Published:Updated:

``கைத்தறி நெசவுங்கிறது வெறும் தொழில் இல்லை!

வர்ஷா குமார்
பிரீமியம் ஸ்டோரி
வர்ஷா குமார்

கைத்தறி நெசவாளர்கள்கிட்ட எங்க நோக்கத்தைச் சொன்னதும் நாங்க சொன்ன பாரம்பர்யமான நிறங்கள் இப்ப வழக்குலயே இல்லைன்னு சொன்னாங்க.

``கைத்தறி நெசவுங்கிறது வெறும் தொழில் இல்லை!

கைத்தறி நெசவாளர்கள்கிட்ட எங்க நோக்கத்தைச் சொன்னதும் நாங்க சொன்ன பாரம்பர்யமான நிறங்கள் இப்ப வழக்குலயே இல்லைன்னு சொன்னாங்க.

Published:Updated:
வர்ஷா குமார்
பிரீமியம் ஸ்டோரி
வர்ஷா குமார்

“கைத்தறி நெசவுங்குறது வெறும் தொழில் இல்ல... அது ஒரு கலை. இன்னிக்கு கைத்தறி நெசவாளர்கள் சிலர் விசைத்தறிக்கு மாறிட்டாங்க, சிலர் தொழிலைவிட்டே போயிட்டாங்க. இந்த நிலைமை இப்படியே போச்சுன்னா கைத்தறி நெசவுங்குற கலையே அழிஞ்சிடும். அது நம்ம சமூகத்துக்கு பேரிழப்பா இருக்கும்” என்கிறார் சென்னை யைச் சேர்ந்த வர்ஷா குமார்.

பொறியியல் மற்றும் வணிக மேலாண்மை பட்டதாரியான இவர், தன் கணவர் ஜெயக்குமாருடன் இணைந்து ‘துகில்’ என்கிற கைத்தறி ஆடை நிறுவனத்தைத் தொடங்கியிருக் கிறார். இதன் மூலம் பாரம்பர்ய நிறம் மற்றும் வடிவங் களில் கைத்தறிப் பட்டுப்புடவைகள், சில்க் காட்டன் புடவைகள் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கைத்தறி நெசவு என்கிற கலையைப் பாதுகாக்க தங்களால் இயன்ற பங்களிப்பாகவே இதை மேற்கொள்வதாகக் கூறுகிறார் வர்ஷா...

``கைத்தறி நெசவுங்கிறது வெறும் தொழில் இல்லை!

“கிட்டத்தட்ட 4500 ஆண்டுகளுக்கும் மேலா தொடர்ந் துட்டு வர்ற கைத்தறி நெசவுங்கிற பாரம்பர்யம் நாளடைவுல ஒரு கலையாகவும் மாறுச்சு. மிகச் சமீபத்துலதான் இயந்திரமயமாக்கலால கைத்தறி நெசவுத்தொழில் பெரும் நெருக்கடிக்கு ஆளாகிட்டு வருது. இதுக்கு நம்மளால முடிஞ்ச ஏதாவது பண்ணனும்னு தோணுச்சு. இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி கைத்தறி ஆடை களுக்கான சந்தையை உருவாக்கணும். பழைமையான பட்டுப்புடவைகளோட நிறம் மற்றும் டிசைன்களை மறு உருவாக்கம் செய்யணும்னு முடிவு பண்ணோம். இதன் மூலமா பாரம்பர்ய கலை வடிவத்தை அடுத்த தலைமுறை களுக்கு எடுத்துட்டுப்போறதோட, கைத்தறி நெசவாளர் களுக்கான வேலை வாய்ப்பையும் உருவாக்க முடியும்ங்கிற நம்பிக்கை வந்தது.

கைத்தறி நெசவை நம்பி இன்னும் பல சமூகங்கள் இருக்கு. நாங்க அடையுற வெற்றி, கைத்தறி நெசவுக்கு இன்னிக்கு இருக்கிற சந்தை மதிப்பைக் காட்டுறதா இருக்கும். கைத்தறி நெசவாளர்கள் பெருகறதோட, அந்தத் தொழில்நுட்பம் அழியாம பாதுகாக்கப்படும். இப்படிப் பல நோக்கங்களோடு தொடங்கப்பட்டதுதான் ‘துகில்’... '’ அழகான ஆரம்பம் சொல்கிறார் வர்ஷா.

‘`கைத்தறி நெசவாளர்கள்கிட்ட எங்க நோக்கத்தைச் சொன்னதும் நாங்க சொன்ன பாரம்பர்யமான நிறங்கள் இப்ப வழக்குலயே இல்லைன்னு சொன்னாங்க. என் கொள்ளுப்பாட்டியோட 70 ஆண்டு பழைமையான பட்டுப் புடவைகள் இருந்தது. அதோட நூலை எடுத்து அந்த நிறத்தை தயாரிச்சோம். அந்தப் புடவைகள்ல இருக்கிற கோயில் சிற்பங்களை அடிப்படையா கொண்ட டிசைன்களை வெச்சு பட்டுப்புடவை நெய்து தரச்சொன்னோம். காஞ்சிபுரம், பெரிய பாளையம், பொள்ளாச்சி ஆகிய ஊர்கள்ல எங்களுக்குன்னு கைத்தறிகள் வாங்கி, நெச வாளர்களை வெச்சு பட்டு, சில்க் காட்டன், கூரைநாடு புடவை களெல்லாம் தயார் பண்ணோம். ஒரு பொருளை பரவலா கொண்டு சேர்க்கணும்னா விலை ஓரளவு குறைவாக இருக்கிறதும் தேவை. அதனால குறைஞ்ச விலை புடவைகள்ல இருந்துதான் தொடங்கினோம்” என்கிறார் வர்ஷா.

தங்கள் நிறுவனத்தில் தயாராகும் புடவைகளை சமூக வலைதளங்கள் மூலம் சந்தைப்படுத்துவது எளிதாக இருப்பதாகச் சொல்லும் வர்ஷா, எதிர்காலத் திட்டமும் பகிர்கிறார்... “கைத்தறி நெசவு தொடர்பா ஓர் ஆய்வு நிறுவனம் தொடங்கணும். அதன் மூலம் பழைய தொழில்நுட்பத்தை மீட்டெடுக்கணும். கைத்தறி நெசவு கத்துக்க விரும்புறவங்களுக்கான பயிற்சிக்கூடத்தை அமைக்கணும்ங்கிற திட்டமும் இருக்கு” என்கிறார்.

``கைத்தறி நெசவுங்கிறது வெறும் தொழில் இல்லை!

கைத்தறி பட்டுப்புடவைகளைக் கண்டுபிடிப்பது எப்படி?

* கைத்தறியில நெய்த புடவையின் பார்டரில் சின்ன சின்ன ஓட்டைகள் இருக்கும்.

* டிசைன் அச்சில் வார்த்த மாதிரி ஒரே சீராக இருக்காது. ஏற்ற இறக்கத்தோடுதான் இருக்கும்.

* காஞ்சிபுரம் பட்டு கனமாக இருக்கும். அதுவே ஆரணி பட்டு இலகுவாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism