Published:Updated:

நடைபாதை டு நீதிமன்றம்! - வழக்கறிஞர் விஜயலட்சுமியின் வெற்றிக் கதை

விஜயலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
விஜயலட்சுமி

#Motivation

நடைபாதை டு நீதிமன்றம்! - வழக்கறிஞர் விஜயலட்சுமியின் வெற்றிக் கதை

#Motivation

Published:Updated:
விஜயலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
விஜயலட்சுமி

ள்ளிக் காலத்திலேயே பிளாட்பாரத்தில் பூ வியாபரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றிய விஜயலட்சுமி, கனவுகளைத் துரத்தி எட்டிப்பிடித்து வழக்கறிஞர் ஆனவர். கிராம மக்களுக்கு இலவச சட்ட உதவி ஆலோசனைகளையும் வழங்கிவருகிறார். ஆட்டோ ஓட்டி இவரைப் படிக்க வைத்த அண்ணன், தானும் வழக்கறிஞராகி தங்கையிடமே ஜூனியராகப் பணியாற்றுகிறார். ஆனந்தக் கண்ணீருடன் பேசத் தொடங்கினார் விஜயலட்சுமி.

"பூர்வீகம் திருவள்ளூர். பெற்றோர் படிக்காதவங்க. சாப்பாட்டுக்கே சிரமப்படும் ஏழ்மையான குடும்பம். அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாததால, வீட்டு வாசலில் அம்மா பூ வியாபாரம் செய்தாங்க. ஸ்கூல் நேரம் போக காலையிலும் சாயந்திரமும் ரயில் நிலைய வாசல்லயும் பிளாட்பாரத்துலயும் நானும் பூ விற்பனை செஞ்சேன். சில வருஷங்கள் கழிச்சு, வீட்டிலேயே டிபன் கடை ஆரம்பிச்சோம். பிறகு, அந்த வேலைகளையும் கவனிச்சுகிட்டேன். அரசு உதவி பெறும் ஸ்கூல்லதான் படிச்சேன். அதுக்கே பொருளாதார ரீதியா நிறைய சவால்கள் இருந்துச்சு.

விஜயலட்சுமி
விஜயலட்சுமி

ஒரே சமூகம்தான். ஆனா, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரச் சூழல்னு அதுல ஒவ்வொருத்தருக்கும் நிறைய ஏற்றத்தாழ்வுகள். இதெல்லாம் சின்ன வயசுலேயே எனக்குள் ஆழமா பதிஞ்சுட்டதால, வழக்கறிஞராகி மக்களுக்கு நீதி கிடைக்க என்னாலான உதவிகளைச் செய்யணும்னு முடிவெடுத்தேன். அது அவ்வளவு எளிதில் நடந்துடலை. அடிப்படைத் தேவைகளுக்குக்கூட ஒவ்வொரு நாளும் போராட்டம்தான். லா காலேஜ் மதியம்தான். காலையில் டிபன் கடை வியாபாரத்தை முடிச்சுட்டுத்தான் காலேஜ் போவேன். பிறகு, மூணு வருஷங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் சீனியர் வக்கீல் ஒருவர்கிட்ட ஜூனியரா வேலை செஞ்சேன். பிறகு, திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துல எட்டு வருஷங்களா தனிப்பட்ட முறையில் வாதாடறேன்” என்பவர், சிவில் வழக்குகளில் ஏழை மக்கள் சிலருக்கு இலவசமாகவே வாதாடுகிறார்.

நடைபாதை டு நீதிமன்றம்! -
வழக்கறிஞர் விஜயலட்சுமியின் வெற்றிக் கதை

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞராக, சென்னைப் புழல் மத்திய சிறையிலுள்ள பெண் கைதிகளுக்கான உதவிகளைக் கேட்டறிந்து தீர்வுகாண உதவுகிறார். மாவட்டத்தில் பல்வேறு நீதிமன்றங்கள் மற்றும் கிராமங்களிலுள்ள சட்ட உதவி மையங்களுக்குச் சென்று மக்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்குகிறார். இவற்றில் குழந்தைத் திருமண தடுப்புப் பணிகளையும் அதிகம் செய்திருக்கிறார். இதற்காக, டெல்லியிலுள்ள தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவால், தமிழகத்தின் சிறந்த ஆணைக்குழு வழக்கறிஞராக (பேனல் லாயர்) கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டு விருதும் பெற்றுள்ளார்.

“பி.ஏ முடிச்ச அண்ணன் ஆதிகேசவன், ஆட்டோ ஓட்டித்தான் என்னைப் படிக்க வெச்சு, கல்யாணம் பண்ணிக் கொடுத்தார். அவர் இல்லாட்டி நான் வழக்கறிஞர் ஆகியிருக்கவே முடியாது. என்னைப் பார்த்து அவரும் வழக்கறிஞராக ஆசைப்பட்டார்.

ஆட்டோ தொழிலைக் கைவிடாம, 42 வயசுல பி.எல் முடிச்சார். இப்போ என்கிட்ட ஜூனியரா வேலை செய்றார். மாதமானா அவருக்கு நான் ஊக்க ஊதியம் கொடுக்கறது விவரிக்க முடியாத மகிழ்ச்சி" என்று நெகிழ்ச்சியாகக் கூறும் விஜயலட்சுமியை, கணவர் தயாளனும் அண்ணன் ஆதிகேசவனும் பெருமையுடன் பார்த்து பூரிக்கின்றனர்!