Published:Updated:

பஞ்சபூதங்கள் - வானம் - பறந்து செல்ல வா!

காவ்யா
பிரீமியம் ஸ்டோரி
காவ்யா

- விமானி காவ்யா

பஞ்சபூதங்கள் - வானம் - பறந்து செல்ல வா!

- விமானி காவ்யா

Published:Updated:
காவ்யா
பிரீமியம் ஸ்டோரி
காவ்யா

பள்ளியில் படிக்கும் காலத்தில் மதுரை பழங்காநத்தத்திலுள்ள குறுகலான தெருக்களில் சைக்கிள் ஓட்டவே பயந்த காவ்யா, இன்று வானத்தில் 450 மணி நேரத்தைக் கடந்து பறந்து காவியம் படைத்துக்கொண்டிருக்கிறார்!

கற்கும் கல்வி முதல் பார்க்கும் வேலை வரை இதைத்தான் பெண்கள் செய்ய வேண்டும் என்று சமூகம் உருவாக்கி வைத்துள்ள பிம்பத்தை உடைத்தவர்களில் காவ்யாவும் ஒருவர். அதிலும் தென் மாவட்டத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து சாதனையாளராக உருவாவது சாதாரணமான விஷயமல்ல. தேர்வு செய்த துறையின் மீதான காதலும் விடாமுயற்சியும்தாம் அவரை இந்த ‘உயரத்துக்கு’க் கொண்டு வந்துள்ளது.

மதுரை நகர அரசுப் பேருந்து ஓட்டுநர் ரவிக்குமார்- கல்பனா தம்பதியின் மகளான காவ்யா மதுரை டி.வி.எஸ் பள்ளியில் படித்தவர். படிக்கின்ற காலத்திலேயே அடுத்த கட்டமாக மாறுபட்ட துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் சிவில் விமானப்பயிற்சியைத் தேர்வு செய்தார்.

பறக்கும் கனவு நிறைவேறி இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாக விமானத்தை இயக்கியவர், இப்போது விமானப் பயிற்சி அளிக்கும் பயிற்றுநராக பணியாற்றி வருகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“ஆரம்பத்தில் உறவினர்களும் நண்பர் களும் பொம்பளப் புள்ளைக்கு இந்தப் படிப்பு தேவையா என்றுதான் கேட்டார்கள். ஆனால், என் பெற்றோர் உனக்கு எது பிடிக்குமோ அதையே கற்றுக்கொள் என்று உற்சாகப்படுத்தினார்கள். பெங்களூரு ஜக்கூர் விமானப் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிபெற ஆரம்பத்தில் நிறைய செலவானது. என் லட்சியத்துக்காக அப்பா வருமானத்துக்கு மீறி கடன் வாங்கினார்'' என்று பேசத் தொடங்குகிற காவியாவுக்கு ஆறாம் வகுப்பு படிக்கும்போதே விமானம் ஓட்ட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதாம்!

காவ்யா
காவ்யா

``எதிர்காலத்தில் என்னவாக விரும்பு கிறாய் என்று ஆசிரியர்கள் கேட்டாலே `விமானியாக விரும்புகிறேன்' என்றுதான் சொல்வேன். 2013-ல் ப்ளஸ் டூ முடித்தவுடன் பெங்களூரு ஜக்கூர் விமானப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கு 200 மணி நேர பயிற்சிக்குப்பின் இரண்டு பைலட்டுகளில் ஒருவராக வானில் பறந்தேன். அதன்பின் சோலோவாக விமானத்தை இயக்கினேன். மேகத்துக்குள் தனியாக மிதந்துசென்ற அந்தத் தருணத்தை மறக்க முடியாது.

அதற்குப் பிறகு எனக்கு விமானி லைசென்ஸ் கிடைத்தது. தொடர்ந்து பயிற்சிபெற அரசு ஸ்காலர்ஷிப் வழங்கியது. அதன்பின் அங்கேயே விமானப் பயிற்சியாளராக இணைந்து மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன். இன்னும் பெரிய விமானங் களை இயக்கும் வகையில் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்பது அடுத்த ஆசை'' என்கிறவர், இதுவரை 450 மணி நேரம் வானில் பறந்திருக்கிறார்.

விமானப் பயிற்சி என்பது வசதியானவர்களுக்கு மட்டுமானது என்ற நிலை உள்ளதே... கிராமப்புற, பின்தங்கிய மாணவர்கள் கற்றுக் கொள்ள முடியாதா?

“ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் பறக்கப் பயில முடியும். கிராமப்புற மாணவர்கள், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அரசு ஸ்காலர்ஷிப் வழங்குகிறது. டிஃபென்ஸ் விமானி ஆவதற்குச் செலவு குறைவு. சிவில் விமானியாவதற்கு ஆரம்பத்தில் செலவாகும். ஸ்காலர்ஷிப் கிடைத்தால் பிரச்னை இருக்காது” என்று பறக்கத் துடிப்பவர்களுக்கு உற்சாக டிப்ஸ் தருகிறார் காவ்யா.