Published:Updated:

பொறுப்புகளுக்காக சுயத்தை இழக்காதீங்க!

ஷமீரா
பிரீமியம் ஸ்டோரி
News
ஷமீரா

‘ஹோம் பிளானர்’ ஷமீராவின் வெற்றிக்கதை

“ஜெயிக்கிறோம், சம்பாதிக்கிறோம், தோக்குறோம்... இது எல்லாத்தையும் தாண்டி, நாம இஷ்டப்பட்ட வேலையைச் செய்யுறோங் கிறது எவ்ளோ பெரிய பாக்கியம்?” - இயக்குநர் பாலு மகேந்திராவின் இந்த உணர்வுபூர்வமான வார்த்தைகள், எல்லோருக்கும் வாய்க்காத வரம். அதிலும், குடும்பத்தினருக்கான ஓட்டத் தில் தங்களின் சுயத்தைக் கரைத்துக்கொண்டு வாழப் பழகும் பெரும்பாலான பெண்களுக்கும், இந்தக் கொடுப்பினை கைகூடுவதில்லை.

“கனவுகளைத் தொலைக்கும் பெண்கள்ல நானும் ஒருத்தியா மாறிடுவேனோன்னு பயந்தேன். ஆனா, என் கடமைகளை விரைவா முடிச்சுட்டு, இலக்கை நோக்கி இன்னும் வேகமா ஓடினேன். இன்னிக்கு மாதம்தோறும் லட்சங்கள்ல வருமானம் பார்க்குறேன். சுய அடையாளத்துடன், பிடிச்ச துறையில வேலை செய்யுறதுல கிடைக்கும் சந்தோஷம் ரொம்பவே அலாதி யானது”

– அருவியாகக் கொட்டுகின்றன, ஷமீராவின் உற்சாக வார்த்தைகள்.

மும்பையில் ஷமீராவுடையது நடுத்தரக் குடும்பம். உடல்நிலை சரியில்லாமல் அப்பா வீட்டில் முடங்கவே, இல்லத்தரசியான அம்மாவும், மூன்று பிள்ளைகளில் மூத்த மகளான ஷமீராவும் வேலைக்குச் செல்லத் தொடங்கினர். பால்யத்திலேயே குடும்ப பாரத்தைச் சுமந்தவர், தொழில்முனைவோர் கனவையும் போராடி வசப்படுத்தியுள்ளார். பிரபல ‘ஹோம் பிளான’ரான ஷமீராவுக்கு, சென்னையில் இந்தத் துறையைப் பிரபலப் படுத்தியதிலும் முக்கியப் பங்கு உண்டு.

“பத்தாவதுல இருந்து காலேஜ் முடிக்குற வரைக்கும் சாயந்திரம், விடுமுறை தினங்கள்னு கிடைச்ச நேரமெல்லாம் வேலைக்கு ஓடினேன். ஒருவழியா குடும்பத்தோட பொருளாதாரச் சூழலை உயர்த்தியதுமே கல்யாணம். கணவரோடு சென்னையில் குடியேறினேன். ‘உன்னோட கனவை எப்போ சாத்தியப்படுத்தப்போறே?’னு ஒருநாள் என் கணவர் உரிமையுடன் கேட்ட கேள்வி, என்னைத் திடுக்கிட வெச்சது. ரெண்டு பேரும் கஷ்டப்பட்டு வேலை செஞ்சு, பொருளா தார ரீதியா ஓரளவுக்குப் பலப்படுத்திகிட்டோம். மக்களை மகிழ்விக்கும் நிகழ்வுகளை நடத்துற ‘ஈவென்ட் பிளான’ரா மாறும் முடிவுல, 2009-ல் வேலையில இருந்து விலகி பிசினஸ்ல இறங்கினேன்”

- தன்னை தொழில்முனைவோராக மாற்றி அழகுபார்த்த கணவரின் தொழில் பயணத்துக்கும் பக்கபலமாக இருக்கிறார் ஷமீரா.

பொறுப்புகளுக்காக
சுயத்தை இழக்காதீங்க!

“பத்து வருஷங்களுக்கு முன்னாடி இந்தத் துறை பெரிசா வளர்ச்சி யடையல. போட்டியாளர்களும் பெரிசா இல்ல. என்னோட நட்பு வட்டாரத்துல இருந்து வாடிக்கை யாளர்களைப் பிடிச்சு, பல்வேறு கொண்டாட்ட தருணங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தேன். பெரிசா வருமானம் கிடைக்கல. ஆனா, பிடிச்ச வேலையைச் செய்யுறோம்ங்கிற நிறைவே, என்னைத் தொடர்ந்து இயங்க வெச்சது. படிப்படியா இந்தத் துறை பிரபல மாகவே, என்னோட பிசினஸும் வளர்ந்தது.

நடுத்தர மக்களுக்கும் இதுபோன்ற ஈவென்ட்டுகள் சாத்தியமாகணும்னு ஆசைப் பட்டேன். அவங்கள்ல பலரும், ‘எங்க பட்ஜெட்டுக்கு ஏற்ப வீட்டுல இருந்தே கொண்டாட ஆசைப்படுறோம்’னு கேட்கவே தான், ‘பார்ட்டி டப்பா’ கிட்டுகளை அறிமுகப் படுத்தினேன். இதுல, டேபிள் விரிப்பு, கலர் காகிதங்கள், தோரணங்கள், மெழுகுவத்தி, கேக் அலங்காரப் பொருள்கள், பேப்பர் பிளேட், கப், பலூன், பொம்மைகள், மத்தாப்பூ கேண்டில் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இருக்கும். ஷாப்பிங் தேவைக்கு அலையாம, இந்தப் பொருள் களைக் கொண்டு நம்ம வீட்டுலயே அலங்காரம் செஞ்சு, கொண்டாட் டங்களைக் குதூகலப் படுத்தலாம். பிறந்தநாள், கல்யாண நாள், நிச்சய தார்த்தம், வளைகாப்பு உட்பட பல்வேறு சுப நிகழ்ச்சி களுக்கும், அலுவலகம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் தனித்தனி பார்ட்டி கிட்டுகளைக் கொடுக்கிறேன். தவிர, வெளி நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொடுக்கிறேன்.

கொரோனா சிக்கல் வந்தது லேருந்து, பலரும் வீட்டுலயே தான் பார்ட்டி நடத்த ஆசைப் படுறாங்க. அதனால, கடந்த ஒன்றரை வருஷத்துல மாநிலங்கள் கடந்தும் என்னோட பிசினஸ் வளர்ந் திருக்கு. இந்த பார்ட்டி டப்பாக்கள் மூலமா, நேரமும் செலவும் குறைவதுடன், நம்ம வீட்டு நிகழ்ச்சிகளை நாமே ஏற்பாடு செய்யுற திருப்தியும் கிடைக்கும். பிடிச்ச துறையில வேலை செய்யுங்க; போராடி யாவது இலக்குகளையும் வசப்படுத்திடுங்க”

- லட்சியங்களை மீட் டெடுத்த நம்பிக்கையுடன் புன்னகைக்கிறார் ஷமீரா!