு பலரும் நினைக்கிறாங்க. காட்டன், ஜூட், லினன்... இப்படிப் பல வகையான நூல்கள்ல க்ரோஷே வேலைப்பாடு செய்யலாம். இந்தக் கலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதுங்கிறது ஹைலைட். நான் கர்ப்பமா இருந்தபோதும் க்ரோஷே பண்ணியிருக்கேன். அந்த டைம்ல என் மன அமைதிக்கு இந்தக் கலை பெரிய அளவுல உதவியா இருந்தது. குழந்தைங்க இதைக் கத்துக்கிறது மூலமா அவங்க மனசு ஒருநிலைப்படுது, படிப்பில் கவனச்சிதறல் ஏற்படாம இருக்கு. முடக்குவாதத்தால பாதிக்கப்பட்டவங்களைக்கூட க்ரோஷே செய்யச் சொல்றாங்க டாக்டர்ஸ்... சுருக்கமா சொல்லணும்னா, க்ரோஷேங்கிறது யோகா மாதிரி...” புதுத் தகவலும் புது நம்பிக்கையும் தருகிறார் ஐரின்.