யார் இந்த சுஃபியா?

ஏர் இந்தியாவின் ஊழியராக இருந்த சுஃபியா ஒரு சிறந்த `அல்ட்ரா ரன்னர்'. அதாவது... வழக்கமான மாரத்தான் ஓட்ட தூரங்கள் 5 கி.மீ, 10 கி.மீ, 21.1 கி.மீ (அரை மாரத்தான்) மற்றும் 42 கி.மீ (முழு மாரத்தான்). இதையெல்லாம் தாண்டி 50 கி.மீ, 75 கி.மீ, 100 கி.மீ போன்ற அதிக தூரங்களை குறிப்பிட்ட நேரக் கெடுவில் அநாயாசமாக ஓடிக்கடப்பவர்களே அல்ட்ரா ரன்னர்!

அடிடாஸ் விளையாட்டுக் குழுமத்தால், ஓட்டம் மற்றும் ஃபிட்னெஸ் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த, ஒவ்வோர் ஆண்டும் 100 நாள்கள் ஓட்டம் (100 days of Running) என்றொரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். குறைந்தபட்சம் 2 கி.மீ முதல் அதிகபட்சம் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு ஓடலாம். நம் ஓட்டத்தை, அதற்கென இருக்கும் செயலி (மொபைல் ஆப்) மூலம் பதிவுசெய்ய வேண்டும். 100 நாட்கள் ஓட்ட முடிவில் நமக்கான சான்றிதழும் பதக்கமும் அடிடாஸ் குழுமத்தால் அனுப்பி வைக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு நடுவே, சுஃபியா வித்தியாசமான ஒன்றை முயற்சிக்க விரும்பினார். அதுதான் 100 நாட்களில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஓடியே கடப்பது!

நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறதே... இதை நடத்தி முடிப்பதற்கு உடல்நலம் மட்டுமல்ல, வலிமையான மனம், எது வரினும் தளராத பொறுமை, மிகச் சிறந்த உணவுப் பழக்கம் போன்றவையும் அவசியம். சாதாரண பருவ மாற்றத்துக்கே சளி, மூக்கடைப்பு, தொடங்கி உடல்வலி, ஜுரம் என்று நம்மில் பலரால் 50 அடிகூட நடக்க இயலாது. 4,000 சொச்சம் கிலோமீட்டரை ஓடியே கடக்க வேண்டும் எனில் வெயில், குளிர், மழை, உணவு ஒவ்வாமை எனப் பல சவால்களைச் சந்திக்க வேண்டுமே... சுஃபியா மனதளவிலும் உடலளவிலும் தன்னைத் தயார் செய்து கொண்டார்.

இந்திய ஒற்றுமை மற்றும் அமைதிக்கான செய்தியை மக்களின் இடையே பரப்பும் விதமாக, `Run for HOPE (Humanity, Oneness, Peace, Equality)' என்கிற தாரக மந்திரத்தை உருவாக்கிக்கொண்டார்.

ஏப்ரல் 4-ம் தேதி அன்று காஷ்மீரில் தொடங்கிய இவரது ஓட்டம் 11 மாநிலங்கள், 25 பெருநகரங்கள், 1000+ கிராமங்கள் தாண்டி - 4,085 கிலோமீட்டரை ஓடிக்கடந்து, 85-ம் நாள் - ஜூலை 21 அன்று கன்னியாகுமரியில் நிறைவடைந்தது. மூவர்ண தேசியக் கொடியைக் கைகளில் ஏந்தி, இந்தியப் பெருங்கடலின் அலைகள் கால்களைத் தழுவ, தன்னுடைய ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

இந்தச் சாதனைக்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் சுஃபியா இடம்பிடிக்கிறார்.

ஒவ்வோர் ஊரைக் கடக்கும்போதும், அங்கிருக்கும் லோக்கல் ரன்னர்கள் அவருடன் இணைந்து (10-20 கி.மீ வரை) ஓடி அவரை உற்சாகப்படுத்தினர். சுஃபியாவின் ஓட்டம் ஒவ்வொரு நாளும் லைவ் அப்டேட்டாக முகநூலில் ஒளிபரப்பப்பட்டது.

செயற்கரிய சாதனை செய்த இந்தியாவின் ஓட்ட மங்கை சுஃபியாவிடம் பேசினேன்.

இப்படி ஒரு சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?

முழு நேர விமானப் போக்குவரத்து ஊழியராக இருந்த நான், பணிச்சுமை மற்றும் அழுத்தத்தில் இருந்து விடுபட ஓட்டப்பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். அப்படியே மாரத்தான் போட்டிகளிலும் பங்கு பெற்றேன். 2018-ல் தங்க முக்கோணம் எனப்படும் டெல்லி - ஆக்ரா - ஜெய்ப்பூர் - டெல்லி... 720 கி.மீ தூரத்தை 16 நாள்களில் ஓடிக் கடந்து, `இந்தியன் புக் ஆஃப் ரெகார்டு'வில் இடம்பிடித்தேன். இப்போது ஓட்டம், உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. எனவே, ஓட்டத்தின் மூலமாக மக்களுக்குச் சொல்லப்படும் செய்தி, சரியான முறையில் சென்று சேரும் என்று புரிந்துகொண்டேன். அப்படித்தான் காஷ்மீர் டு கன்னியாகுமரி ஓட்ட எண்ணம் தோன்றியது. சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தியே இந்த KK-4K பயணத்தைத் தொடங்கினேன். இதன் தூரம் 3,600 கி.மீ எனினும், அதிக அளவு மக்களை சந்திக்க வேண்டும் என்கிற ஆவலில் பல சிறிய கிராமங்களையும் இணைத்து 4,000 கி.மீ வரும்படி என் பயண தூரத்தை மாற்றிக் கொண்டேன்.

இரவு பகல் என்று தொடர்ச்சியாக நேரம் காலம் பாராது ஓடி இருப்பீர்கள். இரவு ஓட்டத்தின்போது ஏதேனும் பிரச்னை இருந்ததா?

மக்கள் மற்றும் ஒவ்வோர் ஊரிலும் உள்ள ஓட்டக் குழுமங்கள் செய்த உதவி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. இந்த KK-4K ஓட்டம் செய்வதற்காக மனத்தையும் உடலையும் வலிமையாக்கப் பயிற்சிகள் எடுத்தேன். என் தாய்நாட்டில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி நான் மேற்கொண்ட பயணத்தின்போது எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. இதை மிகவும் பெருமையாகக் கூறுகிறேன்.

இந்த தொடர் ஓட்டத்தில் உணவு ஒவ்வாமையோ, உடல்நலக் கோளாறோ ஏற்பட்டதா?

நான் ஒரு ஃபுட்டி (சிரிக்கிறார்). நிறைய இடங்களுக்கு போய், அங்கு மட்டுமே கிடைக்கும் ஸ்பெஷல் உணவுகளை ருசிப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. KK-4K பயணத்தில், எல்லா மாநில பிரத்யேக உணவுகள் மற்றும் சாலையோர உணவகங்களின் மெனுக்களையும் ருசித்த படியேதான் கடந்து வந்தேன். ஆனாலும், அளவோடுதான் சாப்பிட்டேன். அதனால் பெரிதாக உணவு ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை.

இரண்டு இடங்களில் மட்டும் கடினமான இடர்ப்பாடு ஏற்பட்டது. ஸ்ரீநகரிலிருந்து கிளம்பி 150 கி.மீ வரையிலான ஒரு பாதை மிகவும் சவாலாக இருந்தது. அபாயகரமான மணல் சரிவு, ஒரு பக்கம் மட்டும் போக்குவரத்து மற்றும் மாசு போன்றவற்றுக்கு மத்தியில் ஓடுவதற்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. என் ஓட்ட வேகம் மிகவும் தடைப்பட்டது. மிக மெதுவாக ஓடியே அந்த இடத்தைக் கடக்க முடிந்தது. மனதளவில் சற்று தளர்ந்துதான் போனேன்.

இதன் பிறகு ஜலந்தர் என்ற இடத்தைக் கடக்கும்போது மிக அதிக மாசு காரணமாக, சரியாக மூச்சுவிட முடியாமல் மிகுந்த அவதிக்கு ஆளானேன். இனி ஓர் அடி கூட எடுத்து வைக்க இயலாது என்கிற நிலையில் அங்கிருந்த மருத்துவமனையில் அட்மிட் ஆனேன். அப்போதுதான் என் நுரையீரல் பாதிப்பு அடைந்து இருக்கிறது என அறிந்து கொண்டேன். இலக்கை எட்ட இயலாதோ எனக் கலக்கமடைந்தேன். அங்கே எனக்கு சிகிச்சை அளித்த டாகடர் பூஜா கபூர் மிகச் சிறந்த முறையில் என்னைக் கவனித்து, உடல்நிலையை சீர் செய்தார். அவரின் நம்பிக்கை அளிக்கும் பேச்சுதான் என்னை விரைவில் நலம்பெற வைத்தது. மறுநாளே ஓடுவதற்கு நான் தயாரானேன். எனினும் தேவைப்படலாம் என்று ட்ரிப்ஸுக்கான ஊசியைக் கையிலிருந்து அகற்றாமலே இரண்டு நாள்கள் ஓடினேன்.

இதன் பிறகு பெரிதாக எந்த ஒரு பிரச்னையும் எனக்குத் தோன்றவில்லை. எது வரினும் அதை எதிர்கொள்வதற்கான மனத் திடம் எனக்கு உண்டாகிவிட்டது!

இந்த சாதனைக்காக கின்னஸ் ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெறுகிறீர்கள். வாழ்த்துகள்!

உங்களின் அடுத்த இலக்கு என்ன?

மிக்க நன்றி. ஓட்ட தூரம், அதை அடைய எடுத்துக்கொண்ட நாள்கள் போன்ற விவரங்களை ஆவணப்படுத்தி, கின்னஸ் குழுவுக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் பெயர் வெளிவரும். என் அடுத்த ஓட்டம் பற்றிய திட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. விரைவில் அதை அறிவிப்பேன்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் பிரத்யேக சிறப்பு. எனினும், வளர்ந்துவரும் மத இன மொழி வேறுபாடுகள் அகன்று சகோதரத்துவம் ஓங்க என்னால் இயன்ற வகையில் ஏதேனும் செய்துகொண்டே இருப்பேன். என் வாழ்வின் முக்கிய நோக்கமாக நான் இதையே நினைக்கிறேன்!

ரன் பேபி ரன்!