Published:Updated:

பஞ்சபூதங்கள் - காற்று - உயர உயர உற்சாகம்!

லட்சுமி மணிக்கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி மணிக்கண்ணன்

லட்சுமி மணிக்கண்ணன்

பஞ்சபூதங்கள் - காற்று - உயர உயர உற்சாகம்!

லட்சுமி மணிக்கண்ணன்

Published:Updated:
லட்சுமி மணிக்கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி மணிக்கண்ணன்

“சிறகு முளைத்த பறவை போல காற்றை ஊடுருவிப் பறக்க யாருக்குத்தான் ஆசை இல்லை! காற்றில் பறக்கும் சாகசக் கனவை நிஜமாக்குவதுதான் என் வேலையே. இதுவரை பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்களை `பாராகிளைடிங்' மூலமாகப் பறக்க வெச்சிருக்கேன். அவர்கள் பறப்பதைப் பார்க்கும்போது அந்த சந்தோஷம் நமக்கும் ஒட்டிக்கொள்ளும்” என்று புன்னகை பொங்கப் பேசுகிறார் லட்சுமி மணிக்கண்ணன். சென்னை மாமல்லபுரம் அருகே பாராகிளைடிங் சாகச விளையாட்டை பத்து ஆண்டுகளாகச் செய்து வரும் தொழிலதிபர்.

பஞ்சபூதங்கள் - காற்று - உயர உயர உற்சாகம்!

“பிறந்தது, படிச்சது எல்லாம் சென்னையில்தான். திருமணம் முடிந்து 17 வருஷமாகிறது. எங்க ரெண்டு பேருக்குமே சாகசங்கள் ரொம்பப் பிடிக்கும். அதுவும் பாராகிளைடிங்கில் பறக்குறதுன்னா கொள்ளை இஷ்டம். ஏன் அதையே பிசினஸாக பண்ணக்கூடாதுன்னு யோசித்தோம். ஆரம்பத்தில் விளையாட்டுத்தனமா யோசிக்கிறோமோன்னுதான் தோணுச்சு. தமிழ்நாட்டில் இதுபோன்ற சாகச பொழுதுபோக்குகள் ரொம்ப குறைவு. அதனால், பாராகிளைடிங்கை பிசினஸாக தொடங்கினால் சக்சஸ் பண்ண முடியும்னு நம்பிக்கை வந்தவுடன் களத்தில் இறங்கினோம்.

பாராகிளைடிங் செய்வதற்கு முறையான பயிற்சி தேவை. அதனால் என் கணவர் ஏரோமெட்ரிக் பைலட் கோர்ஸ் முடிச்சார். சில லட்சங்கள் முதலீட்டில் பிசினஸைத் தொடங்கினோம். பாராகிளைடிங் பற்றி மக்களுக்கு அவ்வளவாகத் தெரியாத நேரம் அது. ரிஸ்க் என்று நினைத்தும் பயந்தாங்க. பிறகு, வெளிமாநிலங்களில் மட்டுமே கிடைத்து வந்த த்ரில் அனுபவத்தை இப்போது சென்னையிலேயே பெற முடியும்னு தெரிஞ்சதும் கல்லூரி மாணவிகள், செலிபிரிட்டின்னு நிறைய பேர் தேடி வர ஆரம்பிச்சாங்க. அவங்க கொடுத்த வாய்வழி விளம்பரம் மூலமாகவே எங்கள் பிசினஸ் வளர ஆரம்பிச்சது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாராகிளைடிங் பண்ண விரும்பும் எல்லாருக்கும் முறையா பயிற்சி கொடுத்து, தனியாகப் பறக்கும் வாய்ப்பை உருவாக்குவது என்பது எளிதில் சாத்தியமில்லாதது. நிறைய செலவும் ஆகும் என்பதால், பயிற்சி பெற விரும்புபவர்களைக் காட்டிலும், ஒருமுறை பறந்து என்ஜாய் பண்ணினால் போதும்னு நினைக்கிறவர்களை எங்க வாடிக்கையாளர்களாக ஈர்க்க முடிவு பண்ணோம். பறக்க விரும்புபவர்களுக்கான கிளைடரில் என் கணவர் பைலட்டாக இருப்பார். நான் பயணிக்க விரும்புபவர்களின் எடையை சோதிப்பது, அவசியமான விதிமுறைகளை விளக்குவது போன்ற விஷயங்களைப் பார்த்துப்பேன். அப்பப்போ நானும் பறப்பேன்.

லட்சுமி மணிக்கண்ணன்
லட்சுமி மணிக்கண்ணன்

40 - 80 கிலோ எடைக்குள் இருக்கும் யார் வேண்டுமானாலும் நிலத்தில் இருந்து 500 அடி உயரத்தில் பறக்கும் அனுபவத்தைப் பெற முடியும். இப்போ மாதம் 50 கஸ்டமர்கள் வரை பாராகிளைடிங் பண்றாங்க. ஒரு கஸ்டமருக்கு 2,500 ரூபாய் கட்டணம். விளையாட்டுக்காக விளையாட்டாக ஆரம்பிச்ச சாகச பிசினஸ் இப்போ எங்களுடைய அடையாளமாக மாறிடுச்சு. வாயு பகவானுக்கு நன்றி'' என்கிற லட்சுமி, தனித்துவமாக யோசித்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு மற்றுமொரு உதாரணமாகத் திகழ்கிறார்!